தமிழ் - தமிழ் அகரமுதலி - பறண்டை முதல் - பறைதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பறண்டை | ஒரு வாத்தியவகை ; கைம்முட்டியின் மொழி . |
| பறத்தல் | பறவை , பஞ்சு முதலியன வானத்தில் பறத்தல் ; வேகமாக ஓடுதல் ; விரைவுபடுத்தல் ; அமைதியற்று வருந்துதல் ; சிதறியொழிதல் . |
| பறதி | பறத்தல் ; பதற்றம் . |
| பறந்தடித்தல் | கவலையால் விரைவுபடுதல் . |
| பறந்தலை | பாழிடம் ; பாலைநிலத்தூர் ; சுடுகாடு ; போர்க்களம் ; படைவீடு . |
| பறப்பன் | தேள் ; விருச்சிகராசி ; அவசரக்காரன் . |
| பறப்பன | சிறகுடைய உயிரிகள் . |
| பறப்பு | பறக்கை ; விரைவு ; கவலை . |
| பறப்புப்பார்த்தல் | அன்றாட வேலையைக் கவனித்தல் . |
| பறப்பை | பறவை ; பறவை வடிவமாகச் செய்த வேள்விமேடை ; வேள்வியில் நெய்வைக்கும் பாத்திரம் . |
| பறப்பைப்படுத்தல் | கருடன் , பருந்து முதலிய பறவைவடிவாக வேள்விமேடை அமைத்தல் . |
| பறபறத்தல் | மிக விரைதல் ; பறபறவென்று ஒலித்தல் . |
| பறபறெனல் | விரைவுக்குறிப்பு ; துணி கிழித்தல் முதலியன நிகழும்போது உண்டாகும் ஒலிக்குறிப்பு . |
| பறம்பர் | தோல்வேலை செய்பவர் . |
| பறம்பி | மோசக்காரி . |
| பறம்பு | மலை ; பாரியின் மலை ; பாரியின் நாடு ; முலை . |
| பறம்புதல் | அடித்தல் . |
| பறல் | பறவை . |
| பறவாதி | பேராசைக்காரன் ; விரைவுடையோன் ; விரைவு . |
| பறவை | புள் ; இறகு ; பறக்கை ; வண்டு ; அவிட்டநாள் ; அம்மைவகை . |
| பறவைமாநாகம் | காண்க : குக்குடசர்ப்பம் . |
| பறவையணில் | மலையில் வாழும் பறக்கும் அணில்வகை . |
| பறவைவேந்தன் | பறவைக்கு அரசனான கருடன் . |
| பறழ் | பருப்பு ; மரங்களில் வாழ்வன , தவழ்வன , மூங்கா , வெருகு , எலி , அணில் , நாய் , பன்றி , புலி , முயல் , நரி , இவற்றின் இளமைப்பெயர் . |
| பறளிகை | காண்க : பற்றிரும்பு ; தளவரிசைப் படை ; உலோகத்தகடு ; குறடு . |
| பறளை | காண்க : பற்றிரும்பு ; தளவரிசைப் படை ; உலோகத்தகடு ; குறடு . |
| பறாண்டுதல் | காண்க : பிறாண்டுதல் . |
| பறி | பிடுங்குகை ; கொள்ளை ; இறக்கின பாரம் ; மீன்பிடிக்குங் கருவி ; பனையோலைப் பாய் ; உடம்பு ; பொன் . |
| பறிக்கல் | கிட்டம் . |
| பறிகாரன் | அநியாயக்காரன் ; வழிப்பறி செய்வோன் . |
| பறிகொடுத்தல் | களவு கொடுத்தல் ; சாகக் கொடுத்தல் . |
| பறித்தல் | செடியிலிருந்து இலை முதலியவற்றை வலிய நீக்குதல் ; பிடுங்குதல் ; வலிதிற்கவர்தல் ; தோண்டுதல் ; பாரம் இறக்குதல் ; அழித்தல் ; நீக்குதல் . |
