தமிழ் - தமிழ் அகரமுதலி - அசட்டன் முதல் - அசாயசூரன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அசதியாடுதல் | சிரித்துப்பேசுதல் ; வேடிக்கையாகப் பேசுதல் . |
| அசநவேதி | சீரகம் . |
| அசப்பியம் | அவைக்குப் பொருந்தாத பேச்சு . |
| அசப்பு | பராக்கு ; அசதி . |
| அசபம் | ' அசபா ' என்னும் ஒரு மந்திரம் . |
| அசபா | ' அசபா ' என்னும் ஒரு மந்திரம் . |
| அசபாநலம் | அசபையாகிய அக்கினி . |
| அசம் | ஆடு ; மூவாண்டு பழகிய நெல் ; வெங்காயம் ; ஆன்மா ; பிறவாதது ; சந்தனம் . |
| அசம்பாதை | படை செல்லும் வழி . |
| அசம்பாவிதம் | நேரக்கூடாதது ; பொருத்தமற்றது . |
| அசம்பி | காண்க : அசம்பை . |
| அசம்பிரேட்சிதம் | ஆராய்ச்சியின்மை ; ஆராய்ந்துபாராமை . |
| அசம்பிரேட்சியம் | ஆராய்ச்சியின்மை ; ஆராய்ந்துபாராமை . |
| அசம்பிரேட்சியகாரித்துவம் | ஆராயாது செய்கை . |
| அசம்பை | பயணிகளின் தோட்பை . |
| அசம்மதம் | சம்மதமின்மை , உடன்படாமை . |
| அசம்மதி | சம்மதமின்மை , உடன்படாமை . |
| அசமஞ்சன் | தீயவன் . |
| அசமடம் | ஓமம் . |
| அசமதாகம் | ஓமம் . |
| அசமந்தம் | மந்தகுணம் ; தொடர்பின்மை ; மலையத்தி . |
| அசமந்தன் | சோம்பேறி . |
| அசமந்திபம் | மலையத்தி . |
| அசமவாயி | ஒற்றுமையில்லாதது . |
| அசமாருதம் | அத்தி . |
| அசமோதம் | காண்க : அசமடம் . |
| அசமோதகம் | காண்க : அசமடம் . |
| அசமோதை | ஓமம் ; இலவம்பிசின் . |
| அசர் | அசறு ; தலைச்சுண்டு ; பொடுகு . |
| அசர்தல் | தளர்ந்துபோதல் ; பிந்துதல் . |
| அசரம் | இயங்காப்பொருள் ; அசைவில்லாதது ; நிலைத்திணை , நிலையியற்பொருள் . |
| அசராதி | கொன்றை . |
| அசராது | கொன்றை . |
| அசரீரி | வானொலி , ஆகாயவாணி ; சரீரமில்லாதது . |
| அசருதல் | காண்க : அயர்தல் . |
| அசரை | அயிரைமீன் . |
| அசல் | முதல் ; மூலம் ; முதற்படி ; உயர்ந்தது ; அருகு ; அயல் ; கொசு ; சீலை ; பூமி . |
| அசல்குறிப்பு | நாளேடு ; தினசரிக் குறிப்பு . |
| அசலக்கால் | தென்றல் . |
| அசலகன்னிகை | மலைமகள் , உமாதேவி . |
| அசலம் | அசைவின்மை ; அசையாநிலை ; அசையாதது ; பூமி ; மலை . |
| அசலலிங்கம் | வழிபாட்டிற்குரிய கோபுரம் முதலியவை . |
| அசலன் | அசைவில்லாதவன் , கடவுள் . |
| அசலிடுதல் | எல்லை கடத்தல் . |
| அசலை | அசையாதது ; உமாதேவி ; நிலம் ; மீன் வகை . |
| அசவல் | அசறு ; சேறு ; கொசு . |
| அசவாகனன் | ஆட்டை ஊர்தியாக உடையவன் , அக்கினிதேவன் . |
| அசற்காரியவாதம் | உற்பத்திக்கு மூலம் இல்லாமலே காரியம் தோன்றும் என்னும் கொள்கை . |
| அசற்சரக்கு | முதல் தரமான பண்டம் , கலப்பற்ற பண்டம் . |
| அசற்பிரதி | மூலப்படி . |
| அசறு | அசர் ; ஒருவகைச் செடிப்பூச்சி ; ஆட்டுச் சொறி ; சேறு . |
| அசறுபாய்தல் | அசும்பொழுகுதல் ; பொசிந்து பரவுதல் . |
| அசன் | பிறப்பிலி , கடவுள் . |
| அசனசாலை | உணவுவிடுதி . |
| அசனம் | சோறு ; உணவு ; பகுதி ; அளவு ; சிரிப்பு ; வேங்கைமரம் ; வெள்ளுள்ளி . |
| அசனவேதி | சீரகம் ; உணவைச் செரிக்கச் செய்வது . |
| அசனி | இடி ; வச்சிரப்படை ; சாம்பிராணி இலை ; தீச்சட்டி . |
| அசனிபாதம் | இடியின் வீழ்ச்சி . |
| அசா | தளர்ச்சி ; வருத்தம் துயர் . |
| அசாக்கிரதை | விழிப்பின்மை , கவனக்குறைவு , சோம்பல் . |
| அசாகளத்தனம் | ஆட்டின் கழுத்தில் தொங்கும் தசை . |
| அசாசி | கருஞ்சீரகம் . |
| அசாணிமூலி | வேலிப்பருத்தி . |
| அசாதசத்துரு | பகைவரால் வெவ்லப்படாதவன் ; வம்புதும்பற்றவன் ; தருமபுத்திரன் ; புத்தர் காலத்திலிருந்த ஓர் அரசன் . |
| அசாதாரணம் | பொதுவின்மை , சிறப்பு . |
| அசாயசூரன் | காண்க : அசகாயசூரன் . |
| அசட்டன் | கீழ்மகன் , இழிந்தோன் ; குற்ற முடையவன் . |
| அசட்டாட்டம் | புறக்கணிப்பு . |
| அசட்டி | ஓமம் . |
| அசட்டை | மதியாமை , பராமுகம் , புறக்கணிப்பு . |
| அசடன் | கீழ்மகன் , சோம்பேறி , மூடன் . |
| அசடு | குற்றம் ; கீழ்மை ; மூடத்தன்மை ; பழுது ; உலோகம் முதலியவற்றில் பெயரும் பொருக்கு . |
| அசத்தல் | அயர்த்தல் ; மறத்தல் . |
| அசதி | சிரித்துப் பேசுதல் ; எள்ளி நகையாடல் ; சடுதி ; சோர்வு ; மறதி ; கற்பில்லாதவள் . |
| அசதிக்கிளவி | கிண்டல்மொழி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அசட்டன் முதல் - அசாயசூரன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஓமம், அசமடம், அசறு, என்னும், அசபா, கொன்றை, மூலம், கொசு, பூமி, கடவுள், கீழ்மகன், புறக்கணிப்பு, பண்டம், சேறு, அசையாதது, உமாதேவி, மலையத்தி, அசம்பை, மந்திரம், அசதி, சீரகம், ஆராய்ச்சியின்மை, ஆராய்ந்துபாராமை, சோம்பேறி, பேசுதல், உடன்படாமை, சம்மதமின்மை, அசர்

