தமிழ் - தமிழ் அகரமுதலி - அகைப்பு முதல் - அங்கனி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அங்கவடி | குதிரைமேல் சேணத்தோடு இடப்படும் காலூன்று படி , குதிரைமேல் ஏற உதவும் படி . |
| அங்கம் | உறுப்பு ; உடம்பு ; எலும்பு ; கட்டில் ; பாவனை ; அடையாளம் ; வேதாங்கம் அரசாங்கம் ; நாடக உறுப்பு ; அறமே பொருளாக வரும் நாடகம் ; ஒரு நாடு ; ஒரு மொழி . |
| அங்கமணி | மகளுக்குக் கொடுக்கும் சீர்ப்பொருள் , சீதனம் . |
| அங்கமாலை | எலும்பு மாலை ; உடலுறுப்புகளை முறையாக எடுத்து விளக்கும் ஒரு நூல் ; அடிமுதல் முடி , முடிமுதல் அடியாகப் பாடப்படும் நூல்வகை . |
| அங்கயற்கண்ணம்மை | அழகிய கயல்மீன் போன்ற கண்ணுடையாள் ; மதுரையில் கோயில் கொண்டுள்ள மீனாட்சியம்மை . |
| அங்கயற்கண்ணி | அழகிய கயல்மீன் போன்ற கண்ணுடையாள் ; மதுரையில் கோயில் கொண்டுள்ள மீனாட்சியம்மை . |
| அங்கயோகம் | எண்வகை யோகத்துள் ஒன்று . |
| அங்கர் | அங்க நாட்டினர் . |
| அங்கர்கோமான் | அங்கநாட்டுக்குத் தலைவன் ; கன்னன் . |
| அங்கரக்கன் | மெய்காவலன் . |
| அங்கரக்கா | மெய்ச்சட்டை ; நீண்ட சட்டை . |
| அங்கரட்சணி | போர்க்கவசம் . |
| அங்கலாய்த்தல் | கலங்குதல் ; புலம்புதல் ; துயருறுதல் ; இச்சித்தல் பொறாமைப்படுதல் . |
| அங்கலாய்ப்பு | கலக்கம் ; புலப்பம் ; அருவருப்பு ; பேராசை . |
| அங்கலி | விரல் ; முலை . |
| அங்கலிங்கம் | வீரசைவர்கள் மார்பில் அணியும் லிங்கம் . |
| அங்கவத்திரம் | மேலாடை . |
| அங்கவிட்சேபம் | அபிநயம் ; சாடை , குறி . |
| அங்கவீனம் | உறுப்புக்குறை . |
| அங்கன் | மகன் . |
| அங்கனம் | அங்ஙனம் . |
| அங்கனி | கற்றாழை ; படரும் முட்செடி . |
| அகைப்பு | அகைத்தல் ; எழுச்சி ; மதிப்பு ; இடை விட்டுச் செல்லுகை . |
| அகைப்புவண்ணம் | இருபது வண்ணங்களுள் ஒன்று ; அறுத்தறுத்து ஒழுகும் நடையை உடையது ; விட்டுவிட்டுச் செல்லும் சந்தம் . |
| அகைமம் | புல்லுருவி ; கருந்தாளிமரம் . |
| அகையாறு | கிளையாறு . |
| அகைவாய்க்கால் | கிளைவாய்க்கால் . |
| அகோ | ஒரு வியப்புச் சொல் அழைப்பு , உடன்பாடு , புகழச்சி , இகழ்ச்சி , பொறாமை , துன்பம் , இரக்கம் , ஐயம் முதலிய பொருள்களுள் ஒன்றை உணர்த்தும் குறிப்புச்சொல் . |
| அகோசரம் | அறியப்படாமை , புலன்களுக்குப்புலப்படாமை ; புலப்படாதது . |
| அகோடம் | கமுகமரம் . |
| அகோரம் | மிக்க கொடுமை ; வெப்பம் ; சிவன் ஐம்முகத்துள் ஒன்று ; ஞானம் . |
| அகோராத்திரம் | இரவும் பகலும் , இராப்பகல் . |
| அகோரை | இரண்டரை நாழிகைக் காலம் ; வெயில் மிகுந்த நாள் ; அஞ்சத்தக்கவன் . |
