தமிழ் - தமிழ் அகரமுதலி - பழுதுபடல் முதல் - பள்ளிபடை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பழுதுபடல் | சீர்கெடல் . |
| பழுதுபார்த்தல் | கெட்டதைச் செப்பனிடுதல் . |
| பழுதை | வைக்கோற்புரி ; கயிறு ; பாம்பு . |
| பழுப்படைதல் | பூங்காவி நிறமாதல் . |
| பழுப்பு | பொன்னிறம் ; அரிதாரம் ; முதிர்ந்து மஞ்சள் நிறப்பட்ட இலை ; சிவப்பு ; சீழ் ; ஏணியின் படிச்சட்டம் . |
| பழுப்புப்பொன் | செம்பொன் . |
| பழுப்பேறுதல் | காண்க : பழுப்படைதல் . |
| பழுபாகல் | ஒரு பாகற்கொடிவகை ; காண்க : தும்பை . |
| பழுமணி | மாணிக்கம் . |
| பழுமரம் | ஆலமரம் ; பழுத்த மரம் . |
| பழுவம் | காடு ; தொகுதி . |
| பழுவெலும்பு | விலாவெலும்பு . |
| பழுனுதல் | முதிர்தல் ; கனிதல் ; முற்றுப்பெறுதல் . |
| பழூஉ | பேய் . |
| பழை | கள் . |
| பழைஞ்சோறு | காண்க : பழஞ்சோறு . |
| பழைமை | தொன்மை ; தொன்மையானது ; வழங்காதொழிந்தது ; சாரமின்மை ; முதுமொழி ; நெடுநாட் பழக்கம் ; பழங்கதை ; மரபு ; நாட்பட்டதால் ஏற்படும் சிதைவு . |
| பழைய | நாட்பட்ட . |
| பழையது | நாட்பட்டது ; பழஞ்சோறு . |
| பழையநாள் | பண்டைக்காலம் . |
| பழையபடி | முன்போல ; மறுபடியும் . |
| பழையமனிதன் | வயதுமுதிர்ந்தவன் ; பாவநிலையிலுள்ள மனிதன் . |
| பழையர் | முன்னோர் ; கள் விற்போர் . |
| பழையவமுது | காண்க : பழஞ்சோறு . |
| பழையவேற்பாடு | பண்டை வழக்கம் ; விவிலிய நூலின் பூர்வாகமம் . |
| பழையோன் | தொன்மையானவன் ; நீண்டகால நட்புடையவன் . |
| பழையோள் | துர்க்கை . |
| பள் | பள்ளச்சாதி ; நாடகநூல்வகை ; காளி முதலிய தெய்வங்கட்குப் பலிகொடுக்கும் காலத்துப் பாடப்படும் பண்வகை . |
| பள்குதல் | பதுங்குதல் . |
| பள்ளக்காடு | தாழ்ந்த நிலப்பகுதி . |
| பள்ளக்கால் | காண்க : பள்ளக்காடு ; தாழ்ந்த நன்செய் நிலம் ; தாழ்விடத்துப் பாயும் வாய்க்கால் . |
| பள்ளக்குடி | பள்ளச்சாதி ; பள்ளர் குடியிருக்கும் இடம் . |
| பள்ளச்சி | பள்ளச்சாதிப் பெண் . |
| பள்ளத்தாக்கு | மலைகளின் நடுவே உள்ள இடம் ; தாழ்ந்த நிலம் . |
| பள்ளநாலி | தாழ்விடத்துப் பாயும் நீர்க்கால் . |
| பள்ளம் | தாழ்வு ; தாழ்ந்த நிலம் ; ஆழம் ; குழி ; முகம் , கால் இவற்றில் உள்ள குழிவு . |
| பள்ளம்பறித்தல் | குழிதோண்டுதல் ; ஒருவனைக் கெடுக்க முயலுதல் . |
