முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பெருங்கோடணை முதல் - பெரும்பயறு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பெருங்கோடணை முதல் - பெரும்பயறு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பெருங்கோடணை | ஒரு முரசுவகை . |
| பெருங்கோநங்கை | பட்டத்தரசி . |
| பெருங்கோப்பெண்டு | பட்டத்தரசி . |
| பெருச்சாளி | எலிவகை . |
| பெருஞ்சவளம் | குந்தாயுதவகை . |
| பெருஞ்சாந்தி | கோயிற் பெரிய திருவிழா முடிவில் நடக்கும் நீர்முழுக்கு . |
| பெருஞ்சாய் | பேராற்றல் . |
| பெருஞ்சிறப்பு | பெரிய மரியாதை ; உயர்ந்த கொண்டாட்டச் சூழல் . |
| பெருஞ்சீரகம் | ஒரு செடிவகை . |
| பெருஞ்சுட்டு | பெரும்புகழ் . |
| பெருஞ்செய் | மேம்பாடுள்ள செயல் . |
| பெருஞ்செய்யாளன் | பெரிய வீரச் செயலுள்ளவன் . |
| பெருஞ்சொல் | பலரறிசொல் . |
| பெருஞ்சோற்றுநிலை | போர் மேற்கொண்ட அரசன் படையாளர்க்கு உண்டியளித்து முகமன் செய்தலைக் கூறும் புறத்துறை . |
| பெருஞ்சோற்றுவஞ்சி | போர் மேற்கொண்ட அரசன் படையாளர்க்கு உண்டியளித்து முகமன் செய்தலைக் கூறும் புறத்துறை . |
| பெருஞ்சோறு | அரசன் படைத்தலைவர்களுக்கு அளிக்கும் பேருணவு ; பரணிநாள் . |
| பெருத்தல் | அதிகப்படல் ; பருமையாதல் ; மிகுதல் . |
| பெருந்தகவு | பெருமை ; பெருந்தன்மை . |
| பெருந்தகளி | பல முகங்களை உடைய விளக்கு . |
| பெருந்தகை | மிக்க பெருமையுடையவர் ; காண்க : பெருந்தன்மை ; மிக்க அழகு . |
| பெருந்தன்மை | மேம்பாடு ; அகந்தை . |
| பெருந்தனம் | கணிகையருள் ஒரு பிரிவினர் ; சோழரது அரசாங்க உத்தியோகங்களில் ஒன்று . |
| பெருந்தாதை | காண்க : பெரியப்பன் . |
| பெருந்தாய் | காண்க : பெரிய தாய் . |
| பெருந்தானம் | நெஞ்சு , மிடறு , நாக்கு , மூக்கு , அண்ணம் , உதடு , பல் , தலை ஆகிய ஒலி எழும் எட்டு உறுப்புகள் . |
| பெருந்திசை | வடக்கு முதலிய முதன்மைத் திசை ; நீண்ட நிலப்பரப்புள்ள திக்கு . |
| பெருந்திணை | பொருந்தாக் காமம் , மனம் ஒவ்வாத காதல் . |
| பெருந்திருவமிர்து | கடவுட்குப் படைக்கும் பெரிய நிவேதனம் . |
| பெருந்திருவி | பெருஞ்செல்வமுள்ளவள் . |
| பெருந்தில்லை | ஒரு மரவகை . |
| பெருந்துத்தி | துத்திச்செடிவகை . |
| பெருந்துருத்தி | நீர்வீசுங் கருவிவகை . |
| பெருந்துறை | பெரிய துறைமுகம் ; திருப்பெருந்துறை என்னும் ஊர் . |
| பெருந்தூறு | பெரும்புதர் . |
| பெருந்தெரு | நகரின் தலைமை வீதி . |
| பெருந்தேவபாணி | இசைப்பாவகையுள் ஒன்று ; ஓர் இலக்கியம் . |
| பெருந்தேவி | காண்க : பெருங்கோப்பெண்டு . |
