முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பள்ளிபருத்தல் முதல் - பற்றலம்புதல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பள்ளிபருத்தல் முதல் - பற்றலம்புதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பள்ளிபருத்தல் | அரசர் முதலியோர்க்கு ஈமக் கடன் செய்தல் . |
| பள்ளிமண்டபம் | காண்க : பள்ளியறை . |
| பள்ளிமாடம் | காண்க : பள்ளியறை . |
| பள்ளியந்துலா | படுக்கைப் பல்லக்கு . |
| பள்ளியம்பலம் | காண்க : பள்ளிமாடம் . |
| பள்ளியயர்தல் | உறங்குதல் . |
| பள்ளியறை | துயிலிடம் . |
| பள்ளியெழுச்சி | துயிலெழுப்புதல் ; காண்க : திருபள்ளியெழுச்சி ; அரசர் முதலியோரைத் துயிலெழுப்பும் சிற்றிலக்கியவகை . |
| பள்ளியோடம் | காண்க : பள்ளவோடம் . |
| பள்ளியோடவையம் | பள்ளியோடம்போன்ற வண்டி . |
| பள்ளிவாசல் | முகமதியர் மசூதி . |
| பள்ளு | உழத்திப் பாட்டு , ஒரு சிற்றிலக்கிய வகை ; காண்க : பள் . |
| பள்ளை | குள்ளம் ; ஆடு ; குள்ளமான ஆட்டு வகை ; வயிறு ; பருத்த உயிரினம் . |
| பள்ளைச்சி | குள்ளமானவள் . |
| பள்ளையம் | உண்கல :ம் ; சிறுதெய்வங்களுக்குப் படைக்கும் பொருள் . |
| பள்ளையம்போடுதல் | தெய்வத்துக்குமுன் அன்னம் , கறி முதலியவற்றைப் படைத்தல் . |
| பள்ளையன் | குறுகிப் பருத்தவன் . |
| பள்ளையாடு | காண்க : பள்ளாடு . |
| பளக்கு | கொப்புளம் . |
| பளகம் | பவளம் ; மலை . |
| பளகர் | மூடர் ; குற்றமுடையவர் . |
| பளகு | குற்றம் . |
| பளபளத்தல் | ஒளிர்தல் . |
| பளபளப்பு | ஒளி ; பாடல்நயம் . |
| பளபளவெனல் | ஒளிக்குறிப்பு ; ஒலிக்குறிப்பு . |
| பளாபளா | வியப்புக்குறிப்பு ; இன்மைக் குறிப்பு . |
| பளிக்கறை | பளிங்குப் கற்களால் கட்டப்பட்ட மாளிகை . |
| பளிக்கறைமண்டபம் | பளிங்குப் கற்களால் கட்டப்பட்ட மாளிகை . |
| பளிக்காய் | பச்சைக்கருப்பூரங் கலந்த பாக்கு . |
| பளிக்குமாடம் | கண்க ; பளிக்கறைமண்டபம் . |
| பளிங்கு | படிகம் ; கண்ணாடி ; கருப்பூரம் ; சுக்கிரன் ; தோணிக்கயிறு ; புட்பராகம் ; காண்க : அழுங்கு . |
| பளிச்சிடுதல் | ஒளிவீசுதல் . |
| பளிச்சுப்பளிச்செனல் | ஒளிவீசுதற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; தெளிவுக்குளிப்பு ; வேதனைக்குறிப்பு . |
| பளிச்செனல் | ஒளிவீசுதற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; தெளிவுக்குளிப்பு ; வேதனைக்குறிப்பு . |
| பளிஞ்சி | தோணிக்கயிறு . |
| பளிதச்சுண்ணம் | பச்சைக்கருப்பூரம் கலந்த பொடி . |
| பளிதம் | கருப்பூரம் ; பச்சைக்குருப்பூரம் ; பச்சடி ; ஒரு பேரெண் . |
| பளீரெனல் | ஒலிக்குறிப்பு ; ஒளிவீசுதற்குறிப்பு ; வேதனைக்குறிப்பு . |
