தமிழ் - தமிழ் அகரமுதலி - பாவாற்றுதல் முதல் - பாளிதம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பாவாற்றுதல் | நெசவுப்பாவைத் தறிக்கு ஆயத்தம் செய்தல் . |
| பாவி | தீமையாளன் ; சாது ; வரக்கூடியது ; பேதை . |
| பாவி | (வி) மதி ; பாவனைசெய் . |
| பாவிகம் | தொடக்கமுதல் முடிவுவரை வனப்புடையதாக அமையும் காப்பியப் பண்பு . |
| பாவிட்டன் | கொடும்பாவஞ் செய்தவன் . |
| பாவித்தல் | எண்ணுதல் ; தியானித்தல் ; பாவனைசெய்தல் ; பொய்யாக நடித்தல் ; நுகர்தல் . |
| பாவியம் | காப்பியம் ; பாவிக்கத்தக்கது ; தகுதி . |
| பாவியர் | குறிப்புடையவர் . |
| பாவிரிமண்டபம் | சங்கமண்டபம் . |
| பாவினம் | தாழிசை ; துறை , விருத்தம் என்னும் முப்பகுதியான பாவின்வகை . |
| பாவு | நெசவுப்பா ; இரண்டுபாக வளவு ; இரண்டு பலங்கொண்ட நிறுத்தலளவை . |
| பாவுகல் | தளம் பரப்புங் கல் . |
| பாவுதல் | படர்தல் ; பரவுதல் ; ஊன்றுதல் ; தளவரிசையிடுதல் ; நாற்றுக்கு நெருக்கி விதைத்தல் ; நாற்று நடுதல் ; தாண்டுதல் ; பரப்புதல் . |
| பாவுபலகை | மேல்தளமாகப் பரப்பும் பலகை . |
| பாவை | பொம்மைபோன்ற அழகிய பெண் ; பதுமை ; அழகிய உருவம் ; கருவிழி ; பெண் ; குரவமலர் ; காண்க : பாவைக்கூத்து ; நோன்பு வகை ; திருவெம்பாவை ; திருப்பாவை ; இஞ்சிக்கிழங்கு ; மதில் . |
| பாவைக்கூத்து | அவுணர் மோகித்து விழுமாறு திருமகள் கொல்லிப்பாவை வடிவுகொண்டு ஆடிய ஆடல் ; பொம்மலாட்டம் . |
| பாவைத்தீபம் | கோயிலில் வழங்கும் தீப ஆராதனைக் கருவிவகை . |
| பாவைப்பாட்டு | திருப்பாவை திருவெம்பாவைகளில் உள்ளவைபோல நான்கடியின் மிக்குவருஞ் செய்யுள்வகை . |
| பாவையாடல் | காண்க : பாவைக்கூத்து ; பெண்பாற் பிள்ளைத்தமிழின் உறுப்புகளுள் பாட்டுடைத் தலைவி பாவை வைத்து விளையாடுகை . |
| பாவையிஞ்சி | இஞ்சிக்கிழங்கு . |
| பாவைவிளக்கு | பெண் கையில் தாங்கிநிற்பது போல அமைக்கும் விளக்கு , பதுமைவிளக்கு . |
| பாவோடல் | நெசவில் இழையோடுந் தடி . |
| பாவோடுதல் | நெய்வார் தொழிலினொன்று , நூலை நெசவுப் பாவாக்குதல் ; சலித்துக் கொண்டே இருத்தல் . |
| பாழ் | அழிவு ; இழப்பு ; கெடுதி ; இழிவு ; அந்தக் கேடு ; வீண் ; வெறுமை ; இன்மை ; ஒன்றுமில்லாத இடம் ; தரிசுநிலம் ; குற்றம் ; வானம் ; மூலப்பகுதி ; புருடன் . |
| பாழ்க்கடித்தல் | அழித்தல் . |
| பாழ்க்கிறைத்தல் | காண்க : பாழுக்கிறைத்தல் . |
| பாழ்க்கோட்டம் | சுடுகாடு . |
| பாழ்ங்கிணறு | தூர்ந்து அல்லது இடிந்து பாழான கிணறு . |
| பாழ்ங்குடி | சீர்கெட்ட குடும்பம் . |
| பாழ்ஞ்சேரி | குடியிருப்பற்ற ஊர்ப்பகுதி . |
| பாழ்த்தல் | அழிவடைதல் ; பயனறுதல் ; சீர்குன்றுதல் . |
| பாழ்ந்தாறு | படுகுழி . |
| பாழ்ந்துரவு | காண்க : பாழ்ங்கிணறு . |
| பாழ்நிலம் | விளைவுக்குதவாத நிலம் . |
| பாழ்படுதல் | கேடுறுதல் ; ஒளிமங்குதல் . |
| பாழ்ம்புறம் | குடியோடிப்போன நிலப்பகுதி . |
| பாழ்மூலை | எளிதிற் செல்லமுடியாது சேய்மையிலுள்ள இடம் . |
| பாழ்வாய்கூறுதல் | நன்றியை மறந்து முணுமுணுத்தல் . |
| பாழ்வீடு | குடியில்லாத வீடு . |
| பாழ்வெளி | வெட்டவெளி ; பரவெளி . |
| பாழாக்குதல் | பயனில்லாததாகச் செய்தல் . |
| பாழாதல் | ஊழ்த்தல் ; கெடுதல் . |
| பாழி | அகலம் ; உரை ; குகை ; இடம் ; கோயில் ; நகரம் ; மருதநிலத்தூர் ; பகைவரூர் ; முனிவர் வாழிடம் ; மக்கள் துயிலிடம் ; விலங்கு துயிலிடம் ; சிறுகுளம் ; இறங்குதுறை ; இயல்பு ; எலிவளை ; சொல் ; வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று ; வெறுமை ; வானம் ; கடல் ; பாசறை ; பெருமை ; வலிமை ; போர் . |
| பாழிமை | வெறுமை ; வலிமை . |
| பாழிவாய் | கழிமுகத்துத் திட்டு . |
| பாழுக்கிறைத்தல் | வீணாகச் செயல் செய்தல் . |
| பாழூர் | குடிநீங்கிய ஊர் . |
| பாளச்சீலை | புண்ணுக்கிடும் மருந்துபூசிய சீலை . |
| பாளம் | உலோகக்கட்டி ; தகட்டு வடிவம் ; வெடித்த தகட்டுத்துண்டு ; தோலுரிவு ; வெடியுப்பு ; சீலையின் கிழிவு ; பளபளப்பு . |
| பாளயம் | காண்க : பாளையம் . |
| பாளாசக்கயிறு | குதிரையின் காலுக்குக் கட்டுங் கயிறு . |
| பாளி | அடையாளம் ; பணித்தூசு ; விதானச்சீலை . |
| பாளிதம் | சோறு ; பாற்சோறு ; குழம்பு ; பட்டுப்புடைவை ; விதானச்சீலை ; பணித்தூசு ; கண்டசருக்கரை ; பச்சைக்கருப்பூரம் ; சந்தனம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 753 | 754 | 755 | 756 | 757 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாவாற்றுதல் முதல் - பாளிதம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பாவைக்கூத்து, இடம், வெறுமை, பெண், செய்தல், விதானச்சீலை, பாழ்ங்கிணறு, துயிலிடம், வலிமை, பணித்தூசு, பாழுக்கிறைத்தல், இஞ்சிக்கிழங்கு, பாவை, பாவி, அழகிய, திருப்பாவை, சொல், வானம்

