தமிழ் - தமிழ் அகரமுதலி - பிடகன் முதல் - பிடுங்குதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பிடகன் | திரிபிடக ஆசிரியனான புத்தன் ; மருத்துவன் . |
| பிடகாரி | நஞ்சுமருத்துவன் . |
| பிடகை | பூந்தட்டு . |
| பிடங்கு | கத்தியின் முதுகு ; ஆயுதங்களின் அடிப்பாகம் . |
| பிடர் | புறங்கழுத்து ; செருக்கு ; பெருமை . |
| பிடர்த்தலை | புறங்கழுத்து . |
| பிடரி | புறங்கழுத்து . |
| பிடல் | கதவு . |
| பிடவம் | குட்டிப்பிடவமரம் ; மரக்கிளை . |
| பிடவு | ஒரு மரவகை ; குட்டிப்பிடவமரம் . |
| பிடா | ஒரு மரவகை ; குட்டிப்பிடவமரம் . |
| பிடாகை | உட்கிடையூர் . |
| பிடாந்திரம் | இல்லாப் பழி . |
| பிடாம் | போர்வை . |
| பிடார் | செருக்கு ; பெருமை . |
| பிடாரச்சொல் | மருத்துவச்சொல் ; புதிதாய் உண்டாக்கிய சொல் . |
| பிடாரன் | பாம்பு பிடிப்போன் ; மருத்துவன் ; குறவன் , இசை பாடுவோன் . |
| பிடாரி | ஓர் ஊர்த்தேவதை . |
| பிடாரிச்சி | குறப்பெண் . |
| பிடி | பற்றுகை ; மனத்திற் பற்றுகை ; நம்பிக்கை ; மதக்கொள்கை ; கைம்முட்டி ; மற்பிடி ; ஆயுதப்பிடி ; குதிரையின் வாய்க்கருவியிற் கோக்குங்குசை ; உபாயம் ; உறுதி ; உதவி ; உள்ளங்கைப் பிடியளவு ; பணியாரவகை ; நான்கு விரல்கொண்ட ஓர் அளவு ; பெண்யானை ; பேய் ; உலர்ந்தது ; காண்க : ஏலம் ; சீட்டாட்டத்தில் ஒருமுறை எடுக்கப்படும் சீட்டு . |
| பிடிக்கட்டு | பனையோலையின் சிறுகட்டு . |
| பிடிக்கொம்பன் | சிறுகொம்புள்ள விலங்கு . |
| பிடிகம் | பிள்ளைக் கைவளை . |
| பிடிகயிறு | மாடுகட்டுங் கயிறு . |
| பிடிகாரன் | மீன் பிடிப்பவன் ; வேட்டையாடுவோன் . |
| பிடிகை | வண்டிவகை . |
| பிடிகொடுத்தல் | தான் பிடிபடும்படி நிற்றல் ; பேச்சு முதலியவற்றில் அகப்படுதல் ; இடித்தல் . |
| பிடிச்சராவி | கம்மாளர் கருவியுள் ஒன்று . |
| பிடித்தபிடி | விடாப்பிடி ; பிடிவாதமான கொள்கை ; பிடிவாதகுணம் . |
| பிடித்தம் | கழிவு ; சிக்கனம் ; மனப்பொருத்தம் ; விருப்பம் . |
| பிடித்தல் | கைப்பற்றுதல் ; வயப்படுத்துதல் ; அகப்படுத்துதல் ; கட்டுதல் ; புகலடைதல் ; அடைதல் ; உட்கொள்ளுதல் ; மேற்கொள்ளுதல் ; தாங்குதல் ; நிறுத்திக்கொள்ளுதல் ; நிழற்படமெடுத்தல் ; அபிநயம் முதலியன செய்து காட்டுதல் ; பற்றிக்கொள்ளுதல் ; தெரிதல் ; விலைக்கு மொத்தமாகக் கொள்ளுதல் ; பொருத்துதல் ; உறுதியாகக் கொள்ளுதல் ; குறிக்கொள்ளுதல் ; சுளுக்குதல் ; விதையடித்தல் ; அழுத்தித்தடவுதல் ; மூடிய கையளவு கொள்ளுதல் ; ஒட்டிக்கொள்ளுதல் ; பிரியமாதல் ; ஏற்றதாதல் ; செலவாதல் ; நிகழ்தல் ; அடங்குதல் . |
