தமிழ் - தமிழ் அகரமுதலி - பிணைச்சு முதல் - பிதிர்நாள் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பிணைச்சு | புணர்ச்சி . |
| பிணைசொல்லுதல் | பிறருக்காகப் பொறுப்பு ஏற்றல் . |
| பிணைத்தல் | இணைத்தல் ; கட்டுதல் ; கைகோத்தல் . |
| பிணைதல் | சேர்தல் ; செறிதல் ; புணர்தல் . |
| பிணைப்படுதல் | காண்க : பிணைபோதல் . |
| பிணைப்பு | இணைப்பு , சேர்க்கை . |
| பிணைபோதல் | பொறுப்பு ஏற்றுக்கொள்ளுதல் . |
| பிணைமாடு | இணைக்கப்பட்ட மாடுகள் . |
| பிணையடித்தல் | கதிரடிக்க எருதுகளைப் பிணைத்தோட்டுதல் . |
| பிணையல் | ஒன்றுசேர்த்தல் ; மலர்மாலை ; பிணைமாடு ; கதவின் கீல் ; புணர்ச்சி ; காண்க : இணைக்கை . |
| பிணையற்கை | காண்க : இணைக்கை . |
| பிணையன்மாலை | மலர்மாலை . |
| பிணையாளி | பிறருக்காகப் பொறுப்பு ஏற்பவன் . |
| பிணையிலி | தக்கோரால் பேணப்படாதவர் . |
| பிணைவு | இணைவு ; புணர்ச்சி . |
| பித்தக்கட்டி | ஈரற்குலை நோய்வகை . |
| பித்தக்காங்கை | பித்தத்தால் உண்டாகும் சூடு . |
| பித்தக்காசம் | ஒரு காசநோய்வகை . |
| பித்தக்காமாலை | காமாலை நோய்வகை . |
| பித்தக்காய்ச்சல் | பித்தத்தினால் வரும் நோய்வகை . |
| பித்தசாந்தி | பித்தந் தணிக்கும் மருந்து ; காண்க : பொன்னாங்காணி . |
| பித்தசுரம் | காண்க : பித்தக்காய்ச்சல் . |
| பித்தசூடு | காண்க : பித்தக்காங்கை . |
| பித்தசோகை | சோகைநோய்வகை . |
| பித்தநாடி | பித்தநிலையைக் குறிக்கும் நாடி . |
| பித்தப்பை | பித்தநீர் தங்கும் கல்ல¦ரல் . |
| பித்தம் | ஈரலிலிருந்து தோன்றும் நீர்வகை ; பித்தம் என்னும் பிணிக்கூறு ; மயக்கம் ; பைத்தியம் ; கூத்தின்வகை ; மிளகு ; மண்வெட்டிக் கழுத்து . |
| பித்தமயக்கம் | தலைக்கிறுகிறுப்பு ; மயக்கநோய் . |
| பித்தமேல¦டு | பித்தம் அதிகமாக உண்டாதல் . |
| பித்தல் | நினைவு மாறுபட்டுக் குழறுகை ; மண்வெட்டிக் கழுத்து ; விளிம்பு . |
| பித்தலாட்டம் | ஒன்றை மற்றொன்றாய்க் காட்டி வஞ்சிக்கை . |
| பித்தலாடகம் | ஒன்றை மற்றொன்றாய்க் காட்டி வஞ்சிக்கை . |
| பித்தவாயு | குன்மநோய்வகை ; கிறுகிறுப்பு நோய் வகை ; ஈரல்நோய்வகை . |
| பித்தவெடிப்பு | பித்தத்தினால் காலில் உண்டாகும் பிளப்பு . |
| பித்தவெரிவு | பித்தத்தால் எரிச்சல் உண்டாக்கும் நோய்வகை . |
| பித்தளை | செம்பு , துத்தநாக மிவற்றின் கலப்பு . |
| பித்தளையாடகம் | காண்க : பித்தலாட்டம் . |
| பித்தன் | சிவன் , பைத்தியக்காரன் ; மூடன் ; கள்வன் . |
| பித்தாசயம் | காண்க : பித்தப்பை . |
| பித்தாதிக்கம் | பித்தம் அதிகமாக உண்டாதல் . |
| பித்தாதிகாரம் | பித்தம் அதிகமாக உண்டாதல் . |
