தமிழ் - தமிழ் அகரமுதலி - பழம்பாடம் முதல் - பழுது வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பழம்பாடம் | படித்த பாடம் ; நினைவாற்றலுடன் நன்றாய் மீண்டும் சொல்லக்கூடிய பாடம் . |
| பழம்பெருச்சாளி | அனுபவமிக்க தந்திரசாலி . |
| பழம்பொருள் | கடவுள் ; பழைய பொருள் ; புதையல் . |
| பழம்போக்கு | பழைய முறை . |
| பழமலை | திருமுதுகுன்றம் , விருத்தாசலம் . |
| பழமனை | இடிந்து பாழான வீடு . |
| பழமா | தேமா . |
| பழமெடுத்தல் | பழத்தைப் பறித்தல் ; ஆட்டங்கெலித்தல் . |
| பழமை | தொன்மை ; தொன்மையானது ; வழங்காதொழிந்தது ; சாரமின்மை ; முதுமொழி ; வெகுநாட் பழக்கம் ; நாட்பட்டதால் ஏற்படும் சிதைவு ; பழங்கதை ; மரபு . |
| பழமைபாராட்டுதல் | நெடுநாளாக உள்ள பழக்கத்தைத் தெரிவித்தல் . |
| பழமொழி | முதுசொல் ; பதிணெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று . |
| பழரசம் | பழச்சாறு . |
| பழவடியார் | வழித்தொண்டர் . |
| பழவரிசி | குற்றிப் பழகிய அரிசி . |
| பழவினை | முன்வினை . |
| பழனம் | வயல் ; மருதநிலம் ; பொய்கை . |
| பழனல்வெதிர் | கரும்பு . |
| பழனவெதிர் | கரும்பு . |
| பழனியாண்டவன் | பழனியில் கோயில் கொண்டுள்ள முருகக் கடவுள் . |
| பழனியாண்டி | பழனியில் கோயில் கொண்டுள்ள முருகக் கடவுள் . |
| பழனிவேலன் | பழனியில் கோயில் கொண்டுள்ள முருகக் கடவுள் . |
| பழி | குற்றம் ; நிந்தை ; அலர் ; குறை ; பாவம் ; பழிக்குப் பழி ; பொய் ; பகைமை ; ஒன்றுக்கும் உதவாதவன் . |
| பழிக்குடி | பழம்பகைகொண்ட குடும்பம் ; ஏழைக்குடி . |
| பழிக்குவிடுதல் | அழியவிடுதல் . |
| பழிகரப்பங்கதம் | வசையைக் குறிப்புப் பொருளாகக் கொண்ட செய்யுள்வகை . |
| பழிகரப்பு | வசையைக் குறிப்புப் பொருளாகக் கொண்ட செய்யுள்வகை . |
| பழிகாரன் | பிறர்மேல் பழிகூறுபவன் ; படுபாவி . |
| பழிகிடத்தல் | தன்செயல் நிறைவேற ஒருவன் வீட்டுவாயிலில் உண்ணாமல் இருத்தல் . |
| பழிச்சு | துதி . |
| பழிச்சுதல் | புகழ்தல் ; வணங்குதல் ; வாழ்த்துதல் ; கூறுதல் . |
| பழிச்சொல் | நிந்தை ; அலர் . |
| பழிசுமத்தல் | நிந்தனையேற்றல் ; பழி ஒருவன் மேல் வருதல் ; |
| பழிசுமத்துதல் | அநியாயமாகக் குற்றஞ்சாட்டுதல் . |
| பழிசை | இகழ்ச்சி . |
| பழித்தல் | நிந்தித்தல் ; புறங்கூறுதல் . |
| பழித்துரை | காண்க : பழிச்சொல் . |
| பழிதீர்த்தல் | பழிவாங்குதல் ; பாவம் போக்குதல் . |
| பழிதூற்றுதல் | புறங்கூறுதல் ; அலர்பரப்புதல் . |
