தமிழ் - தமிழ் அகரமுதலி - பிடை முதல் - பிணை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பிடை | குகை . |
| பிண்டக்காப்பு | சோறு . |
| பிண்டகருமம் | பிண்டம் வைத்துப் பிதிரர்க்குச் செய்யும் சடங்கு . |
| பிண்டசூத்திரம் | தலைமைப் பொருளைப் பொதுப்படக் கூறும் சூத்திரம் . |
| பிண்டதன் | தாயாதி ; பந்து ; உதவுபவன் . |
| பிண்டதானம் | பிதிரர்களுக்குப் பிண்டமளிக்கை . |
| பிண்டப்பிரதானம் | பிதிரர்களுக்குப் பிண்டமளிக்கை . |
| பிண்டப்பொருள் | கருத்து . |
| பிண்டபுட்பம் | அசோகமரம் ; காண்க : செவ்வந்தி . |
| பிண்டம் | உண்டை ; உருவற்ற கரு ; உடல் ; சோற்றுத்திரள் ; பிதிரர் பொருட்டுக் கொடுக்கப்படுஞ் சோற்றுருண்டை ; தொகுதி ; காண்க : பிண்டசூத்திரம் , சூத்திரம் , ஓத்து , படலம் என்னும் மூன்றுறுப்புக் கொண்ட நூல் . |
| பிண்டம்பிடித்தல் | உருண்டையாக்குதல் ; படைத்தல் ; உருச்சிதைத்து உருண்டையாக்குதல் ; கரு உண்டாதல் . |
| பிண்டம்விழுதல் | கருச்சிதைவு . |
| பிண்டவுரை | பொழிப்புரை . |
| பிண்டாண்டம் | பிண்டமும் அண்டமும் . |
| பிண்டாரன் | இடையன் ; இரவலன் . |
| பிண்டாரி | கொள்ளைக்காரன் . |
| பிண்டி | நுண்ணிய பொடி ; காண்க : பிண்ணாக்கு ; வடிவம் ; கூட்டம் ; புனர்பூசநாள் ; இணையாவினைக்கைவகை ; அசோகமரம் . |
| பிண்டிக்கை | இணையா வினைக்கைவகை . |
| பிண்டிகரணம் | தொகுக்கப்பட்டது . |
| பிண்டிகை | இருக்கை ; கடிவாளம் . |
| பிண்டித்தல் | திரளையாக்குதல் ; தொகுத்தல் ; திரளுதல் . |
| பிண்டிப்பகவன் | அருகன் . |
| பிண்டிப்பாலம் | எறியாயுதம் . |
| பிண்டியார் | சமணர் . |
| பிண்டியான் | அருகக்கடவுள் . |
| பிண்டிவாமன் | அருகக்கடவுள் . |
| பிண்டிவாலம் | எறியாயுதம் . |
| பிண்டீகரணம் | உருண்டையாக்கல் ; திரட்டப்பட்டது . |
| பிண்டு | உடல் . |
| பிண்டோதகம் | பிதிரர்க்கு அளிக்கப்படும் நீர்க்கடன் . |
| பிண்ணாக்கு | எள்ளு , கடலை முதலியவற்றின் எண்ணெய் நீக்கிய சக்கை ; காண்க : எள்ளுப்பிண்ணாக்கு . |
| பிண்ணாக்குமூடன் | முழுமூடன் . |
| பிணக்கட்டில் | பாடை . |
| பிணக்கம் | மாறுபாடு ; ஊடல் ; நெருக்கடி ; பின்னுகை . |
| பிணக்கன் | மாறுபாடுள்ளவன் . |
| பிணக்காடு | சுடுகாடு ; போர்க்களம் . |
| பிணக்கு | காண்க : பிணக்கம் ; தூறு . |
| பிணக்கோலம் | பிணத்தை அலங்கரிக்கை ; பிணம் போல் தோற்றுகை . |
| பிணங்குதல் | மாறுபடுதல் ; ஊடுதல் ; செறிதல் ; பின்னுதல் . |
| பிணந்தின்னி | பிணந்தின்போன் ; பிறரைத் துன்புறுத்துவோன் . |
| பிணநாற்றம் | பிணத்தின் கொடிய தீநாற்றம் . |
| பிணநெஞ்சு | உணர்ச்சியற்ற மனம் . |
| பிணப்பறை | சாப்பறை . |
| பிணம் | சவம் ; பிசாசம் . |
| பிணர் | சருச்சரை ; கோங்கிலவுமரம் . |
| பிணவல் | பன்றி , நாய் , மான் முதலியவற்றின் பெட்டை . |
| பிணவு | பெண் . |
| பிணன் | காண்க : பிணம் . |
| பிணா | காண்க : பிணவு . |
| பிணாப்பிள்ளை | பெண்பிள்ளை . |
| பிணாரம் | பருமனுள்ளது ; விலங்கின் பருமன் . |
| பிணி | நோய் ; கட்டுகை ; கட்டு ; பற்று ; பின்னல் ; அரும்பு ; துன்பம் ; நெசவுத்தறியின் நூற்படை . |
| பிணி | (வி) கட்டு , பிணிஎன் ஏவல் . |
| பிணிக்குறை | குழந்தைகட்கு நோயை உண்டாக்கும் பேய்க்கோள் . |
| பிணிகை | கச்சு . |
| பிணித்தல் | சேர்த்துக்கட்டுதல் ; வயப்படுத்துதல் . |
| பிணித்தோர் | நோயாளிகள் . |
| பிணிதல் | சாதல் . |
| பிணிதெறித்தல் | நோய் குணமாகத் தொடங்குகை . |
| பிணிப்பு | கட்டுகை ; கட்டு ; பற்று . |
| பிணிமுகம் | மயில் ; பறவை ; அன்னம் ; முருகக் கடவுளின் யானை . |
| பிணியகம் | காவலிடம் . |
| பிணியன் | நோய்வாய்ப்பட்டவன் . |
| பிணியாளன் | நோய்வாய்ப்பட்டவன் . |
| பிணியாளி | நோய்வாய்ப்பட்டவன் . |
| பிணியோலை | பிள்ளைகளின் இடுப்பில் எழுதிக் கட்டும் இரட்சையோலை . |
| பிணிவீடு | இடையூறு நீங்குகை . |
| பிணுக்கன் | மாறுபட்ட கொள்கையினன் . |
| பிணை | இணைக்கப்படுகை ; உடன்பாடு ; பொருத்து ; கட்டு ; உத்தரவாதம் ; விலங்குகளின் பெண் ; பெண்மான் ; பூமாலை ; புறந்தருகை ; விருப்பம் ; தெப்பம் . |
| பிணை | (வி) பிணையிடு ; கட்டு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 758 | 759 | 760 | 761 | 762 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிடை முதல் - பிணை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கட்டு, நோய்வாய்ப்பட்டவன், பிணம், பெண், பிணவு, பிணி, கட்டுகை, பிணை, பற்று, பிணக்கம், நோய், அருகக்கடவுள், பிண்டமளிக்கை, பிதிரர்களுக்குப், சூத்திரம், பிண்டசூத்திரம், அசோகமரம், உடல், பிண்டம், எறியாயுதம், பிண்ணாக்கு, உருண்டையாக்குதல், முதலியவற்றின்

