தமிழ் - தமிழ் அகரமுதலி - பாலிசம் முதல் - பாவாற்றி வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
பாலிசம் | அறியாமை . |
பாலிசன் | மூடன் . |
பாலித்தல் | காத்தல் ; கொடுத்தல் ; விரித்தல் ; அருளுதல் . |
பாலியம் | குழந்தைப்பருவம் ; இளம்பருவம் . |
பாலியன் | ஆண்குழந்தை ; இளைஞன் . |
பாலிறங்குதல் | பால் தொண்டைவழிச் செல்லுகை ; அம்மைப்பால் வற்றுகை . |
பாலிறுவி | முருங்கைமரம் . |
பாலுகம் | கருப்பூரம் . |
பாலுண்ணி | உடம்பில் உண்டாகும் ஒருவகைச் சதைவளர்ச்சி . |
பாலேடு | காய்ச்சிய பாலின்மேற் படியும் ஆடை . |
பாலேயம் | கழுதை ; சிறுமுள்ளங்கி ; மென்மை . |
பாலை | முல்லையும் குறிஞ்சியும் திரிந்த நிலம் ; பாலைத்தன்மை ; புறங்காடு ; பாலைநிலத்து உரிப்பொருளாகிய பிரிவு ; காண்க : இருள்மரம் ; முள்மகிழ் ; மரவகை ; பெரும்பண்வகை ; ஒரு யாழ்வகை ; பாலையாழிற் பிறக்கும் எழுவகைப் பண்வகை ; புனர்பூசம் ; மிருகசீரிடநாள் ; கவறாட்டத்து வழங்கும் ஒரு குழூஉக்குறி ; பெண் ; குழந்தை ; பதினாறு அகவைக் குட்பட்ட பெண் ; சிவசத்தி ; மீன்வகை . |
பாலைக்கிழத்தி | பாலைக்கு உரியவளான கொற்றவை . |
பாலைத்திறம் | காண்க : பாலையாழ்த்திறம் . |
பாலைநிலப்பூ | கள்ளி ; பாலை ; பூளை . |
பாலைநிலம் | முல்லையும் குறிஞ்சியும் திரிந்த நிலம் . |
பாலைநிலவிலங்கு | செந்நாய் . |
பாலைப்பண் | பெரும்பண்வகை . |
பாலைமணி | அக்குமணி . |
பாலையாழ் | பெரும்பண்வகை . |
பாலையாழ்த்திறம் | பாலைப்பண்ணைச் சார்ந்த சிறு பண்கள் . |
பாலைவனம் | பரந்த மணல்வெளி . |
பாலொடுவை | காண்க : கொடிப்பாலை . |
பாவகம் | அக்கினி ; சேங்கொட்டை ; கொலை ; கருத்து ; தியானம் ; இயல்பு ; உருவம் ; காதலை வெளியிடும் குறிப்பு ; பாசாங்கு . |
பாவகன் | தூய்மையானவன் ; தூய்மைசெய்வோன் ; அக்கினி ; நஞ்சுதீர்க்கும் மருத்துவன் . |
பாவகாரி | பாவம் செய்வோன் . |
பாவகி | தீயில் பிறந்தோனாகிய முருகன் . |
பாவச்சுமை | நுகர்ந்து கழித்தற்குரிய பாவத்திரள் . |
பாவசுத்தி | பாவம் நீங்குகை ; மனத்தூய்மை . |
பாவசேடம் | நுகர்ந்து கழிக்கவேண்டிய வினைப்பயன் ; தூயவரிடத்து எஞ்சியிருக்கும் தீவினை . |
பாவட்டை | செடிவகை ; சிறு மரவகை ; ஆடாதோடை . |
பாவடி | அங்கவடி ; பாட்டிலடங்கிய அடி . |
பாவண்ணம் | நூற்பாச் சந்தம் . |
பாவநாசம் | பாவநீக்குகை ; பாவம் போக்கும் இடம் அல்லது தீர்த்தம் . |
பாவநிவாரணம் | பாவம் நீக்குதல் . |
பாவபாணம் | மனோபாவங்களாகிய நல்வினை தீவினைகள் . |
பாவம் | தீவினைப் பயன் ; தீச்செயல் ; நரகம் ; இரக்கக்குறிப்பு ; உளதாந்தன்மை ; முறைமை ; தியானம் ; எண்ணம் ; அபிநயம் ; விளையாட்டு ; நிலைதடுமாற்றம் ; ஆத்துமாவிடம் உண்டாகும் பரிணாம விசேடம் ; இயக்கம் . |
பாவம்பழி | கொடுந்தீச்செயல் . |
பாவமன்னிப்பு | பாவத்தைப் பொறுக்கை . |
பாவமூர்த்தி | வேடன் . |
பாவர் | பாவிகள் . |
பாவரசம் | கருத்துநயம் ; அபிநயச்சுவை . |
பாவல் | மிதியடி ; மரக்கல வுறுப்புகளுள் ஒன்று ; பாகற்கொடி . |
பாவலர் | கவிஞர் ; புலவர் . |
பாவறை | கூடாரம் . |
பாவனத்துவனி | சங்கு . |
பாவனம் | துப்புரவுசெய்கை ; தூய்மை ; மருந்து குழைக்கை . |
பாவனன் | துப்புரவாளன் ; அனுமன் ; வீமன் . |
பாவனாதீதம் | எண்ணுதற்கு அரியது . |
பாவனி | கங்கை ; பசு ; துளசி ; மேளகர்த்தாக்களுள் ஒன்று . |
பாவனை | நினைப்பு ; தெளிகை ; ஐம்புலனுள் ஒன்று ; தியானம் ; தியானிக்கப்படுவது ; ஒப்பு ; அடையாளம் ; போலி ; நடத்தை ; நடிப்பு ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
பாவனைகாட்டுதல் | ஒன்றன் செயல்போலச் செய்தல் ; அபிநயித்தல் ; வேடங்கொள்ளுதல் ; வரைந்துகாட்டுதல் . |
பாவாடம் | நாக்கறுத்துக்கொள்ளும் வேண்டுதல் . |
பாவாடை | பெண்களின் உடைவகை ; பெரியோர் முதலியவர் நடந்துசெல்லத் தரைமீது விரிக்குஞ் சீலை ; கடவுள் முதலியோர்க்கு முன் ஆடையிற் படைக்கும் அன்னம் ; மேலெழ வீசும் ஒருவகை விருதுச்சீலை ; மேசைவிரிப்பு ; வேலைநாள் . |
பாவாணர் | பாவலர் . |
பாவாத்துமா | தீச்செயல் புரிவோன் . |
பாவாபாவம் | உண்மையும் இன்மையும் . |
பாவார்த்தம் | கருத்துரை ; சொற்பொருள் . |
பாவாற்றி | நெய்வார் குச்சு . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 752 | 753 | 754 | 755 | 756 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாலிசம் முதல் - பாவாற்றி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பாவம், ஒன்று, தியானம், பெரும்பண்வகை, காண்க, அக்கினி, நுகர்ந்து, பாவலர், தீச்செயல், சிறு, பெண், குறிஞ்சியும், முல்லையும், பாலை, திரிந்த, நிலம், உண்டாகும், மரவகை, பாலையாழ்த்திறம்