முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பெயர்ப்படுத்தல் முதல் - பெருக்கல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பெயர்ப்படுத்தல் முதல் - பெருக்கல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பெயர்ப்படுத்தல் | பேரிடுதல் . |
| பெயர்ப்பு | பெயரச்செய்கை ; மொழிபெயர்ப்பு . |
| பெயர்புறம் | புறங்கொடுக்கை . |
| பெயர்பொறித்தல் | புகழை நிலைநிறுத்துதல் . |
| பெயர்போதல் | புகழடைதல் . |
| பெயர்வழி | ஆள் ; தலைமுறை ; பொருள் அட்டவணை . |
| பெயர்வேற்றுமை | முதல் வேற்றுமை . |
| பெயரகராதி | சதுரகராதியில் பெயர்ச்சொற் பொருளை விளக்கும் பகுதி . |
| பெயரடி | பகுபதத்தில் பெயராகிய பகுதி . |
| பெயரப்பெயர | மீண்டும்மீண்டும் . |
| பெயரன் | பெயரை உடையவன் ; மக்கள் வயிற்று ஆண் ; பாட்டன் . |
| பெயரிடுதல் | பெயர்வைத்தல் . |
| பெயரிடைநிலை | பெயரின் பகுதி விகுதிகட்கு இடைநிற்கும் எழுத்து . |
| பெயரிய | பெயர்பெற்ற ; பெயரால் அழைத்த . |
| பெயரியற்சொல் | தன் பொருளை இயல்பில் விளக்கும் பெயர்ச்சொல் . |
| பெயரின்மை | இறைவன் எண்குணத்துள் ஒன்றான பெயர் சொல்லமுடியாத தன்மை . |
| பெயருரிச்சொல் | பெயர்ச்சொல்லைத் தழுவி வரும் சொல் . |
| பெயரெச்சம் | பெயர்கொண்டு முடியும் வினைக்குறை . |
| பெயரெஞ்சுகிளவி | பெயர்கொண்டு முடியும் வினைக்குறை . |
| பெயரெடுத்தல் | புகழடைதல் ; ஒருவன் பெயரைப் பதிவுப் புத்தகத்தினின்று நீக்குதல் . |
| பெயரேடு | காண்க : பேரேடு . |
| பெயல் | பொழிகை ; மழை ; மழைத்துளி ; மேகம் . |
| பெயலை | மழை . |
| பெரிசு | பெரியது ; மிகவும் . |
| பெரிது | பெரியது ; மிகவும் . |
| பெரிய | பெரிதான ; மூத்த ; இன்றியமையாத . |
| பெரியகுடியானவன் | பேருழவன் ; ஊர்ப் பெரியதனக்காரன் . |
| பெரியகுணம் | தாராளமனம் ; உலகப்பற்றின்மை . |
| பெரியகை | தாராளமான கை ; செல்வன் ; செல்வாக்குள்ள கட்சி . |
| பெரியகோயில் | திருவரங்கம் கோயில் ; தஞ்சைக் கோயில் . |
| பெரியதகப்பன் | தந்தையின் அண்ணண் ; தாயின் அக்காள் கணவன் . |
| பெரியதலை | பெரியவன் . |
| பெரியதனக்காரன் | ஊர் மணியக்காரன் ; பெருநிலக்கிழார் . |
| பெரியதனம் | மேட்டிமை ; பெருந்தன்மை ; மேற்பார்வை ; பெருமை ; காண்க : பெரியதனக்காரன் . |
| பெரிய தாய் | தாய்க்குமுன் பிறந்தாள் ; தந்தையின் அண்ணண் மனைவி . |
| பெரியதிருநாள் | ஆண்டுப் பெருவிழா . |
| பெரியதிருவடி | கருடாழ்வார் . |
| பெரியநடை | நல்லொழுக்கம் . |
| பெரியப்பன் | காண்க : பெரியதகப்பன் . |
| பெரியபிராட்டி | திருமகள் . |
| பெரியபிள்ளை | ஊர் அல்லது குடும்பத்திற்குத் தலைமையாக மதிக்கப்பட்டவன் ; மூத்த பிள்ளை . |
| பெரியபெயர் | பெரும்புகழ் . |
| பெரியபெருமாள் | திருவரங்கத்துத் திருமால் ; பேரரசன் . |
| பெரியபொருள் | பரப்பிரமம் . |
| பெரியம்மாள் | காண்க : பெரிய தாய் ; வீட்டுக்குத் தலைமையானவள் . |
| பெரியம்மை | காண்க : பெரியம்மாள் ; ஓர் அம்மை நோய்வகை ; மூதேவி . |
| பெரியமனம் | இளகிய நெஞ்சம் ; அருள் . |
| பெரியமனிதன் | சிறந்தோன் ; செல்வமும் செல்வாக்கும் உள்ளவன் ; உயர்ந்த நிலையிலுள்ளவன் ; ஆண்டு முதிர்ந்தவன் . |
| பெரியமூளை | மூளையின் மேற்பாகம் ; அறிவாற்றல் மிக்கவன் . |
| பெரியர் | காண்க : பெரியா(யோ)ர் . |
| பெரியவர் | உயர்ந்தோர் ; முன்னோர் ; முதியோர் . |
| பெரியவராடி | பாலை யாழ்த்திறவகை . |
| பெரியவள் | ஆண்டு முதிர்ந்தவள் ; பூப்படைந்தவள் . |
| பெரியவன் | தக்க வயது அடைந்தவன் ; மூத்தோன் ; பெரிய நிலையில் உள்ளவன் . |
| பெரியவாய் | அலப்புவாயன் ; மரவகை . |
| பெரியவுடையநாயனார் | தஞ்சைக்கோயில் மூர்த்தியாகிய பிரகதீசுரர் . |
| பெரியவுடையார் | சடாயு . |
| பெரியவெண்ணம் | உயர்ந்த சிந்தை ; வீண் பெருமை . |
| பெரியாத்தாள் | காண்க : பெரியம்மாள் . |
| பெரியாநங்கை | ஒரு செடிவகை . |
| பெரியாயி | காண்க : பெரியம்மாள் . |
| பெரியார் | மூத்தோர் ; சிறந்தோர் ; ஞானியர் ; அரசர் . |
| பெரியோர் | மூத்தோர் ; சிறந்தோர் ; ஞானியர் ; அரசர் . |
| பெரியோர்பெருமான் | பிரமன் . |
| பெரியோன் | உயர்ந்தோன் ; கடவுள் . |
| பெருக்கம் | வளர்ச்சி ; மிகுதி ; செல்வம் ; வெள்ளம் ; நிறைவு ; நீடிப்பு . |
| பெருக்கல் | துடைப்பத்தால் குப்பை கூட்டுதல் ; எண்களைப் பெருக்குதல் ; விருத்திசெய்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 802 | 803 | 804 | 805 | 806 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெயர்ப்படுத்தல் முதல் - பெருக்கல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பெரியம்மாள், பெரிய, பகுதி, பெரியதனக்காரன், பெரியவன், பெருமை, உள்ளவன், தாய், உயர்ந்த, ஞானியர், அரசர், சிறந்தோர், மூத்தோர், ஆண்டு, அண்ணண், கோயில், பெயர்கொண்டு, முடியும், விளக்கும், பொருளை, புகழடைதல், வினைக்குறை, பெரியது, பெரியதகப்பன், சொல், மூத்த, மிகவும், தந்தையின்

