தமிழ் - தமிழ் அகரமுதலி - அங்கனை முதல் - அச்சத்திரி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அங்கிநாள் | கார்த்திகை நாள் ; அத்த நாள் . |
| அங்கிரி | கால் ; மரவேர் ; மரம் . |
| அங்கீகரணம் | காண்க : அங்கி(கீ)காரம் . |
| அங்கு | அவ்விடம் . |
| அங்குசதாரி | விநாயகன் . |
| அங்குசபாசதரன் | விநாயகன் . |
| அங்குசபாசமேந்தி | விநாயகன் . |
| அங்குசபாணி | விநாயகன் ; காளி . |
| அங்குசம் | யானையை அடக்கும் கருவியாகிய தோட்டி ; வாழை . |
| அங்குசரோசனம் | கூகைக்கிழங்கின் மாவு . |
| அங்குசோலி | அறுகம்புல் . |
| அங்குட்டம் | பெருவிரல் ; பெருவிரலளவு ; குறளுரு . |
| அங்குடம் | தாழக்கோல் , திறவுகோல் . |
| அங்குத்தை | அவ்விடம் ; தாங்கள் என்னும் பொருளில் தம்பிரான்களை விளிக்கும் சொல் . |
| அங்குமிங்கும் பாடி | இரண்டு கட்சியிலும் தொடர்பு கொண்டவன் , நம்ப இயலாதவன் . |
| அங்குரகம் | கூடு ; பறவைகள் தங்குமிடம் . |
| அங்குரம் | முளை ; தளிர் ; இரத்தம் ; மயிர் ; குப்பைமேனி ; நீர் ; நங்கூரம் . |
| அங்குரார்ப்பணம் | பாலிகை தெளிக்கை , முளையிடுதல் ; தொடங்குகை . |
| அங்குரி | விரல் . |
| அங்குரித்தல் | முளைத்தல் ; வெளிப்படுதல் . |
| அங்குலம் | கைவிரல் ; விரலகலம் , ஒரு விரற்கணு அளவு ; ஓரடியின் பன்னிரண்டில் ஒரு பங்கு , 2.5 சென்டிமீட்டர் . |
| அங்குலி | விரல் ; யானைத்துதிக்கை நுனி ; மோதிரம் ; யானைக்குக் கட்டும் மணி ; ஐவிரலிச்செடி . |
| அங்குலிகம் | விரலணி , மோதிரம் . |
| அங்குலியம் | விரலணி , மோதிரம் . |
| அங்குஸ்தான் | தையற்காரர் விரலிலே அணியும் கூடு , விரலுறை . |
| அங்கூடம் | அம்பு ; கீரி ; அழகிய கூடம் . |
| அங்கூரம் | காண்க : அங்குரம் . |
| அங்கே | அங்கு . |
| அங்கை | அகங்கை , உள்ளங்கை . |
| அங்கையில்வட்டு | அடைதற்கு எளியது . |
| அங்கோலம் | அழிஞ்சில்மரம் . |
| அங்ஙன் | அத்தன்மை ; அவ்விதம் ; அவ்விடம் . |
| அங்ஙனம் | அத்தன்மை ; அவ்விதம் ; அவ்விடம் . |
| அச்சகம் | நூல்களை அச்சிடும் இடம் . அச்சுக்கூடம் . |
| அச்சகாரம் | அச்சாரம் , ஆயத்தப் பணம் , முன்பணம் . |
| அச்சடி ஓலை | முத்திரையிட்ட ஓலையாவணம் . |
| அச்சடித்தல் | காகிதத்திலோ , துணி முதலியவற்றிலோ எழுத்துகளையும் பிறவற்றையும் பதிப்பித்தல் . |
| அச்சடியன் | சாயப்புடைவை . |
| அச்சடையாளம் | உடலுறுப்பு ஒப்புமை ; முத்திரையச்சு . |
| அச்சணம் | அக்கணம் , அந்த நேரம் . |
| அச்சத்தி | கத்தரிச்செடி . |
