தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆகூழ் முதல் - ஆசர்ப்பட்டி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆச்சியம் | நெய் ; எள்ளத்தக்கது ; கட்டணம் ; தேவதாருவின் பிசின் . |
| ஆச்சியாடு | மற்ற ஆட்டு மந்தையிலிருந்து இரந்து பெறப்பட்ட ஆடு . |
| ஆச்சிரமம் | காண்க : ஆசிரமம் . |
| ஆச்சிராமம் | காண்க : ஆசிரமம் . |
| ஆச்சிரமி | நால்வகை ஆசிரமங்களுள் ஒன்றில் இருப்பவன் . |
| ஆச்சிரயம் | பகை வெல்லுதற்குப் பலமுள்ளான் ஒருவனை அடைகை ; பாதுகாப்பு ; கொளு கொம்பு ; புகலிடம் . |
| ஆச்சிரயாசித்தம் | பட்சத்தில் இல்லாத ஏதுவைக் கூறும் ஏதுப்போலி . |
| ஆச்சிரவம் | சூள் ; கீழ்ப்படிகை ; வருத்தம் ; கன்மத்தொடர்ச்சி ; ஆன்மா பொறிவழிச் சேறல் . |
| ஆச்சிலை | கோமேதகம் . |
| ஆச்சு | ஆயிற்று , முடிந்தது ; ஒருவகை உரையசை . |
| ஆச்சுக்காசி | மஞ்சட்கோங்கு . |
| ஆச்சுரிதகம் | சிரிப்பு ; நகக்குறிவகை . |
| ஆச்சுவாசம் | சாக்காடு ; அத்தியாயம் . |
| ஆசங்கித்தல் | ஐயுறுதல் ; மறுத்தல் . |
| ஆசங்கை | ஐயம் ; மறுப்பு . |
| ஆசட்சு | கண் ; பண்டிதன் . |
| ஆசடை | நீளவாட்டத்தில் அமைக்கும் வீட்டின் முகட்டுத் தூலம் . |
| ஆசத்தி | விருப்பம் , பற்று . |
| ஆசந்தி | சவம் கொண்டுபோகும் பாடை ; பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அமைந்த இயேசுநாதர் திருவுருவத்தை ஊர்வலம் செய்விக்கை ; சிறுகட்டில் ; பிரம்பாலான இருக்கை . |
| ஆசந்திரதாரம் | சந்திரனும் நட்சத்திரங்களும் உள்ளவரை . |
| ஆசந்திரார்க்கம் | சந்திர சூரியர்கள் உள்ளவரை . |
| ஆசம் | சிரிப்பு . |
| ஆசமனம் | காண்க : ஆசமித்தல் . |
| ஆசமனீயம் | ஆசமனநீர் . |
| ஆசமித்தல் | வலக்குடங்கையால் மந்திர பூர்வமாக நீரை மும்முறை உட்கொள்ளுதல் . |
| ஆசயம் | உறைவிடம் ; உடலின் உட்பை ; மனம் ; கருத்து ; உழை ; பலா . |
| ஆசர் | ஆயத்தம் ; நேர்வந்திருத்தலைக் குறிக்கும் சொல் . |
| ஆசர்ப்பட்டி | வருகைப் பதிவேடு . |
| ஆகூழ் | நல்வினை ; ஆக்கத்திற்குக் காரணமான வினை ; முன்னேற்றத்திற்குக் காரணமான வினை . |
| ஆகேடகம் | வேட்டை . |
| ஆகேடம் | வேட்டை . |
| ஆகேருகம் | தண்ணீர்விட்டான் கொடி . |
| ஆகேவகமுள்ளி | காட்டுமுள்ளி . |
| ஆகேறு | காண்க : சரக்கொன்றை . |
| ஆகை | ஆதல் ; உயருதல் ; நிகழுகை . |
| ஆகைச்சுட்டி | ஆகையால் . |
| ஆகையர் | முடிவு ; கூட்டிவந்த மொத்தத் தொகை . |
| ஆகையால் | ஆதலால் . |
| ஆகோசனம் | கோரோசனை . |
| ஆகோள் | போரில் பகைவரின் பசுக்களைக் கவர்ந்துகொள்ளுகை . |
| ஆங்க | அங்ஙனே எனப் பொருள்படும் உரையசை ; வினையுவம வாய்பாடுகளுள் ஒன்று . |
| ஆங்கண் | அவ்விடத்து . |
| ஆங்கனம் | அவ்விதம் . |
| ஆங்காங்கு | அங்கங்கு . |
| ஆங்காரம் | பற்று ; காண்க : அகங்காரம் ; செருக்கு ; கரித்திரள் . |
| ஆங்காரி | அகங்காரம் உள்ளவன்(ள்) . |
| ஆங்காரித்தல் | காண்க : அகங்கரித்தல் . |
| ஆங்காலம் | நற்காலம் . |
| ஆங்கிலம் | ஆங்கிலமொழி . |
| ஆங்கீரச | அறுபதாண்டுக் கணக்கில் ஆறாம் ஆண்டு . |
| ஆங்கு | அவ்விடம் ; அக்காலத்தில் ; அப்படி ; ஓர் உவம உருபு ; ஏழன் உருபு ; ஓர் அசைநிலை . |
| ஆங்குதல் | போதியதாதல் . |
| ஆங்ஙனம் | காண்க : அங்ஙனம் . |
| ஆச்சமரம் | சங்கஞ்செடி . |
| ஆச்சமாதிகம் | மலைவெற்றிலை . |
| ஆச்சரியம் | வியப்பு . |
| ஆச்சல் | பாய்ச்சல் ; வண்டிப் பாதையில் உண்டாகும் பள்ளம் . |
| ஆச்சன் | காண்க : அச்சன் . |
| ஆச்சனை | முழுதும் செலவழிக்கை . |
| ஆச்சா | சாலமரம் ; கள்ளி . |
| ஆச்சாசினி | சாலமரம் ; கள்ளி . |
| ஆச்சாசோபிகம் | பெருங்கிலுகிலுப்பை . |
| ஆச்சாட்டு | சிற்றீரம் . |
| ஆச்சாட்டுப்பயிர் | சிற்றீரமுள்ள நிலத்துப்பயிர் . |
| ஆச்சாதம் | உறை ; சீலை ; மூடி ; மேலாடை . |
| ஆச்சாதனபலம் | பருத்திக்கொட்டை . |
| ஆச்சாதனபலை | பருத்திக்கொட்டை . |
| ஆச்சாதனம் | ஆணவமலம் ; அஞ்ஞானம் ; மறைப்பு ; ஆடை . |
| ஆச்சாள் | தாய் . |
| ஆச்சான் | ஆசாரியன் . |
| ஆச்சி | தாய் ; பாட்டி ; மூத்த தமக்கை ; சிறப்பு வாய்ந்த பெண்டிரைக் குறிக்குஞ் சொல் ; குரு பத்தினி . |
| ஆச்சிபூச்சி | விளையாட்டுவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 72 | 73 | 74 | 75 | 76 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆகூழ் முதல் - ஆசர்ப்பட்டி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சொல், அகங்காரம், ஆகையால், உருபு, கள்ளி, தாய், பருத்திக்கொட்டை, வேட்டை, சாலமரம், காரணமான, உரையசை, ஆசிரமம், சிரிப்பு, பற்று, ஆசமித்தல், உள்ளவரை, வினை

