தமிழ் - தமிழ் அகரமுதலி - புழுப்பூனை முதல் - புளித்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| புழுப்பூனை | காண்க : புழுகுபூனை . |
| புழுமேய்தல் | புழுவரித்துச் சொறியுண்டாதல் ; புழுவரித்துப்போதல் ; மயிர் உதிர்ந்து வழுக்கையாகை . |
| புழுவதை | தேனடை . |
| புழுவுணவு | புழுக்களே உணவாகும் நரகவகை . |
| புழுவெட்டு | புழுவரித்தது ; மயிரை உதிரச் செய்யும் நோய்வகை ; சொத்தைப் பல் ; கண்ணிமை நோய்வகை . |
| புழுவெட்டுதல் | புழுவரித்தல் . |
| புழுவைத்தல் | புழுத்தல் . |
| புழை | துளை ; குழாய் ; சிறுவாயில் ; வாயில் ; காட்டுவழி ; ஒடுக்கவழி ; சாளரம் ; ஏவறை ; நரகம் ; அளறு . |
| புழைக்கடை | வீட்டின் பின்வாயிற்புறம் ; கடைமடை ; நுழைவாயில் . |
| புழைக்கை | துதிக்கை ; யானை . |
| புழைத்தல் | துளையிடுதல் . |
| புள் | பறவைப்பொது : வண்டு ; கணந்துட்பறவை ; பறவை நிமித்தம் ; அவிட்டநாள் ; கைவளை ;மதுபானம் ; கிட்டிப்புள் . |
| புள்வாய்கீண்டோன் | நாரையாக வந்த பகாசுரன் வாயைப் பிளந்த கண்ணபிரான் . |
| புள்ளகம் | மகிழ்ச்சி . |
| புள்ளடி | பறவையின் பாதம் ; அடிச்சுவட்டை யொத்த அடையாளம் ; உரைகல் ; ஒரு செடிவகை ; ஏணி ;மணிக்குற்றங்களுள் ஒன்று . |
| புள்ளடித்தல் | கிட்டிப்புள் ஆடுதல் . |
| புள்ளடிபோடுதல் | கையெழுத்தில் புள்ளடிக் குறியிடுதல் ; கீறல் போடுதல் . |
| புள்ளம் | அரிவாள் ; கொடுவாள் ; அரிவாள் மணை . |
| புள்ளரசு | கருடன் . |
| புள்ளரையன் | கருடன் . |
| புள்ளி | அடையாளம் ; பொட்டுக்குறி ; எழுத்தின் மேலிடும் குத்து அல்லது சுழிக்குறி ; மெய்யெழுத்து ; ஆய்தம் ; குற்றியலிகர உகரங்கள் ; சரக்கின் மேலிடும் விலைமதிப்புக்குறி ; கவற்றின் கட்டம் ; மதிப்பு ; ஆள் ; பேரேடு ; பெருந்தொகை ; இமயமலை ; பல்லி ; நண்டு . |
| புள்ளிக்கண் | மாட்டின் கடைக்கண்ணில் விழும் வெண்ணிறப் புள்ளி . |
| புள்ளிக்கணக்கு | தொழிலுக்குப் பயன்படுங்கணக்கு ; சாகுபடி மதிப்பு ; வரவுசெலவு மதிப்புத் திட்டம் . |
| புள்ளிக்காரன் | கணக்கன் ; செல்வன் . |
| புள்ளிகுத்துதல் | கணக்கெழுதல் ; ஏட்டெழுத்தில் அடிப்புக் குறியாக எழுத்தின் மேல் குத்திடுதல் . |
| புள்ளிபார்த்தல் | அறுவடைக்குமுன் வயலின் விளைவை மதிப்பிடுதல் ; கணக்கை முடித்தல் . |
| புள்ளிபோடுதல் | காண்க : புள்ளிபார்த்தல் ; குறியிடுதல் ; குறிப்பெழுதுதல் . |
| புள்ளிமான் | புள்ளிகளையுடைய மான்வகை . |
| புள்ளிமிருகம் | புள்ளிகளையுடைய மான்வகை . |
| புள்ளியம் | சிறுகுறிஞ்சாக்கொடி . |