| பளு | பாரம் ; கனம் ; கடுமை . |
| பளுவு | பாரம் ; கனம் ; கடுமை . |
| பளை | வளை ; விலங்கு முதலியவற்றின் வளை . |
| பற்கடித்தல் | கோபம் முதலியவற்றால் பல்லைக் கடித்தல் . |
| பற்காட்டுதல் | சிரித்தல் ; பல்லைக் காட்டிக் கெஞ்சுதல் . |
| பற்காவி | தாம்பூலம் முதலியவற்றால் பல்லில் ஏறிய காவி . |
| பற்காறை | பற்களில் கட்டியாய்த் திரண்டிருக்கும் ஊத்தை ; காண்க : பற்காவி ; பற்களில் ஏற்றிய கறுப்புக்கறை . |
| பற்குச்சி | பல் விளக்குங் குச்சி . |
| பற்குடைச்சல் | பல்நோவு ; சொத்தைப் பல் . |
| பற்குத்து | பல்நோவு . |
| பற்குறி | பற்பட்ட குறி ; புணர்ச்சிக் காலத்து மகளிர் உறுப்பில் ஆடவர் பற்பட்டு உண்டாகும் தழும்பு . |
| பற்குனி | காண்க : பங்குனி . |
| பற்சர் | பகைவர் . |
| பற்சன்னியன் | வருணன் . |
| பற்சனம் | நிந்தை . |
| பற்சீவுங்கோல் | பற்குச்சி . |
| பற்சீவுதல் | பல் விளக்குதல் . |
| பற்சொத்தை | பல்லிற் பூச்சிவிழும் நோய் . |
| பற்படகம் | காண்க : பற்பாடகம் . |
| பற்பணம் | ஒரு பலம் உள்ள நிறையளவு . |
| பற்பதம் | மலை . |
| பற்பநாபன் | காண்க : பதுமநாபன் . |
| பற்பம் | தூள் ; திருநீறு ; நீற்றுமானப் பொருள் ; தாமரை ; ஒரு பேரெண் ; பதினெண் புராணத்துள் ஒன்று . |
| பற்பராகம் | மாணிக்கவகை . |
| பற்பரோகம் | கண்ணிமையில் செஞ்சதை வளர்ந்திருக்கும் நோய்வகை . |
| பற்பல | மிகுதியானவை . |
| பற்றைகொட்டுதல் | குளிரால் பல் ஒன்றோடொன்று தாக்கி ஒசையுண்டாக்குதல் . |
| பற்பாடகம் | ஒரு மருந்துப்பூடுவகை . |
| பற்பொடி | பல்விளக்க உதவும் தூள் . |
| பற்ற | முன்னிட்டு ; ஒட்ட ; காட்டிலும் . |
| பற்றடித்தல் | சுவர் முதலியவற்றிற்கு ஒட்டிடுதல் . |
| பற்றடைப்பு | பயிரிடுதற்காக நிலத்தைக் குடிகளிடம் விடுங் குத்தகை . |
| பற்றம் | கற்றை ; கூட்டம் ; துணையாகப் பிடிக்கை ; வீக்கம் ; நன்றியறிவு ; கனம் . |
| பற்றலம்புதல் | சமைத்த பாண்டங்களைக் கழுவுதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 734 | 735 | 736 | 737 | 738 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பள்ளிபருத்தல் முதல் - பற்றலம்புதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கனம், வேதனைக்குறிப்பு, ஒளிவீசுதற்குறிப்பு, பள்ளியறை, கடுமை, முதலியவற்றால், பாரம், பேரெண், பல்லைக், பற்காவி, பற்பாடகம், தூள், பல்நோவு, பற்குச்சி, பற்களில், பள்ளிமாடம், தெளிவுக்குளிப்பு, கட்டப்பட்ட, மாளிகை, கற்களால், பளிங்குப், ஒலிக்குறிப்பு, பளிக்கறைமண்டபம், கலந்த, விரைவுக்குறிப்பு, அரசர், தோணிக்கயிறு, கருப்பூரம், பொருள்

