தமிழ் - தமிழ் அகரமுதலி - பாளை முதல் - பானு வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
பாளை | பாக்கு , தெங்கு , பனை முதலியவற்றின் பூவை மூடிய மடல் ; செம்பாளைநெல் ; பதர் ; சுறாவின் ஈரல் ; கருப்பருவம் ; ஐந்து ஆண்டுக்கு உட்பட்ட பருவம் . |
பாளைக்கத்தி | கள்ளிறக்குவோர் கைக்கொள்ளும் வெட்டுக்கத்தி . |
பாளைசீவுதல் | கள்ளிறக்கப் பாளையைச் சீவுதல் . |
பாளையப்பட்டு | அரசருக்குப் போரில் உதவி செய்யும் நிபந்தனையுடன் படைத்தலைவருக்கு விடப்படும் ஊர்த்தொகுதி . |
பாளையம் | படை ; பாசறை ; பொற்றை சூழ்ந்த ஊர் ; குறுநிலமன்னரூர் . |
பாளையமிறங்குதல் | படைவந்து இருத்தல் . |
பாற்கட்டி | கட்டிப்பால் ; குழந்தைகளின் வயிற்றில் உண்டாகும் கட்டி . |
பாற்கட்டு | குழந்தை குடியாமையால் முலையில் பால்சுரந்து தேங்குகை . |
பாற்கடல் | ஏழு கடல்களுள் பால்மயமான கடல் . |
பாற்கதிர் | நிலா . |
பாற்கரன் | சூரியன் . |
பாற்கரியம் | பிரமத்தினின்றும் உலகம் தோன்றிற்று என்னும் மதம் . |
பாற்கரியோன் | இந்திரன் . |
பாற்கலசம் | பால் கறக்கும் கலம் . |
பாற்கலயம் | பால் கறக்கும் கலம் . |
பாற்கவடி | வெள்ளைச் சோகி . |
பாற்காரன் | பால் விற்போன் . |
பாற்காரி | பால் விற்பவள் ; குழந்தைகளுக்குத் தன் முலைப்பாலைக் கொடுத்து வளர்க்கும் செவிலித்தாய் . |
பாற்காவடி | பாற்குடங்கள் கொண்ட காவடி . |
பாற்கிண்டல் | பால் கலந்த உணவுவகை . |
பாற்குழந்தை | கைக்குழந்தை . |
பாற்குழம்பு | நன்றாகக் காய்ந்து ஏடுபடிந்த பால் . |
பாற்குனம் | உத்தரநாள் ; பங்குனிமாதம் . |
பாற்குனி | உத்தரநாள் ; பங்குனிமாதம் . |
பாற்கூழ் | பாற்சோறு . |
பாற்கெண்டை | ஒரு மீன்வகை . |
பாற்சுண்டு | பால்காய்ச்சிய பானையின் அடியிற்பற்றிய பாற்பற்று ; தலையில் தோன்றும் பொடுகு . |
பாற்சொக்கு | செல்வமகிழ்ச்சி . |
பாற்சோற்றி | ஒரு பூண்டுவகை . |
பாற்சோறு | பால்கலந்த அன்னம் . |
பாற்பசு | கறவைப்பசு . |
பாற்பட்டார் | துறவியர் . |
பாற்படுதல் | ஒழுங்குபடுதல் ; நன்முறையில் நடத்தல் . |
பாற்பல் | முதன்முதல் முளைக்கும் பல் . |
பாற்பாக்கியம் | கறவைப்பசுக்களை அடைந்திருக்கும் பேறு . |
பாற்புட்டி | குழந்தைகளுக்குப் பாலூட்டும் புட்டி . |
பாற்பொங்கல் | பாலில் சமைத்த சோறு . |
பாற்போனகம் | காண்க : பாற்கூழ் . |
பாற்றம் | செய்தி . |
பாற்று | உரியது . |
பாற்றுதல் | நீக்குதல் ; அழித்தல் . |
பாறல் | எருது ; இடபராசி ; மழைப்பாட்டம் . |
பாறு | கேடு ; பருந்து ; கழுகு ;மரக்கலம் . |
பாறுதல் | அழிதல் ; சிதறுதல் ; நிலைகெட்டோடுதல் ; கிழிபடுதல் ; அடிபறிதல் ; ஒழுங்கற்றுப் பரந்துகிடத்தல் ; பொருதல் ; கடத்தல் . |
பாறுபாறாக்குதல் | சிதைத்தல் . |
பாறை | பூமியிலுள்ள கருங்கல்திரள் ; சிறுதிட்டை ; மீன்வகை . |
பாறைபடுதல் | இறுகுதல் . |
பாறையுப்பு | கல்லுப்பு . |
பான் | ஒரு வினையெச்ச விகுதி . |
பான்மடை | காண்க : பாற்சோறு . |
பான்மயக்கம் | ஒரு பாற்குரிய சொல் வேறொரு பாற்குரிய சொல்லுடன் வழங்கல் . |
பான்மாறுதல் | பால்குடி மறத்தல் ; வருந்துதல் ; சோம்பலாயிருத்தல் . |
பான்முல்லை | தலைவியைக் கூடிய தலைவன் தங்களிருவரையும் கூட்டிவைத்த நல்வினையைப் புகழ்ந்து கூறும் துறை . |
பான்மை | குணம் ; தகுதி ; பகுதி ; முறைமை ; சிறப்பு ; நல்வினைப் பயன் . |
பானக்கம் | சருக்கரை ; ஏலம் முதலியன கலந்த குடிநீர்வகை ; நீர்மோர் ; குடிக்கை . |
பானகம் | சருக்கரை ; ஏலம் முதலியன கலந்த குடிநீர்வகை ; நீர்மோர் ; குடிக்கை . |
பானசம் | பலாச்சுளையிலிருந்து வடித்த கள் . |
பானசியர் | சமையற்காரர் . |
பானண்டு | காண்க : பால்நண்டு . |
பானபரம் | குடிக்கை . |
பானபாத்திரம் | கிண்ணம் . |
பானம் | குடிக்கை ; குடித்தற்கு நீர் அளிக்கை ; கள் ; பருகும் உணவு . |
பானல் | மருதநிலம் ; வயல் ; காண்க : கருங்குவளை , கடல் ; கள் ; குதிரை ; வெற்றிலை . |
பானாள் | நள்ளிரவு . |
பானி | பருகுவோன் ; படை . |
பானித்தல் | குடித்தல் . |
பானியம் | நீர் ; பருகும் உணவு . |
பானீயம் | நீர் ; பருகும் உணவு . |
பானு | சூரியன் ; ஒளி ; அழகு ; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; தலைவன் ; அரசன் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 754 | 755 | 756 | 757 | 758 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாளை முதல் - பானு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பால், காண்க, குடிக்கை, பாற்சோறு, கலந்த, நீர், பருகும், உணவு, சருக்கரை, ஏலம், முதலியன, தலைவன், நீர்மோர், குடிநீர்வகை, மீன்வகை, கறக்கும், சூரியன், கடல், கலம், உத்தரநாள், சொல், பாற்கூழ், பங்குனிமாதம், பாற்குரிய