தமிழ் - தமிழ் அகரமுதலி - ஆகாசசாமி முதல் - ஆகுனி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| ஆகிருதி | உருவம் ; உடல் ; அடிதோறும் ஒற்று நீங்கிய இருபத்திரண்டு உயிரெழுத்துக் கொண்டதும் நான்கு அடியை உடையதுமாய் வரும் சந்தம் . |
| ஆகிருநந்தனம் | காண்க : ஆகிரந்தம் . |
| ஆகிருநனந்தம் | காண்க : ஆகிரந்தம் . |
| ஆகிலியர் | ஆகாதொழிக . |
| ஆகிவருதல் | நன்றாகக் கூடிவருதல் . |
| ஆகின்று | ஆகாநின்றது , அமைந்தது ; ஆயிற்று . |
| ஆகு | கவரி ; கொப்பூழ் ; எலி ; பெருச்சாளி ; பன்றி ; கள்ளன் ; சாமரம் . |
| ஆகுகன் | பெருச்சாளி ஊர்தியனாகிய விநாயகன் . |
| ஆகுஞ்சனம் | சுருக்குகை . |
| ஆகுதல் | ஆதல் . |
| ஆகுதி | அக்கினியில் மந்திர பூர்வமாகச் செய்யும் ஓமம் ; பலி ; ஒருவகைப் பறை . |
| ஆவுதி | அக்கினியில் மந்திர பூர்வமாகச் செய்யும் ஓமம் ; பலி ; ஒருவகைப் பறை . |
| ஆகுபுக்கு | பூனை . |
| ஆகுபெயர் | ஒன்றன் பெயராயிருந்தும் அதனோடு தொடர்புடைய மற்றொன்றற்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர் . |
| ஆகுயர்த்தோன் | பெருச்சாளி உருப்பொறித்த கொடியுடையவனான கணபதி . |
| ஆகுரதன் | காண்க : ஆகுகன் . |
| ஆகுலச்சொல் | ஆரவாரப்பேச்சு . |
| ஆகுலம் | மனக்கலக்கம் ; ஆரவாரம் . |
| ஆகுலி | காண்க : சிற்றரத்தை ; ஆவிரைவகை . |
| ஆகுலித்தல் | துன்புறுதல் . |
| ஆகுவாகனன் | காண்க : ஆகுகன் . |
| ஆகுளி | ஒருவகைச் சிறுபறை . |
| ஆகுனி | வாதநோய்வகை . |
| ஆகாசசாமி | பறந்துசெல்லும் ஆற்றலுடையோன் ; பறக்கும் குதிரை . |
| ஆகாசகாமினி | விண்ணிற் பறந்து செல்வதற்கு உதவும் மந்திரம் . |
| ஆகாசசபை | காஞ்சிபுரத்து நடராச சபை . |
| ஆகாசத்தாமரை | காணக ; ஆகாயத்தாமரை . |
| ஆகாசத்துவனி | வானொலி , அசரீரி . |
| ஆகாசதீபம் | உயர்ந்த கம்பத்தில் வைக்கப்படும் விளக்கு ; கார்த்திகைத் திருநாளின்போது சொக்கப்பனையின்மேல் வைக்கும் விளக்கு . |
| ஆகாசதுந்துமி | தேவதுந்துபி . |
| ஆகாசப்பந்தல் | கற்பனை உலகு . |
| ஆகாசப்பாலம் | கற்பனை உலகு . |
| ஆகாசப்புரட்டன் | பெருமோசக்காரன் . |
| ஆகாசபட்சி | காண்க : சாதகபட்சி ; வானம்பாடி . |
| ஆகாசபலம் | விண்வீழ்கொள்ளி . |
| ஆகாசம் | ஐம்பூதத்துள் ஒன்று , வானம் ; வளிமண்டலம் . |
| ஆகாயம் | ஐம்பூதத்துள் ஒன்று , வானம் ; வளிமண்டலம் . |
| ஆகாசமண்டலம் | வானவெளி ; நாட்டிய வகையுள் ஒன்று . |