| பறிதல் | ஓடிப்போதல் ; நிலைபெயர்தல் ; வெளிப்படுதல் ; எய்யப்படுதல் ; ஒலியுடன் வெளிப்படுதல் ; கட்டவிழ்த்தல் ; இல்லாமற் போதல் ; சேய்மைநிலையாதல் ; ஒட்டிப்போதல் ; திரட்டப்படுதல் ; அறுதல் ; உண்டாதல் ; தணிதல் ; தீர்மானப்படாதிருத்தல் ; தப்பிப் போதல் ; முன்செல்லுதல் ; ஊடுருவுதல் . |
| பறிதலைக்கையர் | தலைமயிரைப் பறித்துக் கொள்ளும் அமணர் . |
| பறிதலையர் | தலைமயிரைப் பறித்துக் கொள்ளும் அமணர் . |
| பறிபோதல் | கொள்ளையிடப்படுதல் . |
| பறிபோடுதல் | மீன்பிடிக்கப் பறிவைத்தல் . |
| பறிமணல் | பொன்மணல் . |
| பறிமுதல் | அரசால் கவர்ந்துகொள்ளப்பட்ட பொருள் ; கொள்ளையிடப்பட்ட பொருள் . |
| பறிமுறை | பல் வீழ்ந்து முளைத்தல் . |
| பறியோலை | பனையோலைப் பாய் . |
| பறிவு | கழிவு ; அதிர்கை ; நிலைபெயர்கை ; ஒட்டிப்போகை . |
| பறிவை | செடிவகை ; சீந்திற்கொடி ; காண்க : நந்தியாவட்டம் ; தாழை . |
| பறுகு | சிறுதூறு ; குள்ளம் . |
| பறுணி | கொள்ளு ; சீந்திற்கொடி ; காண்க : பெருங்குமிழ் ; வல்லாரை ; பெருங்குரும்பை . |
| பறை | தோற்கருவி ; தப்பு ; பறையடிக்குஞ் சாதி ; வட்டம் ; சொல் ; விரும்பிய பொருள் ; ஒரு முகத்தலளவை ; மரக்கால் ; நூல்வகை ; வரிக்கூத்துவகை ; குகை ; பறத்தல் ; பறவை இறகு ; பறவை . |
| பறைக்கோலம் | இழிவான கோலம் . |
| பறைகொட்டுதல் | தப்படித்தல் ; மேளமடித்தல் ; பல் முதலியன ஒன்றுடன் ஒன்று அடித்துக் கொள்ளுதல் . |
| பறைச்சல் | பேச்சு . |
| பறைச்சி | பறைக்குடிப் பெண் . |
| பறைச்சேரி | பறையர் வாழும் இடம் . |
| பறைசாற்றுதல் | காண்க ; பறையறைதல் ; இரகசியத்தை வெளிப்படுத்துதல் . |
| பறைத்தல் | சொல்லுதல் ; நீக்குதல் . |
| பறைத்துடைவை | பறை அடிப்பவர்களுக்கு விடப்படுகிற தோட்டம் முதலிய மானிய வருவாய் . |
| பறைதட்டுதல் | காண்க : பறையறைதல் . |
| பறைதல் | சொல்லல் ; தேய்தல் ; அழிதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 736 | 737 | 738 | 739 | 740 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பறண்டை முதல் - பறைதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பறவை, பறத்தல், நீக்குதல், பொருள், முதலியன, வெளிப்படுதல், போதல், பாய், கொடுத்தல், கொள்ளும், சீந்திற்கொடி, பறையறைதல், அமணர், பனையோலைப், பறித்துக், தலைமயிரைப், உலோகத்தகடு, கருடன், முதலிய, வேள்விமேடை, விரைவு, பறக்கை, பாரியின், இறகு, சொல், குறடு, தளவரிசைப், பற்றிரும்பு, வாழும், பாரம்

