முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பெருக்கல்வாய்பாடு முதல் - பெருங்கொடை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பெருக்கல்வாய்பாடு முதல் - பெருங்கொடை வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
பெருக்கல்வாய்பாடு | எண்களைப் பெருக்குவதாலுண்டாகும் தொகையைக் காட்டும் வாய்பாடு . |
பெருக்கலங்காரம் | வியப்பணி . |
பெருக்காச்சவட்டு | வெறுப்பு ; கவனமின்மை . |
பெருக்காளர் | சிறப்புடையோர் ; வேளாளர் . |
பெருக்காறு | பெருகியோடும் ஆறு . |
பெருக்கி | சுக்கிலம் ; பெருக்கிக்காட்டுவது . |
பெருக்கு | வெள்ளம் ; கடல்நீரேற்றம் ; இரத்தவோட்டத்தின் மிகுதி ; மிகுதி ; பப்பரப்புளி ; ஒரெண்ணை மற்றோர் எண்ணால் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துகை ; காண்க : பெருக்குத்தொகை . |
பெருக்கு | (வி) குணி ; பெருகச்செய் . |
பெருக்குத்தொகை | இரண்டு எண்களைப் பெருக்கியதாற் கூடிய தொகை . |
பெருக்குதல் | விரியச்செய்தல் ; நீர் நிரப்புதல் ; மோர் முதலியவற்றை நீர் கலந்து பெருகச்செய்தல் ; குப்பை கூட்டுதல் ; ஓரெண்ணை மற்றோர் எண்ணால் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துதல் . |
பெருக்குமெண் | மற்றொன்றைப் பெருக்குதற்கு உரிய எண் . |
பெருக்குரல் | பாடுகையில் தோன்றும் வெடித்த குரல் . |
பெருக்குவேளை | உச்சிப்பொழுது ; கடலின் நீர் ஏற்றக்காலம் ; உடலில் இரத்தவோட்டம் மிகுந்த காலம் . |
பெருக்கெடுத்தல் | வெள்ளம் அதிகமாதல் . |
பெருக | நிரம்ப . |
பெருகல் | மிகுதி . |
பெருகியல் | சாதிப் பெரும்பண் நான்கனுள் ஒன்று . |
பெருகியன்மருதம் | ஒரு பண்வகை . |
பெருகு | தயிர் ; அணிகலவகை . |
பெருகுசாதி | பண்ணியல் திறவகைகளுள் ஒன்று . |
பெருகுதல் | அளவு மிகுதல் ; நீர் மிகுந்தெழுதல் ; நிறைதல் ; வளர்தல் ; முதிர்தல் ; ஆக்கம் தருதல் ; கேடுறுதல் ; மங்கலநாண் அற்றுவிழுதல் ; விளக்கணைதல் . |
பெருங்கட்டி | பிளவை . |
பெருங்கணக்கு | பெருந்தொகை ; பெரும் படியானது ; அகந்தை . |
பெருங்கணி | தலைமை நிமித்திகன் . |
பெருங்கதை | நீண்ட கதை ; பரவலான செய்தி ; பிள்ளையார் கதை படிப்பதில் இறுதிப்படிப்பு ; ஒரு காப்பியம் . |
பெருங்கரம் | கோவேறுகழுதை . |
பெருங்கலக்குறுத்துதல் | பெரிய குழப்பமுண்டு பண்ணுதல் . |
பெருங்கலம் | ஆயிரம் நரம்புடைய பேரியாழ் . |
பெருங்கலையன் | ஒரு நெல்வகை . |
பெருங்கவி | காண்க : வித்தாரகவி , விரிவாகப் பாடவல்லவன் . |
பெருங்களன்செய்தல் | தெய்வ வழிபாட்டுக்குரிய இடமாகத் தயார்செய்தல் . |
பெருங்காஞ்சி | ஒவ்வொருவரையும் கூற்றம் அணுகுமென்று சான்றோர் கூறுதலைப்பற்றிச் சொல்லும் புறத்துறைவகை ; வீரர் படை முகத்துத் தம் ஆற்றல் தோற்றுவித்தலைக் கூறும் புறத்துறைவகை . |
பெருங்காடு | பெரிய வனம் ; சுடுகாடு . |
பெருங்காப்பியம் | நூல் இயல்புகள் எல்லாவற்றையும் குறைவறக்கொண்ட தொடர்நிலைச் செய்யுள்வகை . |
பெருங்காயம் | ஒரு மருந்துவகை ; கறிப்பெருங்காயம் ; ஒரு மரவகை ; ஒரு மரப்பிசின்வகை ; காண்க : பெருஞ்சீரகம் . |
பெருங்கால் | பெரிய வாய்க்கால் ; யானைக்கால் ; புயல்காற்று . |
பெருங்காற்று | புயல்காற்று . |
பெருங்கிராமம் | ஐந்நூறு குடிகளுடைய ஊர் . |
பெருங்கிழங்கு | காண்க : பெருமருந்து . |
பெருங்கிழமை | முழு உரிமை ; மிகுநேயம் . |
பெருங்குடல் | குடற்பிரிவு . |
பெருங்குடி | உயர்குடி ; வணிகருள் ஒரு பிரிவினர் ; நிலக்கிழார் . |
பெருங்குடியர் | காண்க : பெருங்குடிவாணிகர் . |
பெருங்குடியாட்டம் | நாட்டாண்மை . |
பெருங்குடிவாணிகர் | வணிகருள் ஒரு பிரிவினர் . |
பெருங்குமிழ் | ஒரு மரவகை . |
பெருங்குயம் | குயவர்க்கு அரசரளிக்கும் பட்டப்பெயர் . |
பெருங்குருகு | யானையுண்குருகு ; தலைச்சங்கத்து வழங்கிய ஓர் இசைத்தமிழ் நூல் . |
பெருங்குழி | பெரிய பள்ளம் ; கடல் ; சதுர அளவை ; முக்கால் ஏக்கர்கொண்ட நில அளவு . |
பெருங்குழுவைந்து | காண்க : ஐம்பெருங்குழு . |
பெருங்குறட்டை | காண்க : பெருமருந்து ; காக்கணங்கொவ்வை ; உறக்கத்தில் விடும் உரத்த மூச்சினொலி . |
பெருங்குறடு | விறகு முதலியன பிளப்பதற்காக அடியில் வைக்குந் தாங்குகட்டை . |
பெருங்குறி | ஊர்ப்பேரவை . |
பெருங்குறிச்சபை | ஊர்ப்பேரவை . |
பெருங்குறிஞ்சி | கொடிவகை ; பூண்டுவகை ; குறிஞ்சிப்பாடீடு . |
பெருங்கை | காண்க : பெரியகை ; யானை . |
பெருங்கொடை | எல்லோருக்கும் ஏராளமாகக் கொடுக்கை . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 803 | 804 | 805 | 806 | 807 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெருக்கல்வாய்பாடு முதல் - பெருங்கொடை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நீர், பெரிய, மிகுதி, புறத்துறைவகை, மரவகை, நூல், பெருமருந்து, ஊர்ப்பேரவை, பெருங்குடிவாணிகர், பிரிவினர், வணிகருள், புயல்காற்று, ஒன்று, மற்றோர், வெள்ளம், பெருக்கு, எண்ணால், சுட்டிய, எண்களைப், பெருக்குத்தொகை, மடங்கு, அளவு