| புள்ளியற்கலிமா | பறவையின் வேகமுடைய குதிரை . |
| புள்ளியன்மா | பறவையின் வேகமுடைய குதிரை . |
| புள்ளியிடுதல் | கணக்கிற் குறித்துக்கொள்ளுதல் ; பொருள் விளங்கும்படி சொற்றொடரில் குறியிடுதல் . |
| புள்ளியிரலை | காண்க : புள்ளிமான் . |
| புள்ளிவண்டு | கழுதைவண்டு . |
| புள்ளீடு | சிவகணங்களுள் ஒருவகைப் பேய்க்கூட்டம் ; பிள்ளைநோய் . |
| புள்ளு | பறவை ; சிறுபுள்ளடிப்பூண்டு . |
| புள்ளுரைத்தல் | பறவை ஒலிகொண்டு நிமித்தம் கூறுதல் . |
| புள்ளுவம் | பறவையின் ஓசை ; வஞ்சகம் . |
| புள்ளுவன் | வஞ்சகன் ; வேடன் ; பாலைநிலமகன் ; கீழ்மகன் . |
| புள்ளூர்கடவுள் | கருடன் மேலேறிச் செல்லும் தெய்வமாகிய திருமால் . |
| புள்ளோச்சல் | பறவையை ஓட்டுதல் . |
| புள்ளோப்புதல் | பறவையை ஓட்டுதல் . |
| புள்ளோம்பல் | பறவை காத்தல் ; பறவை வளர்த்தல் . |
| புளகம் | மயிர்க்குச்செறிதல் ; மகிழ்ச்சி ; சோறு ; கண்ணாடி . |
| புளகித்தல் | மிக மகிழ்தல் ; மயிர் சிலிர்த்தல் . |
| புளகிதம் | மயிர்ச்சிலிர்ப்பு ; பெருமகிழ்ச்சி . |
| புளி | புளிப்புச்சுவை ; மரவகை ; புளிங்கறி ; பெண் சரக்குவகை ; தித்திப்பு . |
| புளி | (வி) புளிக்கச்செய் ; நெருங்கு . |
| புளிக்கரைத்தல் | கறிக்காகப் புளியை நீரில் கலத்தல் ; கவலைப்படுதல் ; கவலைப்படச்செய்தல் . |
| புளிக்கறி | புளிச்சாறிட்டு ஆக்கிய கறி . |
| புளிக்குடித்தல் | பிள்ளை பெற்றிருத்தல் . |
| புளிக்குழம்பு | புளியிட்டுச் செய்யும் குழம்பு . |
| புளிங்கறி | காண்க : புளிக்கறி . |
| புளிங்கூழ் | புளியிட்டாக்கிய கூழ்வகை . |
| புளிச்சி | பருத்திவகை . |
| புளிச்சை | ஒரு செடிவகை ; பீளை . |
| புளிஞ்சோறு | புளியிட்டுச் சமைத்த சோறு . |
| புளிஞன் | வேடன் . |
| புளித்தல் | புளிப்பேறியிருத்தல் ; தன்மை திரிதல் ; கைக்கு எட்டாது என்ற காரணத்தால் விட்டு விடுதல் ; கன்றுதல் ; வெறுத்துப்போதல் ; செறிதல் ; சிறுமரவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 787 | 788 | 789 | 790 | 791 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புழுப்பூனை முதல் - புளித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பறவை, காண்க, பறவையின், குறியிடுதல், கருடன், குதிரை, வேகமுடைய, புளியிட்டுச், புள்ளிகளையுடைய, மான்வகை, வேடன், புளி, புளிக்கறி, சோறு, ஓட்டுதல், பறவையை, புள்ளிமான், புளிங்கறி, எழுத்தின், நிமித்தம், கிட்டிப்புள், நோய்வகை, செய்யும், மயிர், மகிழ்ச்சி, அடையாளம், மேலிடும், மதிப்பு, புள்ளி, அரிவாள், செடிவகை, புள்ளிபார்த்தல்