| அச்சத்திரி | கத்தரிச்செடி . |
| அங்கனை | பெண் . |
| அங்காகமம் | சமண வேதாகமம் மூன்றனுள் ஒன்று . |
| அங்காங்கிபாவம் | உறுப்பு உறுப்பிகளின் தொடர்பு . |
| அங்காடி | கடை ; கடைத்தெரு ; சந்தை . |
| அங்காடிக்கூலி | கடை ; சந்தைகளிலிருந்து பெறும் வரி . |
| அங்காடிபாரித்தல் | மனக்கோட்டை கட்டுதல் . |
| அங்காத்தல் | வாயைத் திறத்தல் ; கொட்டாவி விடல் . |
| அங்காமினி | காண்க : ஆகாசகாமினி . |
| அங்காரகம் | கரி ; உடலிற் பூசும் மணப்பொருள் ; மேலே பூசும் வாசனைக் குழம்பு . |
| அங்காரகன் | செவ்வாய் ; நெருப்பு ; செந்நீர் முத்து . |
| அங்காரம் | நெருப்பு ; கரி ; மாத்துவர் நெற்றியில் இடும் கரிக்கோடு . |
| அங்காரவல்லி | சிறுதேக்கு . |
| அங்காரன் | செவ்வாய் . |
| அங்காரி | வெண்காரம் . |
| அங்காரிகை | கரும்பு ; நன்னாரி . |
| அங்காளம்மை | காளி ; ஓர் ஊர்த்தேவதை . |
| அங்காளி | காளி ; ஓர் ஊர்த்தேவதை . |
| அங்கி | அக்கினிதேவன் ; நெருப்பு ; கார்த்திகை நாள் ; அத்த நாள் ; சட்டை ; அங்கத்தையுடையது . |
| அங்கிகரித்தல் | சம்மதித்தல் , உடன்படுதல் , ஏற்றுக்கொள்ளுதல் . |
| அங்கீகரித்தல் | சம்மதித்தல் , உடன்படுதல் , ஏற்றுக்கொள்ளுதல் . |
| அங்கிகாரம் | சம்மதம் , ஏற்றுக்கொள்ளுகை , உடன்பாடு . |
| அங்கீகாரம் | சம்மதம் , ஏற்றுக்கொள்ளுகை , உடன்பாடு . |
| அங்கிகை | கச்சு ; இரவிக்கை . |
| அங்கிசகம் | அன்னப் பறவை . |
| அங்கிசம் | மரபு , வமிசம் ; கூறு , பங்கு ; தாயபாகம் ; தோட்பட்டை ; உபநிடதம் முப்பத்திரண்டனுள் ஒன்று . |
| அங்கிட்டு | அவ்விடத்தில் . |
| அங்கிட்டோமம் | காண்க : அக்கினிட்டோமம் . |
| அங்கிடுதத்தி | நாடோடி ; நிலைகெட்டவன் . |
| அங்கிடுதுடுப்பன் | நாடோடி ; நிலைகெட்டவன் . |
| அங்கிடுதொடுப்பி | கோள் சொல்பவன் . |
| அங்கிதம் | உடல்மேலுள்ள தழும்பு ; அடையாளம் ; கணக்கிடப்பட்டது ; பாட்டுடைத்தலைவன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அங்கனை முதல் - அச்சத்திரி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், விநாயகன், காண்க, நாள், அவ்விடம், நெருப்பு, மோதிரம், காளி, நாடோடி, ஊர்த்தேவதை, நிலைகெட்டவன், செவ்வாய், பூசும், சம்மதித்தல், உடன்படுதல், உடன்பாடு, ஒன்று, சம்மதம், ஏற்றுக்கொள்ளுதல், ஏற்றுக்கொள்ளுகை, விரலணி, அங்கு, தொடர்பு, அங்கி, அத்த, கார்த்திகை, கூடு, அங்குரம், அத்தன்மை, அவ்விதம், சொல், பங்கு, விரல், கத்தரிச்செடி