| அகோவனம் | தரிசு . |
| அங்கக்கிரியை | மெய் உறுப்புகளால் செய்யப்படும் நடிப்புத் தொழில் . |
| அங்ககணிதம் | எண்கணக்கு . |
| அங்கசங்கம் | பகட்டு ; புணர்ச்சி . |
| அங்கசம் | குருதி ; மயிர் ; நோய் ; காமம் . |
| அங்கசன் | மன்மதன் ; மகன் . |
| அங்கசாலை | குடிகள் செலுத்தும் வரிவகை . |
| அங்கசாலைக்காரன் | ஊர்ப்பணிபுரிவோன் . |
| அங்கசேட்டை | உடம்பின் இயக்கம் ; கை மெய் காட்டுதல் ; கோரணி ; குறும்பு . |
| அங்கண் | அவ்விடம் ; அழகிய இடம் ; கண்ணோட்டம் . |
| அங்கணம் | சேறு ; முற்றம் ; இருதூண் நடுவிடம் ; சாக்கடை ; மதகு ; நீர்த்தாரை . |
| அங்கணன் | கடவுள் ; சிவன் ; திருமால் ; அருகன் . |
| அங்கணாளன் | கண்ணோட்டமுடையவன் ; கடவுள் . |
| அங்கணி | அழகிய கண்ணையுடையவள் ; பார்வதி ; கற்றாழை . |
| அங்கத்தவர் | அவையின் உறுப்பினர் . |
| அங்கத்தி | காண்க : அங்குத்தை . |
| அங்கதச்செய்யுள் | வசைப்பாட்டு . |
| அங்கதப்பாட்டு | வசைப்பாட்டு . |
| அங்கதம் | பாம்பு ; தோளணி ; பழிச்சொல் ; யானையுணவு ; வசைப்பாட்டு ; மார்பு . |
| அங்கதர் | வசைகூறுவோர் . |
| அங்கதி | கொடை ; தீ ; நோய் ; பார்ப்பான் ; வாயு ; தீக்கடவுள் . |
| அங்கதேவதை | பெருந்தெய்வத்திற்குப் பணி செய்யும் சிறுதெய்வம் . |
| அங்கதை | தென்திசை யானைக்குப் பெண்யானை . |
| அங்கநியாசம் | உடம்பின் ஒவ்வோர் உறுப்பையும் தொட்டு மந்திரம் ஓதுகை . |
| அங்கநூல் | வேத விளக்கமான துணைநூல் , வேதாங்கம் ; அங்காகமம் . |
| அங்கப்பால் | முலைப்பால் . |
| அங்கப்பிரதக்கிணம் | உருண்டு கோயிலை வலம் வரல் ; உடலுறுப்புகள் தரையில் படியுமாறு புரண்டு கோயிலை வலம் வரல் . |
| அங்கப்பிரதட்சிணம் | உருண்டு கோயிலை வலம் வரல் ; உடலுறுப்புகள் தரையில் படியுமாறு புரண்டு கோயிலை வலம் வரல் . |
| அங்கப்பிராயச்சித்தம் | உடலின் தூய்மைக்காகச் செய்யும் ஒரு கழுவாய் . |
| அங்கபடி | குதிரைமேல் சேணத்தோடு இடப்படும் காலூன்று படி , குதிரைமேல் ஏற உதவும் படி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகைப்பு முதல் - அங்கனி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கோயிலை, வலம், வரல், அழகிய, குதிரைமேல், வசைப்பாட்டு, ஒன்று, செய்யும், உருண்டு, உதவும், கடவுள், உடம்பின், காலூன்று, இடப்படும், படியுமாறு, புரண்டு, தரையில், உடலுறுப்புகள், சேணத்தோடு, நோய், மெய், கண்ணுடையாள், மதுரையில், கயல்மீன், உறுப்பு, வேதாங்கம், கோயில், கொண்டுள்ள, கற்றாழை, சிவன், மகன், சொல், மீனாட்சியம்மை, எலும்பு

