தமிழ் - தமிழ் அகரமுதலி - பானுபலை முதல் - பிசண்டம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
பானுபலை | வாழை . |
பானுமைந்தன் | கன்னன் ; சனி ; சுக்கிரீவன் ; யமன் . |
பானுவாரம் | ஞாயிற்றுக்கிழமை . |
பானை | மண்மிடா ; ஓர் அளவு . |
பானைக்குடுவை | சிறுபானை . |
பானைமூடி | பானையை மூட உதவும் கலன் . |
பி | ஓர் உயிர்மெய்யெழுத்து(ப்+இ) ; பிறவினை விகுதி . |
பிக்கம் | யானைக்கன்று ; இருவேலி . |
பிக்கல்பிடுங்கல் | தொல்லை . |
பிக்காரி | வறிஞன் . |
பிக்கு | சிக்கு ; பிசகு ; குழப்பம் ; ஒவ்வாமை ; பௌத்தத்துறவி . |
பிக்குணி | பௌத்தப் பெண்துறவி . |
பிகபந்து | குயிலின் நண்பனான மாமரம் . |
பிகம் | குயில் . |
பிகவல்லபம் | காண்க : பிகபந்து . |
பிகி | பெண்குயில் . |
பிகு | இறுக்கம் ; பலம் ; செருக்கு ; எடுத்த குரல் . |
பிகுபண்ணுதல் | தன்னை அருமைப்படுத்திக் கொள்ளல் . |
பிகுவு | இறுக்கம் ; பலம் ; செருக்கு ; ஓரளவு கொண்ட அவுரிக்கட்டு . |
பிகுவேற்றுதல் | இறுகச்செய்தல் ; வளைத்தல் . |
பிங்கதிருட்டி | பிங்கநிறக் கண்ணுடைய சிங்கம் . |
பிங்கம் | பொன்மை கலந்த சிவப்பு . |
பிங்கலம் | பொன் ; பொன்மைநிறம் ; வடக்கு ; அரிதாரநிறம் ; பிங்கல நிகண்டு ; எச்சில் உமிழும் படிக்கம் . |
பிங்கலன் | குபேரன் ; சிவன் ; சூரியன் ; தீ ; பிங்கல நிகண்டு செய்த ஆசிரியன் . |
பிங்கலாதனம் | யோகாசனவகை . |
பிங்கலை | பத்து நாடியுள் ஒன்று ; வலமூக்கு வழியாக வரும் மூச்சு ; ஆந்தைவகை ; எண்திசை யானைகளுள் வாமனத்துக்குரிய பெண்யானை ; பார்வதி . |
பிங்கள | அறுபதாண்டுக்கணக்கில் ஐம்பத்தோராம் ஆண்டு . |
பிங்களம் | பொன்னிறம் ; அரிதாரநிறம் ; வஞ்சகம் ; களிம்பு ; வேறுபாடு . |
பிங்களித்தல் | அருவருத்தல் ; பின்வாங்குதல் . |
பிங்களை | எண்திசை யானைகளுள் வாமனத்துக்குரிய பெண்யானை ; வாழ்நாளுள் மூன்று பகுதியுள் இரண்டாவது . |
பிங்காசம் | ஒரு பொன்வகை . |
பிங்காசி | காண்க : அவுரி . |
பிங்காளம் | பாண்டவகை . |
பிங்கி | வன்னிமரம் . |
பிங்குசம் | தலைக்கோலம் . |
பிச்சடம் | ஈயம் ; துத்தநாகம் . |
பிச்சப்பழம் | சருக்கரைக்கொம்மட்டிப் பழம் . |
பிச்சம் | இறகு ; ஆண்பால் மயிர் ; பீலிக்குஞ்சம் ; பீலிக்குடை ; மயிலின் தோகை ; எஞ்சி நிற்பது ; எட்டிமரம் ; காண்க : இருவேரி(லி) . |
பிச்சன் | பைத்தியக்காரன் ; மருண்டவன் ; சிவன் . |
பிச்சாடனம் | பிச்சையெடுத்தல் . |
பிச்சாடனன் | காண்க : பிட்சாடனன் . |
பிச்சாபாத்திரம் | இரப்போர் கலம் . |
பிச்சி | காண்க : சாதிமல்லிகை . முல்லை ; சிறு செண்பகம் ; பித்துப்பிடித்தவள் ; சைவ தவப்பெண் ; ஒரு பெண்பேய் ; பைத்தியம் பிடித்தவர் ; சருக்கரைக்கொம்மட்டி . |
பிச்சியார் | சைவ தவப்பெண் ; கலம்பக உறுப்பு வகையுள் ஒன்று . |
பிச்சிலம் | ஈரம் ; குழம்பு ; கஞ்சி . |
பிச்சு | பித்தநீர் ; பைத்தியம் . |
பிச்சுவா | கையீட்டி ; நுனியில் கூருடைய கத்தி . |
பிச்சை | தருமம் ; இரப்போர்க்கிடும் உணவு ; வாழைமரம் ; நூக்கமரம் ; மரகதம் ; படிகம் ; சருக்கரைக்கொம்மட்டி . |
பிச்சைக்காரன் | இரவலன் . |
பிச்சைச்சோறு | இரந்து பெற்ற அன்னம் ; பிடியன்னம் . |
பிச்சைத்தனம் | இரக்குங்குணம் ; இழிகுணம் ; வறுமை . |
பிச்சைத்தேவன் | சிவபிரான் . |
பிச்சைப்படி | சிறு படிவகை . |
பிசக்கு | தவறு ; ஒவ்வாமை . |
பிசக்குதல் | அழுக்காக்குதல் ; கசக்குதல் . |
பிசகு | தவறு ; ஒவ்வாமை ; இடையூறு ; தடை . |
பிசகுசொல்லுதல் | குற்றங்கூறுதல் ; தடை நிகழ்த்துதல் . |
பிசகுதல் | தவறுதல் ; உறுப்புப் பிறழ்தல் ; வழுக்கி விழுதல் ; தடைப்படுதல் ; மந்தமாதல் . |
பிசகுநாறுதல் | கேடுறுதல் . |
பிசங்கம் | காண்க : பிங்கம் . |
பிசங்கல் | அழுக்கடைந்த ஆடை . |
பிசங்குதல் | அழுக்காதல் . |
பிசண்டம் | வயிறு ; விலங்கின் முதுகு . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 755 | 756 | 757 | 758 | 759 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பானுபலை முதல் - பிசண்டம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒவ்வாமை, பெண்யானை, வாமனத்துக்குரிய, சிறு, எண்திசை, யானைகளுள், பைத்தியம், தவறு, சருக்கரைக்கொம்மட்டி, ஒன்று, தவப்பெண், நிகண்டு, பலம், இறுக்கம், பிகபந்து, செருக்கு, பிங்கம், பிசகு, பிங்கல, அரிதாரநிறம், சிவன்