தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆசரணம் முதல் - ஆசானங்கை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆசாமிவாரிச் சிட்டா | இனவாரி வரிக்கணக்கு . |
| ஆசார்யாபிடேகம் | குருவாதற்குச் செய்யப்படும் சடங்கு . |
| ஆசாரக்கணக்கு | கோயிலில் ஆசாரங்களைக் குறித்து வைக்கும் புத்தகம் . |
| ஆசாரக்கள்ளன் | ஒழுக்கம் உள்ளவன்போல் நடிப்பவன் . |
| ஆசாரக்கள்ளி | ஒழுக்கமுடையாள்போல் நடிப்பவள் . |
| ஆசாரங்கூட்டுதல் | தூய்மையாகச் செய்தல் . |
| ஆசாரச்சாவடி | பொதுச்சாவடி ; கொலுமண்டம் . |
| ஆசாரஞ்செய்தல் | ஒழுக்கத்தைக் கடைப் பிடித்தல் . |
| ஆசாரப்பிழை | ஒழுக்கத்தவறு . |
| ஆசாரபரன் | ஒழுக்கத்தில் ஊக்கமுள்ளவன் . |
| ஆசாரபோசன் | பகட்டுத் தோற்றமுள்ளவன் . |
| ஆசாரம் | சாத்திர முறைப்படி ஒழுகுகை ; நன்னடை ; காட்சி ; வியாபகம் ; சீலை ; படை ; அரசர்வாழ் கூடம் ; தூய்மை ; பெருமழை ; உறுதிப்பொருள் ; முறைமை . |
| ஆசாரம்பண்ணுதல் | உபசாரஞ்செய்தல் . |
| ஆசாரலிங்கம் | சிவலிங்க பேதங்களுள் ஒன்று . |
| ஆசாரவாசல் | தலைவாசல் ; கோயிலின் நுழைவாயில் , கொலுமண்டப வாசல் . |
| ஆசாரவாயில் | தலைவாசல் ; கோயிலின் நுழைவாயில் , கொலுமண்டப வாசல் . |
| ஆசாரவீனன் | ஒழுக்கங்கெட்டவன் . |
| ஆசாரவீனி | ஒழுக்கங்கெடடவள் . |
| ஆசாரவீனை | ஒழுக்கங்கெடடவள் . |
| ஆசாரவுபசாரம் | காண்க : ஆசாரோபசாரம் . |
| ஆசாரி | மாத்துவ ஸ்ரீவைணவப் பார்ப்பனர் பட்டப்பெயர் ; கம்மாளர் பட்டப்பெயர் ; குரு ; ஒழுக்கமுள்ளவன் . |
| ஆசாரியசம்பாவனை | நல்ல காலங்களில் ஆசாரியருக்குக் கொடுக்கும் காணிக்கை . |
| ஆசாரியப்பட்டம் | குருவாக அபிடேகமாகும் பொழுது தாங்கும் பட்டம் . |
| ஆசாரியபக்தி | குருபக்தி . |
| ஆசாரியபூசனை | குருக்களுக்குரிய காணிக்கை . |
| ஆசாரியபோகம் | ஆசாரியன் அனுபவிக்கும் மானியம் . |
| ஆசாரியன் | குரு ; சமயத்தலைவன் ; ஆசிரியன் . |
| ஆசாரியன் திருவடியடைதல் | இறந்து நற்கதி அடைதல் . |
| ஆசாரியாபிடேகம் | குருவாக அமர்த்தும் சடங்கு . |
| ஆசாரோபசாரம் | மிக்க மரியாதை . |
| ஆசாள் | குருபத்தினி ; தலைவி . |
| ஆசான் | ஆசிரியன் ; புரோகிதன் ; மூத்தோன் ; வியாழன் ; அருகன் ; முருகக்கடவுள் ; பாலையாழ்த்திறவகை ; காந்தாரம் , சிகண்டி , தசாக்கரி , சுத்தகாந்தாரம் என்னும் நால்வகைப் பண்ணியல் . |
| ஆசான்றிறம் | குரலுக்குரிய திறம் ; பாலையாழ்த்திறம் . |
| ஆசானங்கை | காட்டாமணக்கு . |
| ஆசரணம் | பழக்கம் ; வழக்கம் ; அனுட்டானம் . |
| ஆசரணை | காண்க : ஆசரணம் ; தூய்மை . |
| ஆசரித்தல் | அனுட்டித்தல் ; கைக்கொள்ளுதல் ; வழிபடுதல் . |
| ஆசல் | மதிப்பு . |
| ஆசலம் | மக்க சஞ்சலம் ; குற்றமும் துன்பமும் . |
| ஆசலை | ஆடாதோடை . |
| ஆசவம் | கள் . |
| ஆசவுசம் | தீட்டு . |
| ஆசற | குறையற . |
| ஆசறுதல் | குற்றமின்மை ; முடிதல் . |
| ஆசறுதி | கடைசி . |
| ஆசறுதிப்பல் | கடைவாய்ப் பல் . |
| ஆசன்னம் | அண்மையானது . |
| ஆசனக்கிருமி | மலப்புழுவகை . |
| ஆசனக்குளிகை | மலவாய்வழியாய்ச் செலுத்தும் மாத்திரை . |
| ஆசனந்திருத்துதல் | பெரியோர்க்கு இருக்கை அமைத்தல் . |
| ஆசனபவுத்திரம் | பகந்தரம் , மலவாயில் புரைவைத்த புண் . |
| ஆசனம் | பீடம் முதலிய தவிசு ; இருக்கைநிலை ; மலவாய் ; உரிய காலம் வரும்வரை பகைமேற் செல்லாதிருக்கை . |
| ஆசனவாய் | மலவாய் . |
| ஆசனவெடிப்பு | நோய்வகை . |
| ஆசனி | பலாவகை ; பெருங்காயம் . |
| ஆசாசி | சீந்தில் . |
| ஆசாசித்தல் | வாழ்த்துதல் . |
| ஆசாட்டம் | தெளிவற்ற தோற்றம் . |
| ஆசாடபூதி | தோற்றத்திற்கு ஏற்ற பண்பற்றவன் ; துரோகி ; வஞ்சகன் . |
| ஆசாடம் | முருக்கு ; ஆடிமாதம் ; மரக்கொம்பு ; தவசியின் கைக்கோல் . |
| ஆசாபங்கம் | விரும்பியது பெறாமை . |
| ஆசாபந்தம் | நம்பிக்கை ; சிலந்திவலை . |
| ஆசாபாசம் | ஆசையாகிய பற்று . |
| ஆசாபைசாசம் | ஆசையாகிய பேய் . |
| ஆசாம்பரன் | திசைகளையே ஆடையாகக் கொண்டவன் , சிவன் . |
| ஆசாமி | ஆள் . |
| ஆசாமிக்களவு | ஆளைத் திருடுகை . |
| ஆசாமிசோரி | ஆளைத் திருடுகை . |
| ஆசாமிவாரி | இனவாரி . |
| ஆசாமிவாரி இசாபு | அடங்கல் கணக்கு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 73 | 74 | 75 | 76 | 77 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆசரணம் முதல் - ஆசானங்கை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், ஆசாரியன், ஆசிரியன், குருவாக, காணிக்கை, ஆசரணம், மலவாய், ஆசாமிவாரி, திருடுகை, ஆளைத், ஆசையாகிய, குரு, பட்டப்பெயர், கோயிலின், தலைவாசல், தூய்மை, சடங்கு, நுழைவாயில், கொலுமண்டப, ஆசாரோபசாரம், காண்க, ஒழுக்கங்கெடடவள், வாசல், இனவாரி