| பழிநாணல் | பழிபாவத்திற்கு அஞ்சுதல் . |
| பழிப்பனவு | பழிப்பான செயல் . |
| பழிப்பு | நிந்தை ; குற்றம் ; குறளை ; குறை . |
| பழிப்புக்காரன் | நிந்திப்போன் ; நகைப்புக்கு இடமானவன் . |
| பழிப்புவமை | உவமேயத்தை உயர்த்தி உவமானத்தைப் பழிக்கும் அணி . |
| பழிபாதகம் | பெரும்பாதகம் . |
| பழிபோடுதல் | காண்க : பழிசுமத்துதல் . |
| பழிமுடித்தல் | காண்க : பழிவாங்குதல் . |
| பழிமுடிதல் | பகைமூட்டுதல் . |
| பழிமூட்டுதல் | கோட்சொல்லுதல் . |
| பழிமூளுதல் | பகையுண்டாகை . |
| பழிமொழி | நிந்தனை ; புறங்கூறுகை . |
| பழியேற்றல் | குற்றப் பொறுப்பைத் தாங்குதல் . |
| பழிவாங்குதல் | தீமைக்குத் தீமை செய்தல் . |
| பழிவேலை | வருத்தி வாங்கப்படும் வேலை . |
| பழு | பொன்னிறம் ; விலாவெலும்பு ; விலா ; ஏணியின் படிச்சட்டம் ; சட்டம் ; பேய் . |
| பழுக்க | முற்றவும் . |
| பழுக்கக்காய்ச்சுதல் | சிவக்கக் காய்ச்சுதல் . |
| பழுக்கச்சுடுதல் | நிறம் ஏறப் பொன்னைத் தீயில் காய்ச்சுதல் . |
| பழுக்கப்போடுதல் | ஒரு செயல் முடிவதற்குக் காத்திருத்தல் . |
| பழுக்காய் | பழுத்த பாக்கு ; மஞ்சள் கலந்த செந்நிறம் ; தேங்காய் ; சாயநூல் . |
| பழுக்காய்நூல் | சாயமிட்ட நூல் . |
| பழுக்குறை | எண் குறைந்த விலாவெலும்புகளையுடைய எருதுவகை . |
| பழுத்தபழம் | முதிர்ந்த கனி ; முதிர்கிழவன் ; பக்குமடைந்தவன் ; தீமையிற் கைதேர்ந்தவன் . |
| பழுத்தல் | பழமாதல் ; முதிர்தல் ; மூப்படைதல் ; பக்குவமாதல் ; கைவருதல் ; பரு முதலியன முற்றுதல் ; மனங்கனிதல் ; நிறம் மாறுதல் ; நன்மையாதல் ; செழித்தல் ; மிகுதல் ; பழுப்பு நிறமாதல் ; குழைதல் ; காரம் முதலியன கொடாமையால் பிள்ளை பெற்ற வயிறு பெருத்தல் . |
| பழுது | பயனின்மை ; குற்றம் ; சிதைவு ; பதன் அழிந்தது ; பிணமாயிருக்குந் தன்மை ; பொய் ; வறுமை ; தீங்கு ; உடம்பு ; ஒழுக்கக்கேடு ; இடம் ; நிறைவு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 732 | 733 | 734 | 735 | 736 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழம்பாடம் முதல் - பழுது வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கடவுள், குற்றம், நிந்தை, காண்க, கொண்டுள்ள, பழிவாங்குதல், முருகக், கோயில், பழனியில், ஒருவன், பழிசுமத்துதல், பழிச்சொல், புறங்கூறுதல், நிறம், செய்யுள்வகை, காய்ச்சுதல், செயல், முதலியன, பொய், அலர், கரும்பு, சிதைவு, பழைய, குறை, பாவம், பொருளாகக், குறிப்புப், வசையைக், பாடம், கொண்ட