| பள்ளமடை | தாழ்ந்தவிடத்துப் பாயும் நீர்க்கால் ; பள்ளமான வயலுக்குப் பாயும்படி வைக்கப்பட்ட மடை ; தாழ்ந்தவிடத்தில் வேகமாய்ப் பாயும் நீரோட்டம் ; எளிதாகப் பாய்தற்கு இயலும் பூமி ; எளிதில் நிகழ்வது . |
| பள்ளயம் | காண்க : பள்ளையம் . |
| பள்ளர் | உழவர் ; ஒரு சாதியார்வகை . |
| பள்ளவோடம் | படகுவகை . |
| பள்ளாடு | குள்ளமான ஆட்டுவகை . |
| பள்ளி | கல்வி கற்குமிடம் ; அறை ; அறச்சாலை ; இடம் ; சிற்றூர் ; இடைச்சேரி ; நகரம் ; முனிவர் இருப்பிடம் ; சமண பௌத்தக் கோயில் ; அரசருக்குரிய அரண்மனை முதலியன ; பணிக்களம் ; மக்கட் படுக்கை ; கிறித்துவக் கோயில் ; பள்ளிவாசல் ; தூக்கம் ; விலங்கு துயிலிடம் ; சாலை ; வன்னியச் சாதி ; குள்ளமானவள் ; குறும்பர் . |
| பள்ளிக்கட்டில் | அரியணை . |
| பள்ளிக்கட்டு | இளவரசியின் திருமணம் ; ஊர் உண்டாக்குகை . |
| பள்ளிக்கணக்கன் | பள்ளிக்கூடச் சிறுவன் . |
| பள்ளிக்கணக்கு | பள்ளிக்கூடத்துப் படிப்பு . |
| பள்ளிகிராமம் | கோயிற்குரிய ஊர் . |
| பள்ளிக்குவைத்தல் | பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவைத்தல் . |
| பள்ளிக்குறிப்பு | தூக்கக் குறி . |
| பள்ளிக்கூடத்துத்தம்பி | ஊரில் எழுதப்படிக்கத் தெரிந்தவன் . |
| பள்ளிக்கூடம் | கல்வி கற்குமிடம் . |
| பள்ளிக்கொண்டபெருமாள் | கிடந்த திருக்கோலங்கொண்ட திருமால் . |
| பள்ளிகொண்டான் | கிடந்த திருக்கோலங்கொண்ட திருமால் . |
| பள்ளிகொள்ளுதல் | துயில்கொள்ளுதல் . |
| பள்ளிச்சந்தம் | சமண பௌத்தக் கோயில்களுக்கு வழங்கப்பட்ட ஊர் . |
| பள்ளித்தாமம் | இறைவனுக்குச் சாத்தும் மாலை . |
| பள்ளித்தேவாரம் | அரண்மனையில் வணங்கும் தெய்வம் ; அரண்மனைத் தெய்வத்துக்குரிய பூசை . |
| பள்ளித்தோழமை | பள்ளிக்கூடத்து நட்பு . |
| பள்ளிப்பிள்ளை | மாணாக்கன் . |
| பள்ளிப்பீடம் | காண்க : பள்ளிக்கட்டில் . |
| பள்ளிபடை | அரசர் முதலியோர்க்குப் புரியும் ஈமக்கடன் ; இறந்த அரசரின் நினைவாகக் கட்டப்பட்ட கோயில் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 733 | 734 | 735 | 736 | 737 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழுதுபடல் முதல் - பள்ளிபடை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பாயும், தாழ்ந்த, நிலம், கோயில், இடம், பழஞ்சோறு, பௌத்தக், பள்ளிக்கட்டில், கிடந்த, திருமால், திருக்கோலங்கொண்ட, கற்குமிடம், கல்வி, பள்ளச்சாதி, தாழ்விடத்துப், பள்ளர், பழுப்படைதல், நீர்க்கால், உள்ள, பள்ளக்காடு

