தமிழ் - தமிழ் அகரமுதலி - அகவுதல் முதல் - அகைதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அகுவைக்கட்டி | அரையாப்பு . |
| அகுளுதி | வேம்பு . |
| அகூடகந்தம் | பெருங்காயம் . |
| அகூபாரம் | ஆமை ; கடல் ; பாறையாலான மலை . |
| அகை | கூறுபாடு ; வருத்தம் ; தளர்ச்சி ; தகை ; மலர் ; கிளை . |
| அகை | (வி) வருத்து ; எரி ; தடு . |
| அகைத்தல் | வருத்தல் ; முறித்தல் ; அறுத்தல் ; உயர்த்தல் ; அடித்தல் ஓட்டுதல் ; எழுதல் ; தழைத்தல் ; கிளைத்தல் . |
| அகைதல் | எரிதல் ; ஒடிதல் ; வருந்துதல் ; தளிர்த்தல் ; மலர்தல் ; தாழ்தல் ; காலந்தாழ்த்தல் . |
| அகவை | உட்பட்டது ; உட்பொருள் ; உள்ளிடம் ; உட்பட்ட வயது ; ஆண்டு ; பருவம் ; ஏழாம் வேற்றுமை உருபு . |
| அகழ் | அகழி , மதில்சூழ் கிடங்கு , கிடங்கு ; குளம் . |
| அகழ்தல் | தோண்டுதல் , கல்லுதல் ; உழுதல் . |
| அகழான் | வயல் எலி . |
| அகழி | கோட்டையைச் சுற்றியுள்ள ஆழமான நீர்நிலை , மதில்சூழ் கிடங்கு ; ஓடை ; கயம் ; கேணி ; கிடங்கு ; வாயகன்ற பாண்டம் . |
| அகளங்கம் | குற்றமின்மை ; தூய்மை . |
| அகளங்கன் | மாசிலான் ; கடவுள் ; சோழன் . |
| அகளம் | தாழி ; மிடா ; சாடி ; யாழின் பத்தர் ; நீர்ச்சால் ; களங்கமின்மை . |
| அகளி | தாழி ; மிடா ; பாண்டம் . |
| அகற்சி | அகலம் ; நீங்குதல் , பிரிவு ; துறவறம் . |
| அகற்பவிபூதி | இயற்கையில் உண்டான திருநீறு . |
| அகற்பன் | ஒப்பில்லாதவன் . |
| அகற்றம் | அகலம் ; விரிவு . |
| அகற்றல் | நீக்குதல் ; துரத்துதல் ; அகலப்பண்ணுதல் , விரிவாக்கல் . |
| அகற்றுதல் | நீக்குதல் ; துரத்துதல் ; அகலப்பண்ணுதல் , விரிவாக்கல் . |
| அகறல் | அகலல் ; கடத்தல் ; நீங்குதல் ; விரிதல் ; அகலம் . |
| அகன்மணி | அகன்ற மணி ; உயர்ந்த முத்து ; தெய்வமணி . |
| அகன்றிசைப்பு | யாப்பு முறையிலிருந்து மாறி ஒலிக்கும் குற்றம் . |
| அகன்றில் | ஆணன்றில் , ஆண் கிரவுஞ்சம் . |
| அகன்னம் | காதற்றது ; செவிடு . |
| அகனைந்திணை | குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை என்னும் ஐந்து திணை . |
| அகாடி | குதிரையின் முன்னங்காற் கயிறு . |
| அகாத்தியம் | பொல்லாங்கு , வஞ்சனை ; பாசாங்கு ; உண்ணத்தகாதது . |
| அகாதம் | ஆழம் ; மிகுந்த பள்ளம் ; நீந்துபுனல் ; தொளை ; வஞ்சகம் . |
| அகாமவினை | தன்னிச்சையின்றி நிகழும் செயல் ; தன்னறிவின்றிச் செய்யும் செயல் . |
| அகாரணம் | காரணமின்மை ; தற்செயல் . |
| அகாரம் | ’அ’ என்னும் எழுத்து ( காரம் சாரியை ) ; வீடு . |
| அகாரி | கடவுள் ; இடி ; இந்திரன் . |
| அகாரியம் | காரியமல்லாதது ; தகாத செய்கை . |
| அகாலம் | காலமல்லாத காலம் , முறைமை அல்லாத காலம் , பருவமின்மை ; பஞ்சகாலம் . |
| அகாலமிருந்து | அகால மரணம் ; இளமைச்சாவு ; அநியாய மரணம் . |
| அகி | இரும்பு ; பாம்பு ; கதிரவன் ; பகைவன் ; இராகு ; வச்சிரப்படை ; தீ ; ஈயம் . |
| அகிஞ்சனன் | வறியவன் . |
| அகிஞ்சை | காண்க : அகிம்சை . |
| அகிதம் | இதமின்மை ; நன்மையல்லாதது , தீமை ; இடையூறு . |
| அகிதலம் | பாதாளம் ; நாகலோகம் . |
| அகிதன் | பகைவன் . |
| அகிம்சை | கொல்லாமை ; பிற உயிருக்குத் தீங்கு செய்யாமை , வருத்தாமை . |
| அகிருத்தியம் | அக்கிரமம் , தவறான செய்கை . |
| அகில் | ஒரு வாசனை மரம் ; ஒரு மணப்பொருள் ; புகைக்கப்படும் பொருள்களுள் ஒன்று . |
| அகிலம் | உலகம் , பூமி ; எல்லாம் ; முழுமை . |
| அகிலாண்டகோடி | எண்ணுக்கு அடங்காத கணக்கற்ற உலகங்கள் . |
| அகிலாண்டம் | எல்லா உலகும் . |
| அகிலாண்டநாயகி | உலகம் முழுதுடையாள் , பார்வதி . |
| அகிலாண்டவல்லி | உலகம் முழுதுடையாள் , பார்வதி . |
| அகிற்கூட்டு | சந்தனம் , கருப்பூரம் , காசுக்கட்டி , தேன் , ஏலம் சேர்ந்த கலவை ; கூந்தலின் ஈரம் போக்கி மணமூட்டுவது ; கூந்தலை உலர்த்தப் பயன்படுவது . |
| அகுசலவேதனை | துன்ப உணர்ச்சி . |
| அகுட்டம் | மிளகு . |
| அகுடம் | கடுகுரோகிணிப்பூண்டு . |
| அகுணம் | குணமின்மை ; குற்றம் ; அழகின்மை ; தீக்குணம் . |
| அகுணி | தீயோன் ; உறுப்புக்குறையுடையோன் . |
| அகுதார் | உரிமையாளி . |
| அகுதி | காண்க : அகதி . |
| அகுரு | அகில்மரம் ; வெட்டிவேர் ; எளிதானது ; குருவல்லாதவன் . |
| அகவுதல் | அகவல் ; குரல் எழுப்புதல் ; ஒலித்தல் ; அழைத்தல் ; பாடுதல் ; ஆடல் . |
| அகவுநர் | பாடுவோர் ; ஆடுவோர் . |
| அகவுயிர் | உடம்பினுள் உயிர் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகவுதல் முதல் - அகைதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கிடங்கு, அகலம், உலகம், காலம், மரணம், செய்கை, செயல், பகைவன், காண்க, பார்வதி, முழுதுடையாள், அகிம்சை, என்னும், விரிவாக்கல், தாழி, கடவுள், பாண்டம், மதில்சூழ், மிடா, நீங்குதல், அகழி, அகலப்பண்ணுதல், துரத்துதல், நீக்குதல், குற்றம்

