தமிழ் - தமிழ் அகரமுதலி - பரிச்சேதம் முதல் - பரிநாமம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பரிச்சேதம் | துண்டிப்பு ; அளவுக்கு உட்படுகை ; அத்தியாயம் ; பகுத்தறிகை ; முழுமை ; சிறுபகுதி . |
| பரிச்சை | பழக்கம் ; காண்க : பரீட்சை . |
| பரிசகம் | சித்திரசாலை . |
| பரிசணித்தல் | மெதுவாய்ப் பேசுதல் . |
| பரிசம் | முலைவிலை , மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்காகத் தரும் கொடைப்பொருள் ; சீதனம் ; தொடுதல் ; ஊற்றறிவு ; கிரகணம் பற்றல் ; பரத்தைக்குக் கொடுக்கும் முன்பணம் ; ஆழம் ; ஆசிரியன் மாணவற்குச் செய்யும் தீட்சைகளுள் ஒன்று ; வல்லெழுத்து மெல்லெழுத்துகள் . |
| பரிசம்போடுதல் | திருமணம் உறுதிசெய்தல் . |
| பரிசயம் | பழக்கம் . |
| பரிசயித்தல் | பழகுதல் . |
| பரிசரண் | காவற்காரன் ; தோழன் ; படைத்தலைவன் . |
| பரிசன்னியம் | மேகம் ; மேரு . |
| பரிசனபேதி | காண்க : பரிசனவேதி . |
| பரிசனம் | உறவு ; ஏவல் செய்வோர் ; பரிவாரம் ; தொடுதல் ; கிரகணம் பற்றுகை . |
| பரிசனவேதி | தாழ்ந்த உலோகங்களைப் பொன்னாக்கும் மருந்து . |
| பரிசனன் | காற்று . |
| பரிசனை | காண்க : பரிசயம் . |
| பரிசாரகம் | ஏவற்றொழில் ; சமையல்தொழில் . |
| பரிசாரகன் | பணியாள் ; சமையற்காரன் . |
| பரிசாரம் | காண்க : பரிசாரகம் ; வணக்கம் ; பெண்மயிர் . |
| பரிசாரிகை | வேலைக்காரி . |
| பரிசித்தல் | தொடுதல் ; தீண்டல் ; கிரகணம் பற்றுதல் ; நுகர்தல் ; பழகுதல் . |
| பரிசிரமம் | பெருமுயற்சி ; மிகுவருத்தம் . |
| பரிசிரயம் | கூட்டம் . |
| பரிசில் | கொடை ; சிற்றோடம் . |
| பரிசிலர் | பரிசில்வேண்டி இரப்போர் . |
| பரிசிலாளர் | பரிசில்வேண்டி இரப்போர் . |
| பரிசீலனை | ஆராய்ச்சி ; சோதனை . |
| பரிசு | பரிசில் ; குணம் ; விதம் ; விதி ; பெருமை ; சிற்றோடம் ; கொடை ; மணமகளுக்கு மணமகன் வீட்டார் அளிக்கும் பணம் முதலியன . |
| பரிசுகெடுதல் | சீரழிதல் . |
| பரிசுத்தம் | தூய்மை ; துப்புரவு . |
| பரிசுத்தர் | தூயோர் ; தேவதூதர் . |
| பரிசுத்தவான் | தூயோன் . |
| பரிசுத்தன் | தூயோன் . |
| பரிசுத்தை | தூய்மையானவள் . |
| பரிசை | கேடகம் ; விருது ; சிற்றோடம் ; கருமத்தைத் தடுத்தற்பொருட்டுப் பொறுக்கவேண்டும் துன்பங்கள் . |
| பரிசைக்காரன் | கேடகம் பிடிப்போன் . |
| பரிசோதனை | நன்கு ஆராய்தல் . |
| பரிசோதித்தல் | நன்கு ஆராய்தல் . |
| பரிஞ்சு | வாட்பிடி . |
| பரிஞ்ஞானம் | பேரறிவு . |