| பெருந்தேன் | தேனீக்கள் கூட்டுகின்ற தேன் ; பெரிய தேனீவகை . |
| பெருநகரத்தார் | வணிகர் . |
| பெருநகை | பெருஞ்சிரிப்பு ; பேரிகழ்ச்சி . |
| பெருநடை | உயர்ந்த நடை ; விரைந்த செலவு ; புறக்கூத்துக்குரிய ஆடல்களுள் ஒன்று ; உயர்ந்த ஒழுக்கம் . |
| பெருநம்பி | இளவரசருக்குரிய பட்டப்பெயர் ; மந்திரியின் பட்டம் . |
| பெருநயப்புரைத்தல் | பெருவிருப்பைக் கூறுதல் . |
| பெருநறளை | நீண்ட கொடிவகை . |
| பெருநறுவிலி | ஒரு மரவகை . |
| பெருநாரை | நாரைவகை ; தலைச்சங்கத்து வழங்கிய இசைநூலுள் ஒன்று . |
| பெருநாள் | திருநாள் ; இரேவதிநாள் ; முகமதியப் பண்டிகை ; நெடுங்காலம் . |
| பெருநாளிருக்கை | அரசனது சிறப்பு நாளோலக்கம் . |
| பெருநான்கெல்லை | ஊர் அல்லது நிலத்தாக்கின் பேரெல்லை ; எல்லை . |
| பெருநிலம் | பூமி ; பரமபதம் . |
| பெருநிலை | ஒருசார்பு ; விடாப்பிடி ; சாட்சி . |
| பெருநிலைநிற்றல் | உதவிசெய்தல் ; சாட்சி சொல்லுதல் ; செய்துமுடித்தல் . |
| பெருநீர் | கடல் ; மழைக்காலத்துப் பாய்ச்சல் முறையின்றித் தாராளமாக ஓடும் நீர்ப்பெருக்கு . |
| பெருநெஞ்சு | செருக்கு ; ஆண்மை . |
| பெருநெறி | வீட்டுநெறி ; பெருவழி . |
| பெருப்பம் | பருமன் . |
| பெருப்பித்தல் | பெரிதாக்குதல் ; புனைந்து கூறுதல் . |
| பெருப்பு | பெருக்கை . |
| பெரும்பஞ்சமூலம் | தழுதாழை , பாதிரி , பெருங்குமிழ் , வாகை , வில்வம் என்னும் ஐந்து மரங்களின் வேர்களைக்கொண்டு செய்த கூட்டு மருந்துவகை . |
| பெரும்படி | முருடு ; உத்தேசமதிப்பு ; பருமன் ; உயர்தரம் ; தாராளம் ; அகந்தை . |
| பெரும்படை | பெரிய சேனை ; இறந்த வீரனின் புகழை நடுகல்லிற் பொறிப்பதைக் குறிக்கும் புறத்துறை ; தெய்வமாகிய நடுகற்குப் பெருஞ்சிறப்புப் படைத்தலைக் கூறும் புறத்துறை . |
| பெரும்பணி | கிடைத்தற்கரியது . |
| பெரும்பதம் | வீடுபேறு . |
| பெரும்பதவி | வீடுபேறு . |
| பெரும்பதி | மருங்கில் ஊர்சூழ் பதி . |
| பெரும்பயறு | காராமணி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 804 | 805 | 806 | 807 | 808 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெருங்கோடணை முதல் - பெரும்பயறு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பெரிய, ஒன்று, காண்க, புறத்துறை, பெருந்தன்மை, கூறும், அரசன், உயர்ந்த, மரவகை, நீண்ட, கூறுதல், வீடுபேறு, பருமன், சாட்சி, பெருங்கோப்பெண்டு, என்னும், மிக்க, உண்டியளித்து, படையாளர்க்கு, மேற்கொண்ட, முகமன், செய்தலைக், போர், பட்டத்தரசி, அகந்தை

