தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆக முதல் - ஆகாசகருடன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆகனிகம் | மண்ணகழ் கருவி ; பன்றி ; பெருச்சாளி . |
| ஆகா | வியப்புக்குறிப்பு ; உடன்பாட்டுக் குறிப்பு ; ஒரு கந்தருவன் . |
| ஆகாசக்கத்தரி | காண்க : வெண்டை . |
| ஆகாசக்கப்பல் | ஆகாயவிமானம் . |
| ஆகாசக்கரை | மனோராச்சியம் . |
| ஆகாசக்கட்டு | மனோராச்சியம் . |
| ஆகாசக்கல் | விண்ணிற் பறக்கும் அணு . |
| ஆகாசக்கோட்டை | மனோராச்சியம் . |
| ஆகாசகங்கை | மந்தாகினி ; பால்வீதி மண்டலம் ; பனிநீர் ; சிறுநீர் . |
| ஆகாசகபாலி | புரளிக்காரன் ; மிக வல்லவன் . |
| ஆகாசகமனம் | அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று ; ஆகாயத்தே செல்லுதல் . |
| ஆகாசகரடம் | புகைப்படை . |
| ஆகாசகருடன் | கொல்லன்கோவை ; சீந்தில் ; பேயத்தி . |
| ஆக | மொத்தமாய் ; முழுவதும் ; அவ்வாறாக ; விகற்பப் பொருள் தரும் இடைச்சொல் ; நான்காம் வேற்றுமை உருபுடன் வரும் துணைச்சொல் ; செய்தி குறிக்கும் இடைச்சொல் ; முற்றோடு சேர்ந்து செயவென் எச்சப் பொருள் தரும் இடைச்சொல் ; ஓர் அசைச்சொல் . |
| ஆகக்கூடி | ஆகவே ; மொத்தத்தில் . |
| ஆகக்கொள்ள | ஆகையால் . |
| ஆகச்செய்தே | ஆகவே . |
| ஆகசி | திப்பிலி . |
| ஆகசு | தவறு ; இழிந்தது ; பாவம் . |
| ஆகட்டு | ஆகட்டும் என்னும் பொருளில் வரும் சொல் . |
| ஆகட்டும் | ஆம் ; ஆகுக . |
| ஆகடியம் | பரிகாசம் ; பொல்லாங்கு . |
| ஆகண்டலன் | இந்திரன் . |
| ஆகத்தினெய் | புருவநடு . |
| ஆகதம் | கமகம் பத்தனுள் ஒன்று ; கந்தை ; பெருக்கிவந்த தொகை ; பொய் ; அடிக்கை ; வருகை . |
| ஆகதர் | சமணர் . |
| ஆகதி | அடையவேண்டியது . |
| ஆகந்துகசுரம் | அருந்துகின்ற உணவு நிமித்த மாயல்லாமல் வேறு ஒட்டுவாரொட்டி முதலாய காரணங்களால் உண்டாகும் சுரவகை . |
| ஆகந்துகம் | இடையில் வந்தேறியது . |
| ஆகந்துகமலம் | ஆன்மாவிடத்து இயல்பாகவன்றி இடையே தோன்றும் மாயை கன்மங்களாகிய இரண்டு மலங்கள் . |
| ஆகப்பாடு | மொத்தம் . |
| ஆகம் | உடல் ; மனம் ; மார்பு ; சுரை . |
| ஆகம்பிதசிரம் | சிர அபிநயவகை . |
| ஆகம்பிடதம் | மேலும் கீழுமாகத் தலையசைத்தல் ; சம்மதிக்குறி காட்டும் முகம் . |
| ஆகம்பிதமுகம் | சம்மதித்தற்கு அறிகுறியாக மேல்கீழாகத் தலையாட்டுகை . |
| ஆகமங்களோதினோன் | சிவபிரான் . |
| ஆகமசாத்திரம் | சைவ வைணவ சாக்த சமணசமய நூல்கள் . |
| ஆகமப்பிரமாணம் | காட்சியினாலும் அனுமானத்தினாலும் அறியப்படாத பொருளையும் அறிவிக்கும் உண்மையுரையாகிய சாத்திரம் . |
| ஆகமம் | வேதசாத்திரங்கள் ; முதல்வன் வாக்கு ; வருகை ; தோன்றல் விகாரத்தால் வரும் எழுத்து . |
| ஆகமமலைவு | ஆகமவிதிக்கு முரண் ; சாத்திரப் பிரமாணத்திற்கு மாறாக வருவது . |
| ஆகமவளவை | காண்க : ஆகமப்பிரமாணம் . |
| ஆகமனம் | வருகை . |
| ஆகமாந்தம் | ஆகமங்களில் முடிவாகக் கொள்ளப்படும் சைவசித்தாந்தம் . |
| ஆகரம் | இரத்தினச் சுரங்கம் ; உறைவிடம் ; அடிநிலை ; கூட்டம் ; காலாங்கபாடாணம் . |
| ஆகரன் | குடியிருப்போன் ; கிண்டுவோன் ; சுந்தரமூர்த்தி நாயனார் . |
| ஆகரி | ஒரு பண் ; திப்பிலி ; சிறுகட்டுக்கொடி . |
| ஆகரித்தல் | தருவித்தல் . |
| ஆகருடணம் | இழுக்கை ; அழைக்கை ; அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று . |
| ஆகருடம் | விற்பழக்கம் ; சூதாடுகை ; சூதாடுபலகை ; கவறு ; இழுக்கை . |
| ஆகவனம் | பிணிக்கை ; விரும்புகை ; எண்பெருக்கல் . |
| ஆகலாகல் | காண்க : ஆகவாக . |
| ஆகலூழ் | ஆகூழ் ; நல்வினைப் பயன் . |
| ஆகவபூமி | போர்க்களம் . |
| ஆகவம் | போர் ; வேள்வி . |
| ஆகவனம் | பலி . |
| ஆகவனீயம் | வேதாக்கினிவகை மூன்றனுள் ஒன்று . |
| ஆகவாக | உடம்படாமை ஆதாரமின்மைகளைக் குறிக்கும் அசைநிலை . |
| ஆகவியன் | போர்வீரன் . |
| ஆகவும் | ஆகுக . |
| ஆகவே | ஆதலால் . |
| ஆகளமாய் | இடைவிடாது . |
| ஆகளரசம் | அபின் ; பாதரசம் . |
| ஆகளவாய் | இருக்கும் அளவுக்கு . |
| ஆகன்மாறு | ஆகையால் . |
| ஆகனாமி | அவரை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 70 | 71 | 72 | 73 | 74 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆக முதல் - ஆகாசகருடன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஒன்று, இடைச்சொல், வருகை, ஆகவே, வரும், மனோராச்சியம், காண்க, ஆகுக, ஆகட்டும், ஆகமப்பிரமாணம், ஆகவாக, ஆகவனம், இழுக்கை, திப்பிலி, ஆகையால், பொருள், நான்கு, தரும், அறுபத்து, குறிக்கும், சொல், கலைகளுள்

