முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பெருவனம் முதல் - பேச்சுத்தடுமாறுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பெருவனம் முதல் - பேச்சுத்தடுமாறுதல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
பெருவனம் | கடல் . |
பெருவாகை | ஒரு மரவகை ; வேலிப்பருத்தி . |
பெருவாடை | பெருவளி , சண்டமாருதம் . |
பெருவாய்மலர் | காண்க : இருவாட்சி . |
பெருவாயன் | கழுதை ; அலப்புபவன் . |
பெருவாயில் | கோபுரம் ; தோரணவாயில் . |
பெருவார்த்தை | பெருமையுடைய உரை . |
பெருவாரல்வலை | மீன்பிடிக்கும் பெரிய வலைவகை . |
பெருவாரி | பெருவெள்ளம் ; மிகுதி ; கொள்ளை நோய் ; பரவல்நோய் . |
பெருவாழ்வு | நிரம்பிய பேறு ; பேரின்பம் . |
பெருவியாதி | குட்டநோய் . |
பெருவிரல் | கட்டைவிரல் ; நெல் எட்டுக் கொண்ட நீட்டலளவைவகை . |
பெருவிருந்து | ஊர்விருந்து . |
பெருவிலை | மிக்க விலை . |
பெருவிலையன் | மிக்க விலைபெறுவது . |
பெருவிறல் | மிகுவலி ; காண்க : பெருவிறலாளி ; முருகக்கடவுள் . |
பெருவிறலாளி | மிக்க வலிமையுடையவன் . |
பெருவுடையார் | எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டுள்ள இறைவன் ; தஞ்சைக் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் . |
பெருவெழுத்து | நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தில் சிவனைக் குறிக்கும் 'சி' என்னும் எழுத்து . |
பெருவெள்ளை | ஒரு நெல்வகை . |
பெருவெளி | விரிந்த வெளியிடம் ; வானவெளி ; வெட்டவெளி . |
பெலத்தல் | காண்க : பலத்தல் . |
பெலம் | காண்க : பலம் . |
பெலவந்தம் | காண்க : பலவந்தம் . |
பெற்றத்துவசன் | ஏற்றுக்கொடியுடைய சிவன் . |
பெற்றபிள்ளை | சொந்த மகன்(ள்) . |
பெற்றம் | பெருமை ; காற்று ; எருது ; மாடு ; இடபராசி . |
பெற்றவர் | காண்க : பெற்றோர் . |
பெற்றவன் | தகப்பன் . |
பெற்றார் | காண்க : பெற்றோர் . |
பெற்றான் | தந்தை ; கணவன் . |
பெற்றி | இயல்பு ; தன்மை ; குணம் ; விதம் ; செயல்முறை ; பெருமை ; நிகழ்ச்சி ; பேறு ; நோன்பு . |
பெற்றிமை | பெருமை ; செய்யவேண்டும் முறை ; சாதி . |
பெற்று | செல்வாக்கு ; அடுக்கு ; பெருக்கம் ; எருது . |
பெற்றோர் | தாய்தந்தையர் . |
பெறுக்கல் | அரிசி . |
பெறுக்குதல் | பொறுக்குதல் . |
பெறுத்துதல் | அடைவித்தல் ; உண்ணுதல் . |
பெறுதல் | அடைதல் ; பிள்ளைபெறுதல் ; பிறப்பித்தல் ; அறிதல் ; விலைத் தகுதியுடையதாதல் . |
பெறுதி | இலாபம் ; அடையத்தகும் பொருள் ; காண்க : பெறுமதி . |
பெறுமதி | தகுதி ; தெம்பு ; ஆற்றல் ; உறுதி ; வெகுமதி . |
பெறுமானம் | மதிப்பு ; கடன்தீர்க்குந் தகுதி . |
பெறுவதுகொள்வார் | காண்க : பொதுமகள் . |
பெறுவதுகொள்வோர் | காண்க : பொதுமகள் . |
பென்னம்பெரிய | மிகப் பெரிய . |
பென்னை | யானை . |
பே | ஓர் உயிர்மெய்யெழுத்து (ப் + ஏ) ; நுரை ; அச்சம் ; மேகம் ; 'இல்லை' என்னும் பொருள் தரும் சொல் . |
பேகணித்தல் | மனங்கலங்குதல் ; நிறம் வேறுபடுதல் . |
பேகணிப்பு | துயரம் ; நிறம் வேறுபடுகை . |
பேகம் | தவளை ; மேகம் ; உயர்ந்த நிலையிலுள்ள முகமதியப் பெண் . |
பேகன் | கடையேழு வள்ளலுள் ஒருவன் ; ஆண் தவளை . |
பேகி | பெண்தவளை . |
பேச்சடைப்பு | பேசமுடியாமற் செய்யும் நோய் . |
பேச்சழிதல் | சொன்னசொல் தவறுதல் . |
பேச்சற்றவன் | பேசமாட்டாதவன் ; பேசாநோன்பு பூண்டவன் ; வாக்குறுதி இல்லாதவன் . |
பேச்சறுதி | ஒப்பந்தத்தில் முடிவான பேச்சு . |
பேச்சாட்டுத்துணை | பேச்சுக்குத் துணையானவன் . |
பேச்சாளி | பேச்சில் வல்லவன் ; சொல் உறுதியுள்ளவன் . |
பேச்சு | பேசுதல் ; சொல் ; மொழி ; புகழ் ; உரையாடல் ; செய்தி ; வதந்தி ; கட்டுரை . |
பேச்சுக்காரன் | சொல்வன்மையுடையவன் ; வாயாடி . |
பேச்சுக்கிடம் | பேசுமுரிமை ; பழிக்குக் காரணம் . |
பேச்சுக்கொடுத்தல் | இரகசியமறிய வார்த்தையாடுதல் ; பேச்சு வளர்த்தல் ; பொழுது போக்காக வார்த்தையாடுதல் . |
பேச்சுத்தட்டுதல் | சொல் தடுமாறுதல் ; வாக்குத் தவறுதல் ; பிறர் சொல்லை மறுத்தல் . |
பேச்சுத்தடுமாறுதல் | சொல் குழறுதல் ; வாக்குத் தவறுதல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 806 | 807 | 808 | 809 | 810 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெருவனம் முதல் - பேச்சுத்தடுமாறுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சொல், பெருமை, பேச்சு, என்னும், தவறுதல், பெற்றோர், மிக்க, தவளை, நிறம், நோய், வார்த்தையாடுதல், வாக்குத், மேகம், பெரிய, தகுதி, எருது, பெருவிறலாளி, பேறு, பொருள், இறைவன், பெறுமதி, பொதுமகள்