தமிழ் - தமிழ் அகரமுதலி - பரிவர் முதல் - பரும்படி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பரிவர் | அன்புடையவர் . |
| பரிவர்த்திதம் | அபிநயக்கைவகை . |
| பரிவருத்தம் | உலகமுடிவு ; சுற்றுதல் ; பொருள் தந்து பொருள்பெறல் ; ஆமை . |
| பரிவருத்தனம் | பண்டமாற்றுகை ; குதிரைநடைவகை . |
| பரிவருத்தனை | பண்டமாற்றுவகை ; ஒன்றற்கொன்று கொடுத்து வேறொன்று கொண்டனவாகக் கூறும் அணி . |
| பரிவற்சரம் | ஆண்டு . |
| பரிவற்சனம் | கொலை ; விடுகை . |
| பரிவாதம் | பழிச்சொல் . |
| பரிவாரம் | ஏவலர் ; சூழ்ந்திருப்போர் ; படை ; மறவர் அகம்படியருள் ஒரு பிரிவினர் ; உறை . |
| பரிவாரன் | வேலைக்காரன் . |
| பரிவாராலயம் | சுற்றுக்கோயில் . |
| பரிவிரட்டம் | தவறு . |
| பரிவிராசகன் | காண்க : பரித்தியாகி . |
| பரிவிருத்தி | கோள்களின் சுற்று ; கிரகசாரவாக்கியம் . |
| பரிவு | அன்பு ; பக்தி ; இன்பம் ; இரக்கம் ; பக்குவம் ; வருத்தம் ; குற்றம் . |
| பரிவேசம் | காண்க : பரிவேடம் . |
| பரிவேட்டி | வலம்வருகை . |
| பரிவேட்பு | பறவை வட்டமிடுகை . |
| பரிவேடணம் | சூழுதல் ; விருந்தினர்க்குப் பரிமாறுகை . |
| பரிவேடம் | சந்திரசூரியரைச் சூழ்ந்து தோன்றும் வட்டம் . |
| பரிவேடிப்பு | சந்திரசூரியரைச் சூழ்ந்து தோன்றும் வட்டம் . |
| பரிவேதனம் | சம்பாத்தியம் ; திருமணம் ; பரந்த அறிவு ; அழுகை ; பெருந்துயரம் . |
| பரீக்கை | காண்க : பரிசீலனை . |
| பரீட்சணம் | காண்க : பரிசீலனை . |
| பரீட்சித்தல் | ஆராய்தல் ; சோதித்தல் . |
| பரீட்சை | தேர்வு ; ஆராய்ச்சி ; பழக்கம் . |
| பரீதாபி | காண்க : பரிதாபி ; நாற்பத்தாறாம் ஆண்டு . |
| பரு | சிறுகட்டி ; சிலந்திநோய் ; கணு ; கடல் ; மலை ; துறக்கம் ; நெல்லின் முளை . |
| பரு | (வி) அருந்து , உண் ; குடி . |
| பருக்கன் | பரும்படியானது . |
| பருக்குதல் | பருகச்செய்தல் ; பெருக்குதல் . |
| பருக்கென்னுதல் | பருத்துக்காட்டுதல் ; கொப்புளித்தல் . |
| பருக்கை | பருமனாதல் ; சோற்று அவிழ் ; காண்க : பருக்கைக்கல் ; பளிங்கு ; புல்லன் ; கோது . |
| பருக்கைக்கல் | சிறு கூழாங்கல் ; பளிங்கு ; சுக்கான்கல் . |
| பருகல் | குடிக்கை ; குடித்தற்குரியது . |
| பருகு | குடிக்கை . |
| பருகுதல் | குடித்தல் ; உண்ணுதல் ; நுகர்தல் . |
| பருங்கி | வண்டு . |
| பருங்குதல் | பறித்தல் ; கொல்லுதல் . |
| பருங்கை | கொடைக்குணமுள்ளவர் ; பெருஞ்செல்வர் . |
| பருணன் | ஆள்பவன் , நிருவகிப்பவன் . |
| பருணிதன் | புலவன் ; அறிவுப் பக்குவமுடையவன் . |
| பருத்தல் | பெருத்தல் . |
| பருத்தவன் | தடித்தவன் . |
| பருத்தி | பஞ்சு உண்டாகுஞ் செடிவகை ; பஞ்சு . |
| பருத்திக்காடு | பருத்தி விளைநிலம் . |
| பருத்திக்குண்டிகை | பருத்திப் பஞ்சடைத்த குடுவை . |
| பருத்திக்கொட்டை | பருத்திவிதை . |
| பருத்தித்தூறு | வாய்க்கிரந்தி . |
| பருத்திப்பெண்டு | பஞ்சு நூற்கும் பெண் . |
| பருத்திப்பொதி | பருத்திமூட்டை . |
| பருத்திவீடு | பருத்தியின் பன்னப்பட்ட பஞ்சு . |
| பருதி | காண்க : பரிதி ; விளையாட்டுக்குரிய வளையம் . |
| பருந்தலை | பெரிய தலை ; செருக்குள்ளவன் ; பெருஞ்செல்வன் ; மாட்டுக் குற்றவகை . |
| பருந்தாட்டம் | பருந்து தன் இரையைக் கொத்தியாட்டும் செயல் ; பெருந்துன்பம் . |
| பருந்து | பறவைவகை ; வளையல் . |
| பருப்பதம் | மலை . |
| பருப்பதி | பார்வதி . |
| பருப்பம் | பருக்கை ; பருமை ; மலை . |
| பருப்பு | துவரை முதலியவற்றின் உள்ளீடு ; பருமை ; தோல் நீக்கிய தானியங்களின் பகுதி . |
| பருப்புப்பொங்கல் | பருப்புக் கலந்து சமைத்த சோறு . |
| பருப்புமத்து | வெந்த பருப்பை மசிக்க உதவும் மத்துவகை . |
| பருப்பொருள் | நூலின் பிண்டப்பொருள் ; சுவையற்ற பொருள் ; பாட்டின் மேலெழுந்த வாரியான பொருள் . |
| பருப்போரை | காண்க : பருப்புப்பொங்கல் . |
| பருபருக்கை | வேகாச் சோறு ; சிறு கூழாங்கல் போன்ற பொருள் ; ஓரினப் பொருள்களில் பெரியது ; சிறிதும் பெரிதுமான பொருள் தொகுதி ; ஒன்றிரண்டாக உடைக்கப்பட்ட தானியம் . |
| பருபாரித்தல் | மிகப் பருத்தல் . |
| பரும்படி | உரப்பானது ; செவ்வையின்மை ; பருமட்டு ; பெருவாரி ; கறி முதலியவற்றோடு சேர்ந்த சோறு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 726 | 727 | 728 | 729 | 730 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பரிவர் முதல் - பரும்படி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பொருள், பஞ்சு, சோறு, குடிக்கை, கூழாங்கல், பருத்தல், பருந்து, பருப்புப்பொங்கல், பருமை, சிறு, பருத்தி, பருக்கைக்கல், சந்திரசூரியரைச், பரிவேடம், ஆண்டு, சூழ்ந்து, தோன்றும், பருக்கை, பரிசீலனை, வட்டம், பளிங்கு