| பரிட்சித்தல் | ஆராய்தல் ; சோதனைசெய்தல் . |
| பரிட்டவணை | மாறுகை . |
| பரிட்டினகம் | பறவை வட்டமிடுதல் . |
| பரிணதன் | கற்றோன் . |
| பரிணமித்தல் | ஒன்றிலிருந்து ஒன்று பெருகுதல் ; நிலைமாறுதல் . |
| பரிணயம் | திருமணம் . |
| பரிணாமம் | ஒன்று மற்றொன்றாக மாறுதல் . |
| பரித்தல் | அறுத்தல் ; சூழ்தல் ; ஓடுதல் ; சுமத்தல் ; ஆளுதல் ; பொறுக்கியெடுத்தல் ; பாதுகாத்தல் ; தரித்தல் . |
| பரித்தியாகம் | முற்றுந்துறத்தல் . |
| பரித்தியாகி | துறவி . |
| பரித்திராசம் | பெரும்பயம் . |
| பரித்திராணம் | பாதுகாப்பு . |
| பரிதபித்தல் | காண்க : பரிதவித்தல் . |
| பரிதல் | பற்றுவைத்தல் ; காதல்கொள்ளுதல் ; இரங்குதல் ; சார்பாகப் பேசுதல் ; வருந்துதல் ; பிரிதல் ; அறுதல் ; முறிதல் ; அழிதல் ; ஓடுதல் ; வெளிப்படுதல் ; அஞ்சுதல் ; வருந்திக் காத்தல் ; பகுத்தறிதல் ; அறிதல் ; அறுத்தல் ; அழித்தல் ; நீங்குதல் ; கடத்தல் ; உதிர்த்தல் ; வாங்கிக்கொள்ளுதல் . |
| பரிதவித்தல் | துயருறல் ; வருந்துதல் ; இரங்குதல் . |
| பரிதாகம் | வெம்மை . |
| பரிதாபப்படுதல் | வருந்துதல் ; இரங்குதல் . |
| பரிதாபம் | துன்பம் ; இரக்கம் ; தான் செய்த குற்றத்துக்கு வருந்துகை ; பெருந்தாகம் . |
| பரிதாபி | அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தாறாம் ஆண்டு ; இரக்கமுள்ளவன் ; துன்புறுபவர் . |
| பரிதானம் | பண்டமாற்று ; கைக்கூலி . |
| பரிதி | பரிவேடம் : வட்டவடிவு ; சூரியன் ; சக்கரப்படை ; தேருருளை ; சக்கரவாகப்புள் ; ஒளி ; வேள்விமேடை ; தருப்பை ; திருக்குறள் உரையாசிரியருள் ஒருவர் . |
| பரிதிமண்டலம் | சூரியமண்டலம் . |
| பரிதிவட்டம் | சூரியமண்டலம் . |
| பரிது | பெரியது ; விதம் . |
| பரிந்துபேசுதல் | மற்றொருவருக்காகப் பேசுதல் ; அன்போடு பேசுதல் . |
| பரிந்துரை | சிபாரிசு ; ஆதரவுப் பண்பு . |
| பரிநாமம் | புகழ் ; செல்வம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 724 | 725 | 726 | 727 | 728 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பரிச்சேதம் முதல் - பரிநாமம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பேசுதல், வருந்துதல், ஆராய்தல், சிற்றோடம், ஒன்று, இரங்குதல், கிரகணம், தொடுதல், சூரியமண்டலம், கேடகம், தூயோன், நன்கு, அறுத்தல், விதம், பரிதவித்தல், ஓடுதல், கொடை, பழகுதல், பரிசயம், திருமணம், வீட்டார், பரிசனவேதி, பரிசாரகம், பரிசில்வேண்டி, பழக்கம், பரிசில், இரப்போர்

