தமிழ் - தமிழ் அகரமுதலி - புலைச்சி முதல் - புழுப்பகை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| புலைச்சி | புலைப்பெண் ; எவட்சாரம் . |
| புலைச்சேரி | புலையர் வாழும் இடம் . |
| புலைசு | புலால் . |
| புலைஞர் | இழிந்தோர் , சண்டாளர் . |
| புலைத்தனம் | இழிகுணம் ; கொலைக்குணம் . |
| புலைத்தி | இழிகுலப் பெண் ; வண்ணாத்தி . |
| புலைத்தொழில் | இழிசெயல் . |
| புலைப்பாடி | காண்க : புலைச்சேரி . |
| புலைமகன் | கீழ்ச்சாதியான் ; புரோகிதன் ; நாவிதன் . |
| புலைமை | இழிவு ; இழிவான நடை . |
| புலையன் | கீழ்மகன் ; சண்டாளன் ; ஒருசார் மலைச்சாதி ; புரோகிதன் ; பாணன் . |
| புலையாட்டம் | நிலையின்மை . |
| புலையாடி | புலையன் எனப் பொருள்படும் நிந்தைச்சொல் . |
| புலைவினையர் | இழிதொழிலாளர் . |
| புலோமசித்து | புலோமன் என்பவனை வென்ற இந்திரன் . |
| புலோமசை | புலோமன் மகளாகிய இந்திராணி . |
| புவ்வத்தாமரை | திருமாலின் கொப்பூழினின்று எழுந்த தாமரை . |
| புவம் | வானம் . |
| புவலோகம் | மேல் ஏழுலகுள் ஒன்று , பூலோகம் . |
| புவன் | தானே தோன்றிய இறைவன் . |
| புவனகோசம் | பூமி . |
| புவனநாயகன் | உலகிற்கிறைவன் . |
| புவனம் | உலகம் ; பூமி ; இடம் ; மானுடசாதி ; நீர் . |
| புவனி | பூமி . |
| புவனை | பார்வதி . |
| புவி | பூமி ; இடம் . |
| புவிதவிருக்கம் | பெருவாகைமரம் ; வேலிப் பருத்தி . |
| புவிப்பாத்திரம் | மண்கலம் . |
| புழக்கம் | அறிமுகம் ; பழக்கம் ; தோற்றம் ; இடை வெளிவிட்ட தன்மை . |
| புழகு | மலையெருக்கு ; புனமுருங்கை ; செந்நிறப் பூவுள்ள செடி . |
| புழங்குதல் | கையாளுதல் ; பழகுதல் . |
| புழல் | உட்டுளை ; சலதாரை ; பணியாரம் ; மீன் சாதி . |
| புழற்கால் | துளையுள்ள நாளம் . |
| புழு | கிருமி ; கரு . |
| புழுக்கம் | வெப்பம் ; வேர்வை ; துன்பம் ; பொறாமை ; வன்மம் . |
| புழுக்கல் | அவித்தது ; சோறு ; புழுங்கலரிசி ; முதிரைப்பண்டம் . |
| புழுக்கறை | புழுங்கச்செய்யும் அறை . |
| புழுக்கு | அவிக்கை ; புழுங்கவைத்த உணவு ; குழையச் சமைத்த பருப்பு ; பருப்புச்சோறு ; இறைச்சி ; அம்புக்கட்டு . |
| புழுக்குதல் | அவித்தல் ; தீய்த்தல் . |
| புழுக்குவது | அவித்தது ; புழுக்கின நெல் . |
| புழுக்கூடு | நத்தை முதலியவற்றின் கூடு ; உடல் . |
| புழுக்கை | பிழுக்கை ; அடிமை ; காண்க : தொழுத்தை . |
| புழுக்கையன் | மிக இழிந்த மனிதன் ; அடிமையானவன் . |
| புழுக்கொல்லி | காண்க : ஆடுதின்னாப்பாளை ; நாகமல்லி . |
| புழுகு | ஒரு மணப்பண்டவகை ; புழுகுபூனை ; பெரிய புனுகுபூனை ; நாவிப்புழுகு ; அம்புத்தலை ; புளுகு . |
| புழுகுசட்டம் | புனுகுதோன்றும் பூனையின் உறுப்பு ; ஒரு நறுமணப் பொருள் . |
| புழுகுசம்பா | ஒரு நெல்வகை . |
| புழுகுநெய் | புழுகுசட்டத்திலிருந்து எடுக்கும் நறுமணப் பொருள் . |
| புழுகுபூனை | ஒருவகை மணப்பொருள் தரும் பூனைவகை . |
| புழுங்கல் | அவிகை ; அவித்தது ; புழுக்கின தானியம் ; சினக்குறிப்பு ; புழுக்கம் ; வேர்க்கை ; பண்படுத்திய புன்செய் ; நாணயக் குற்றவகை . |
| புழுங்கலரிசி | புழுக்கிய நெல்லின் அரிசி . |
| புழுங்குதல் | ஆவியெழ வேகுதல் ; சிறுக வேகுதல் ; வெப்பத்தாற் புழுக்கமாதல் ; கோபத்தால் வெம்புதல் ; வேர்த்தல் ; காற்றில்லாது வெப்பமாயிருத்தல் ; பொறாமைப்படுதல் ; வாடுதல் ; வருந்துதல் ; சினத்தல் . |
| புழுத்தல் | புழுவுண்டாதல் ; கருத்தரித்தல் ; மிகுதல் ; பயனற்றதாதல் ; பழித்தல் . |
| புழுதி | மண்தூள் ; துகள் ; காய்ந்த நிலம் ; காண்க : புழுதிக்கால் . |
| புழுதிக்காப்பு | காப்பாக நெற்றியிலிடும் மண்பொட்டு . |
| புழுதிக்கால் | ஈரப்பற்றில்லாதபோது நாற்றங்காலுக்கு உழுத நன்செய் . |
| புழுதிப்படலம் | புழுதியின் கூட்டம் . |
| புழுதிப்பயிர் | புழுதிக்காலில் முளைத்த பயிர் . |
| புழுதிபாடு | தரிசுநிலம் . |
| புழுதிபோடுதல் | புழுதியில் உழுது விதைத்தல் . |
| புழுதிமாயம் | ஏமாற்று ; வீண்செலவு செய்கை . |
| புழுதியளைதல் | புழுதியிற் புரளுதல் ; தூசி படிதல் . |
| புழுதியாடுதல் | புழுதியிற் புரளுதல் ; தூசி படிதல் . |
| புழுதிவிதைப்பு | காய்ந்த வயலை உழுது விதைக்கை . |
| புழுது | அம்புக்குதை . |
| புழுப்பகை | காண்க : வாயுவிளங்கம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 786 | 787 | 788 | 789 | 790 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலைச்சி முதல் - புழுப்பகை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பூமி, அவித்தது, இடம், உழுது, காய்ந்த, வேகுதல், புழுதிக்கால், புழுதியிற், படிதல், தூசி, புரளுதல், பொருள், புழுக்கின, புலோமன், புலையன், புரோகிதன், புழுக்கம், புழுங்கலரிசி, புழுகுபூனை, புலைச்சேரி, நறுமணப்