| பித்தி | சுவர் ; பங்கு ; பித்தம் ; பின்பக்கம் ; காண்க : சாதிமல்லிகை ; பைத்தியக்காரி . |
| பித்திகம் | காண்க : சாதிமல்லிகை ; சிறுசண்பகம் . |
| பித்திகை | சுவர் ; அண்டச்சுவர் ; காண்க : சாதிமல்லிகை ; சிறுசண்பகம் . |
| பித்து | பித்தநீர் ; பைத்தியம் ; அறியாமை ; மிக்க ஈடுபாடு . |
| பித்துக்கொள்ளி | பைத்தியம் பிடித்தவர் . |
| பித்துப்பிடித்தல் | பைத்தியமாதல் . |
| பித்தேறி | பைத்தியங்கொண்டவர் . |
| பித்தை | மக்கள் தலைமயிர் . |
| பித்தோன்மதம் | பைத்தியவெறி . |
| பிதக்குதல் | நசுங்குதல் . |
| பிதகம் | இடி . |
| பிதளை | எண்ணெய்ப் பாண்டம் . |
| பிதற்றர் | பிதற்றுவோர் . |
| பிதற்று | அறிவின்றிப் பேசும் பேச்சு . |
| பிதற்றுதல் | அறிவின்றிக் குழறுதல் ; உணர்வின்றி விடாதுபேசுதல் . |
| பிதா | தந்தை ; கடவுள் ; பிரமன் ; சிவன் ; அருகன் ; காண்க : பெருநாரை . |
| பிதாமகன் | தந்தையைப் பெற்ற பாட்டன் ; பிரமன் . |
| பிதாமகி | தந்தையைப் பெற்ற பாட்டி . |
| பிதி | காண்க : பிதகம் . |
| பிதிகாரம் | கழுவாய் , பரிகாரம் . |
| பிதிர் | பூந்தாது ; பொடி ; திவலை ; துண்டம் ; பொறி ; காலநுட்பம் ; கைந்நொடி ; விடுகதை ; வியத்தகு செயல் ; சேறு ; தந்தை ; யமலோகத்தில் வாழும் தேவசாதியார் ; இறந்த பெற்றோர் முதலியோரின் ஆன்மா . |
| பிதிர் | (வி) பிதுங்கச்செய் . |
| பிதிர்க்கடன் | இறந்தவர்க்குச் செய்யும் கடன் . |
| பிதிர்கருமம் | தந்தைக்குச் செய்யும் ஈமக்கடன் . |
| பிதிர்த்தல் | சொரிவித்தல் ; உதிர்த்தல் . |
| பிதிர்தல் | உதிர்தல் ; சிதறுதல் ; கிழிதல் ; பரத்தல் ; மனங்கலங்குதல் . |
| பிதிர்திதி | ஆண்டுதோறும் தந்தை இறந்த நாளில் செய்யும் சடங்கு ; அமாவாசை . |
| பிதிர்தேவர் | தென்புலத்தார் . |
| பிதிர்ந்த | பிளந்த . |
| பிதிர்நாள் | அமாவாசைபோன்ற பிதிர்க்கடன்கள் செய்தற்குரிய நாள்கள் ; மகநாள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 759 | 760 | 761 | 762 | 763 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிணைச்சு முதல் - பிதிர்நாள் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பித்தம், நோய்வகை, தந்தை, புணர்ச்சி, சாதிமல்லிகை, பைத்தியம், அதிகமாக, செய்யும், பொறுப்பு, உண்டாதல், வஞ்சிக்கை, சிவன், காட்டி, பிதகம், பெற்ற, பிதிர், இறந்த, தந்தையைப், பிரமன், சிறுசண்பகம், மற்றொன்றாய்க், சுவர், கழுத்து, இணைக்கை, பித்தக்காங்கை, மலர்மாலை, பிணைமாடு, பிறருக்காகப், பிணைபோதல், பித்தத்தால், உண்டாகும், மண்வெட்டிக், பித்தலாட்டம், பித்தநீர், பித்தப்பை, பித்தக்காய்ச்சல், பித்தத்தினால், ஒன்றை

