முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » புறக்கோடி முதல் - புறநிலைமருதம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - புறக்கோடி முதல் - புறநிலைமருதம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| புறக்கோடி | காண்க : புறக்கடை . |
| புறகிடுதல் | காண்க : புறக்கிடுதல் . |
| புறகு | புறம்பானவர் ; புறம்பானது . |
| புறங்கடை | வீட்டின் வெளிப்புறம் ; வெளி வாயில் ; பின்பிறந்தோன் . |
| புறங்காட்டுதல் | அவமதிப்புண்டாகப் பின்புறம் திரும்புதல் ; தோற்றோடுதல் ; வெளிக்குக் காட்டுதல் ; முறியடித்தல் . |
| புறங்காடு | சுடுகாடு ; இடுகாடு . |
| புறங்காணுதல் | முறியடித்தல் . |
| புறங்காத்தல் | பாதுகாத்தல் . |
| புறங்கால் | பாதத்தின் மேற்புறம் ; குதிங்காலின் மேற்புறம் . |
| புறங்காழ் | காண்க : புறக்காழ் . |
| புறங்கான் | முல்லைநிலம் . |
| புறங்கூற்றாளன் | பிறரைக் காணாவிடத்துப் பழிப்போன் . |
| புறங்கூற்று | காணாவிடத்துப் பிறர்மேல் பழி தூற்றுகை . |
| புறங்கூறுதல் | பிறரைக் காணாவிடத்து அவர் மீது குற்றம் கூறுதல் ; மறைபொருளை வெளிபடுத்துதல் . |
| புறங்கை | கையின் பின்புறம் . |
| புறங்கொடுத்தல் | தோற்றோடுதல் , புறங்காட்டுதல் . |
| புறச்சபை | நற்கருணை அனுபவியாத கிறித்தவர் கூட்டம் . |
| புறச்சமயம் | மாறுபட்ட கொள்கையுள்ள மதம் . |
| புறச்சுட்டு | மொழிக்குப் புறத்துறுப்பாய் வரும் சுட்டெழுத்து . |
| புறச்சுவர்தீற்றுதல் | தன்னை அடுத்தாரைவிட்டு அயலார்க்குத் துணைசெய்தல் ; உளத்தூய்மையில்லாதவர் வெளியில் ஒழுங்கானவர்போல் நடத்தல் . |
| புறச்சுற்று | சுற்றுப்புறப்பகுதி ; சுற்றுப்புறவமைதி . |
| புறச்சேரி | நகர்க்குப் புறம்பே மக்கள் வாழும் பகுதி ; பறைச்சேரி . |
| புறச்சொல் | நாடகத்தில் எல்லோரும் கேட்கும் படியாக உரைக்குஞ் சொல் . |
| புறஞ்சாய்தல் | தோற்றல் . |
| புறஞ்சிறை | வீட்டிற்கு அருகிலுள்ள இடம் ; புறம்பானது ; காண்க : புறஞ்சேரி . |
| புறஞ்சிறைப்பாடி | நகரின் வெளிப்புறச் சேரி . |
| புறஞ்சுவர்கோலஞ்செய்தல் | உட்குற்றம் களையாது உடம்பை அலங்கரித்தல் . |
| புறஞ்செய்தல் | உடம்பை அலங்கரித்தல் ; காப்பாற்றுதல் ; வெளியேற்றுதல் . |
| புறஞ்சேரி | நகர்க்கு வெளியே மக்கள் வாழுமிடம் , புறநகர் . |
| புறஞ்சொல் | பழிச்சொல் ; வெளியில் கூறும் அலர்மொழி . |
| புறஞ்சொல்லுதல் | கோட்சொல்லுதல் . |
| புறண்டுதல் | காண்க : பிறாண்டுதல் . |
| புறணி | புறங்கூறல் ; மரப்பட்டை ; மட்டை முதலியவற்றின் புறத்துள்ள நார் ; தோல் ; ஊன் ; புறம்பானது ; குறிஞ்சிநிலம் ; முல்லைநிலம் ; மண்கட்டி . |
| புறணிநாடு | எல்லைப்புறமாயுள்ள நாடு ; அயல்நாடு . |
| புறத்தவன் | அயலான் ; ஊருக்கு வெளியே இருப்பவனான ஐயனார் . |
| புறத்தி | புறம்பானது ; சாயல் . |
| புறத்திடுதல் | வெளிவிடுதல் . |
| புறத்திணை | வெட்சி , வஞ்சி , காஞ்சி , உழிஞை , தும்பை , வாகை , பாடாண் முதலிய புறப்பொருள் பற்றிய ஒழுக்கம் . |
| புறத்தியான் | அயலான் . |
| புறத்திருத்தல் | வெளியே காத்திருத்தல் . |
| புறத்திறுத்தல் | முற்றுகையிடுதல் . |
| புறத்திறை | வேற்றரசனுடைய மதிலை மேற் சென்ற வேந்தன் முற்றுகை செய்தலைக் கூறும் புறத்துறை . |
| புறத்துறவு | அகப்பற்று விடாமல் துறவிபோல் வேடங்கொள்ளுகை . |
| புறத்துறுப்பு | இடம் பொருள் ஏவல்களாகிய பக்கத்துணை ; உடலின் வெளிப்புற உறுப்பு . |
| புறத்துறை | புறத்திணையின் பகுதி . |
| புறத்தொழுக்கம் | பரத்தையரோடு கூடி ஒழுகுகை . |
| புறந்தருதல் | பாதுகாத்தல் ; கைவிடுதல் ; போற்றுதல் ; தோற்றுப்போதல் ; நிறம் உண்டாதல் . |
| புறந்தருநர் | பாதுகாப்பவர் . |
| புறந்தாள் | காண்க : புறங்கால் . |
| புறந்துரத்தல் | எருதுகளை முதுகிலே யடித்து ஓட்டுதல் . |
| புறநகர் | நகரின் வெளிப்பகுதி . |
| புறநடம் | காண்க : புறநாடகம் . |
| புறநடை | விதித்தவற்றுள் அடங்காதவற்றை அமைத்துக்காட்டும் பொதுச்சூத்திரம் . |
| புறநாடகம் | உவகைச் சுவை தவிர மற்றைச் சுவைபற்றிவரும் நாடகவகை . |
| புறநிலை | வெளிப்புறம் ; வேறுபட்ட நிலை ; நூல்வகை ; உதவிநோக்கிப் பிறர் புறங்கடையில் நிற்கும் நிலை ; ஏவல் செய்து பின்னிற்கை ; சாதிப் பெரும்பண் நான்கனுள் ஒன்று . |
| புறநிலைமருதம் | பெரும்பண்வகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 789 | 790 | 791 | 792 | 793 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறக்கோடி முதல் - புறநிலைமருதம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, புறம்பானது, வெளியே, அலங்கரித்தல், உடம்பை, இடம், புறஞ்சேரி, நகரின், கூறும், புறநாடகம், நிலை, புறத்துறை, அயலான், பகுதி, புறநகர், வெளியில், தோற்றோடுதல், முறியடித்தல், பின்புறம், புறங்காட்டுதல், வெளிப்புறம், பாதுகாத்தல், புறங்கால், காணாவிடத்துப், சொல், பிறரைக், முல்லைநிலம், மேற்புறம், மக்கள்

