முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பாராட்டுதல் முதல் - பால்பற்றிச்சொல்லுதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பாராட்டுதல் முதல் - பால்பற்றிச்சொல்லுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பாராட்டுதல் | புகழ்தல் ; அன்புகாட்டுதல் ; பெருமிதம் உரைத்தல் ; கொண்டாடுதல் ; பலகாலம் சொல்லுதல் ; விரித்துரைத்தல் ; மனத்தில் வைத்தல் . |
| பாராட்டுந்தாய் | ஈன்ற தாய் . |
| பாராட்டுப்பேசுதல் | புகழ்தல் . |
| பாராத்தியம் | துன்பம் . |
| பாராயணம் | சமயநூலை முறைப்படி ஓதுதல் . |
| பாராயணன் | முறையாக ஓதுவோன் ; ஒன்றனைக் குறிக்கொள்வோன் ; பார்ப்பான் . |
| பாராயணி | கலைமகள் ; முறையாக ஓதுபவர் . |
| பாரார் | பகைவர் ; நிலவுலகத்தார் . |
| பாராவதம் | புறா ; கரும்புறா ; குரங்கு ; மலை ; கருங்காலிமரம் . |
| பாராவலையம் | வளைதடி . |
| பாராவளையம் | வளைதடி . |
| பாராவாரம் | கடல் ; கடற்கரை . |
| பாரி | பூமி ; நல்லாடை ; கட்டில் ; கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன் ; பூந்தாது ; கட்பாத்திரம் ; யானைகட்டுங் கயிறு ; சிறங்கை நீர் ; கடல் ; மனைவி ; சிங்கம் ; கள் ; பருத்தது ; முதன்மையானது ; கனவான் ; கொட்டுமுழக்குடன் புரியும் இராக்காவல் ; இராக்காவலாளர் பாடல் . |
| பாரிகன் | தோட்சுமைக்காரன் . |
| பாரிகாரியம் | தலையாய வேலை . |
| பாரிசச்சூலை | பக்கவாதம் . |
| பாரிசஞ்செய்தல் | பொறுப்பாக்குதல் . |
| பாரிசம் | பக்கம் ; உடலின் ஒரு பக்கம் ; வசம் ; திசை . |
| பாரிசவாதம் | காண்க : பக்கவாதம் ; குடலிறக்கம் . |
| பாரிசவாயு | காண்க : பக்கவாதம் ; குடலிறக்கம் . |
| பாரிசாதம் | ஐவகைத் தருக்களுள் ஒன்று ; காண்க : முள்முருங்கை ; பவழமல்லிகை . |
| பாரிடம் | பூமி ; பூதம் . |
| பாரித்தல் | பரவுதல் ; பருத்தல் ; மிகுதியாதல் ; தோன்றுதல் ; ஆயத்தப்படுதல் ; வளர்த்தல் ; தோன்றச்செய்தல் ; அமைத்துக்கொடுத்தல் ; உண்டாக்குதல் ; நிறைத்தல் ; அணிதல் ; அருச்சித்தல் ; வளைத்தல் ; உறுதிகொளல் ; விரும்புதல் ; காட்டுதல் ; பரப்புதல் ; பரக்கக்கூறுதல் ; சுமையாதல் ; நோயினால் கனமாதல் ; இன்றியமையாததாதல் ; சுமத்துதல் ; காத்தல் ; ஒத்தல் . |
| பாரித்தவன் | பருத்தவன் . |
| பாரிப்பு | பருமன் ; பரப்பு ; விருப்பம் ; வீரச்செயல் ; கனம் ; அதிகரிப்பு . |
| பாரிபத்திரம் | காண்க : வேம்பு . |
| பாரிபோதல் | நடுயாமத்தில் சுற்றுக்காவல் செய்தல் ; ஓடிவிடுதல் . |
| பாரியம் | கடுக்காய் ; முருக்கு ; வேம்பு . |
| பாரியாள் | பெருத்தவன் ; மனைவி . |