| பிடித்தாடி | பலகறை . |
| பிடித்து | கைப்பிடிப்பொருள் ; தொடங்கி . |
| பிடித்துக்கொள்ளுதல் | சுளுக்குதல் . |
| பிடிதம் | பிச்சை . |
| பிடிநாள் | நல்ல நாள் . |
| பிடிப்பிச்சை | பிடியளவிடும் பிச்சை . |
| பிடிப்பிட்டு | சிற்றுண்டிவகை . |
| பிடிப்பித்தல் | விதையடித்தல் , காயடித்தல் . |
| பிடிப்பு | பற்றுகை ; ஒட்டுகை ; வாயுப்பற்று ; காண்க : பிடித்தம் ; கருத்து ; சேர்க்கப்பட்ட பொருள் ; தளை ; உறுதி ; கைப்பிடி ; கைகூடல் ; ஆதாரம் . |
| பிடிபடுதல் | அகப்படுதல் ; பிடிக்கப்படுதல் ; புலப்படுதல் ; அடைதல் ; இணங்குதல் . |
| பிடிபாடு | பிடிக்கப்பட்டது ; சேர்க்கப்பட்டது ; ஆதாரம் ; பற்று . |
| பிடிபிடியெனல் | விரைவுக்குறிப்பு . |
| பிடிமானம் | காண்க : பிடித்தம் ; சேர்மானம் ; உறுதி ; கைப்பிடி . |
| பிடியரிசி | அறஞ்செய்யக் கைப்பிடியளவாக அள்ளிவைக்கும் அரிசி . |
| பிடியல் | சிறுதுகில் ; நல்லாடை . |
| பிடியாள் | பிடித்தடைக்கப்பட்டவன் ; அமஞ்சி வேலைக்காரன் ; கூலிக்காக அமர்த்தப்பட்டவன் . |
| பிடிவாதக்காரன் | தான் கொண்டதை விடாது சாதிப்பவன் . |
| பிடிவாதம் | கொண்டதுவிடாமை ; உறுதியுள்ள நிலை . |
| பிடிவாதி | காண்க : பிடிவாதக்காரன் . |
| பிடிவிடுதல் | கைப்பிடிவிடுதல் ; அன்பு நீங்குதல் . |
| பிடுக்கு | பீசம் , விதை . |
| பிடுகு | இடி . |
| பிடுங்கல் | வலிந்து எடுக்கை ; பொருள் பறித்தல் ; தொந்தரவு ; தொந்தரவு செய்பவர் . |
| பிடுங்கித்தின்னுதல் | கொத்தித்தின்னுதல் ; கவர்ந்துண்ணுதல் ; வருத்துதல் . |
| பிடுங்கிவிடுதல் | வருத்துதல் ; ஓடிப்போதல் . |
| பிடுங்குதல் | பறித்தல் ; கவர்தல் ; தடையை அடித்துக்கொண்டு விரைந்து செல்லுதல் ; கொத்துதல் ; வருத்துதல் ; மிகுதியாதல் ; தொல்லைகொடுத்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 757 | 758 | 759 | 760 | 761 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிடகன் முதல் - பிடுங்குதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, உறுதி, கொள்ளுதல், வருத்துதல், பற்றுகை, பிடித்தம், புறங்கழுத்து, குட்டிப்பிடவமரம், கைப்பிடி, பொருள், ஆதாரம், பறித்தல், மருத்துவன், தொந்தரவு, பிச்சை, பிடிவாதக்காரன், சுளுக்குதல், தான், செருக்கு, பெருமை, அகப்படுதல், சொல், மரவகை, அடைதல், விதையடித்தல்