| ஆகாசமார்க்கம் | வானவழி . |
| ஆகாசலிங்கம் | பஞ்சலிங்கத்துள் சிதம்பரத்தில் உள்ளது . |
| ஆகாசவல்லி | சீந்தில் ; ஒரு பூண்டு . |
| ஆகாசவாணம் | அந்தரத்தில் செல்லும் சீறுவாணம் . |
| ஆகாசவாணி | வானொலி , அசரீரி . |
| ஆகாயவாணி | வானொலி , அசரீரி . |
| ஆகாத்தியம் | பாசாங்கு ; பொல்லாங்கு . |
| ஆகாத | கெட்ட ; வெறுப்புக்குரிய . |
| ஆகாதிலை | மரவகையுள் ஒன்று ; கொடியார் கூந்தல் . |
| ஆகாதே | அல்லவா ? . |
| ஆகாமியம் | அதிக்கிரமம் ; மூவகைக் கன்மங்களுள் ஒன்று ; இப்பிறப்பில் செய்யும் புண்ணிய பாவங்கள் . |
| ஆகாயக்கக்கரி | கக்கரிவகை . |
| ஆகாயகங்கை | மந்தாகினி . |
| ஆகாயகணம் | செய்யுள் கணத்துள் ஒன்று ; கருவிளங்காய்ச் சீராய் அமைவது . |
| ஆகாயகமனம் | அறுபத்துநாலு கலையுள் வானத்தில் நடந்துசெல்லும் வித்தை . |
| ஆகாயச்சக்கரம் | சித்திரகவிவகை . |
| ஆகாயச்சொல் | எதிரில் இல்லாதான் ஒருவனை முன்னிலைப்படுத்திக் கூறும் பேச்சு . |
| ஆகாயசாரிகள் | வானத்தில் திரிவோர் , சாரணர் . |
| ஆகாயசூலை | குதிரை நோய்வகை . |
| ஆகாயத்தாமரை | பூண்டுவகை ; குளிர்தாமரை ; இல்பொருள் ; கொட்டைப்பாசி . |
| ஆகாயப்பிரவேசம் | காண்க : ஆகாயகமனம் . |
| ஆகாயப்பூ | காண்க : ஆகாயத்தாமரை . |
| ஆகாயப்பூரிதம் | பேய்முசுட்டை . |
| ஆகாயமாஞ்சி | காண்க : சிறுசடாமாஞ்சில் . |
| ஆகாயவாசிகள் | பதினெண் கணத்துள் ஒரு சாரார் . |
| ஆகாரசமிதை | வேள்வி செய்வதற்குக் குறித்துள்ள இடத்தின் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் சுள்ளி . |
| ஆகாரசன்னை | நால்வகை முரசுகளுள் ஒன்று . |
| ஆகாரம் | உருவம் ; உடம்பு ; ' ஆ ' என்னும் எழுத்து ; உணவு ; நெய் ; குறிப்பு . |
| ஆகாரி | உயிர் ; பூனை . |
| ஆகிய | பண்புருபு . |
| ஆகிரந்தம் | புன்கமரம் . |
| ஆகிரிநாட்டை | பண்வகை ; காண்க : ஆகரி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 71 | 72 | 73 | 74 | 75 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆகாசசாமி முதல் - ஆகுனி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒன்று, வானொலி, அசரீரி, செய்யும், ஆகாயத்தாமரை, ஆகுகன், ஆகிரந்தம், பெருச்சாளி, ஐம்பூதத்துள், உலகு, வானம், வானத்தில், ஆகாயகமனம், கணத்துள், வளிமண்டலம், கற்பனை, வைக்கப்படும், ஓமம், அக்கினியில், பூர்வமாகச், ஒருவகைப், பூனை, மந்திர, உருவம், குதிரை, விளக்கு