| பாரியை | மனைவி . |
| பாரிவேட்டை | வேட்டை ; கோயில் திருவிழாவகை . |
| பாரு | மருந்து . |
| பாருசியம் | அகில்மரம் . |
| பாரை | கடப்பாரை ; புற்செதுக்குங் கருவி ; எறிபடைவகை ; செடிவகை ; ஒரு மீன்வகை . |
| பாரோலை | பழம் வைக்கப்படும் பனையோலை . |
| பால் | குழவி , குட்டி முதலியவற்றை ஊட்டத் தாய் முலையினின்று சுரக்கும் வெண்மையான நீர்மப்பொருள் ; பிணத்தை அடக்கம் பண்ணின மறுநாள் அவ்விடத்திற் பாலும் நவதானியமும் சேர்த்துத் தெளிக்கும் சடங்கு ; மரம் முதலியவற்றிலிருந்து வடியும் நீர்மப்பொருள் ; வெண்மை ; சாறு ; பகுதி ; அம்மை முதலியவற்றிலிருந்து கசியும் சீழ் ; பிரித்துக்கொடுக்கை ; பாதி ; பக்கம் ; வரிசை ; குலம் ; திக்கு ; குடம் ; குணம் ; உரிமை ; இயல்பு ; ஊழ் ; தகுதி ; ஐம்பாற்பிரிவு ; ஒருமை பன்மை என்ற இருவகைப் பாகுபாடு ; அகத்திணை புறத்திணை என்ற பாகுபாடு ; இடையர் குறும்பர்களின் வகை . |
| பால்கட்டுதல் | நென்மணி முதலியவற்றில் பால் பற்றுதல் ; அம்மைகுத்துதல் . |
| பால்கறத்தல் | பசு முதலியவற்றின் மடியிலிருந்து பாலைக் கறந்தெடுத்தல் . |
| பால்காய்ச்சுதல் | புதுமனை புகுதற்குப் பால் காய்ச்சும் சிறப்பு . |
| பால்குனம் | மாசி வளர்பிறைப் பிரதமை முதல் பங்குனி அமாவாசை முடியவுள்ள சாந்திரமான மாதம் . |
| பால்கொடுத்தல் | முலையுண்ணுமாறு கொடுத்தல் . |
| பால்கோவா | திரட்டுப்பால் என்னும் சிற்றுண்டிவகை . |
| பால்சுரம் | மகளிர்க்குப் பால் மார்பில் கட்டிக் கொள்வதனால் உண்டாகும் காய்ச்சல் . |
| பால்சொரிதல் | மாடு முதலியவற்றின் மடியில் இருந்து பால் தானே வழிதல் . |
| பால்சோர்தல் | மாடு முதலியவற்றின் மடியில் இருந்து பால் தானே வழிதல் . |
| பால்தோய்த்தல் | உறைகுத்துதல் . |
| பால்தோய்தல் | பால் தயிராக மாறுகை . |
| பால்நண்டு | வெள்ளைநண்டு . |
| பால்நரம்பு | தாய்முலையில் பால் தோன்றும் போது காணும் பச்சை நரம்பு . |
| பால்பகாவஃறிணைப்பெயர் | ஒருமை பன்மைக்குப் பொதுவாய் வரும் அஃறிணைப்பெயர் . |
| பால்பற்றிச்சொல்லுதல் | ஒருசார்பாகப் பேசுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 750 | 751 | 752 | 753 | 754 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாராட்டுதல் முதல் - பால்பற்றிச்சொல்லுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பால், காண்க, பக்கம், முதலியவற்றின், பக்கவாதம், மனைவி, பாகுபாடு, வழிதல், ஒருமை, தானே, இருந்து, மாடு, மடியில், முதலியவற்றிலிருந்து, வேம்பு, வளைதடி, முறையாக, தாய், கடல், பூமி, புகழ்தல், குடலிறக்கம், நீர்மப்பொருள்

