தமிழ் - தமிழ் அகரமுதலி - பல்லக்கு முதல் - பலசம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பல்லக்கு | ஆள்கள் சுமந்து செல்லும் ஊர்திவகை . |
| பல்லகம் | கரடி . |
| பல்லகி | சேங்கொட்டைமரம் . |
| பல்லணம் | குதிரைக்கலணை . |
| பல்லதி | ஒரு பண்வகை . |
| பல்லம் | அம்பு ; குதிரைக்கலணை ; கரடி ; ஒரு பேரெண் ; சேங்கொட்டைமரம் ; ஆயுதவகை . |
| பல்லயம் | ஒரு கைவாள்வகை . |
| பல்லரளை | பல் ஈற்று நோய்வகை . |
| பல்லரணை | பல் ஈற்று நோய்வகை . |
| பல்லவத்திரு | அசோகமரம் . |
| பல்லவதரையர் | பல்லவ அரச மரபினர் . |
| பல்லவம் | தளிர் ; அம்பு ; ஒருநாடு ; கீர்த்தனத்தில் ஓர் உறுப்பு . |
| பல்லவர் | பலர் ; பல்லவ அரசர் . |
| பல்லவராயன் | சோழப் படைத்தலைவர்களின் பட்டங்களுள் ஒன்று ; மூடன் ; இளிச்சவாயன் ; கள்ளர் ஓச்சர்களின் பட்டப்பெயர் . |
| பல்லவன் | காமுகன் ; கீழ்மகன் . |
| பல்லவி | இசைப்பாட்டில் பாடப்படும் முதலுறுப்பு . |
| பல்லவை | பல பொருள் ; இழிவான பொருள் ; இழிவு . |
| பல்லாக்கு | காண்க : பல்லக்கு . |
| பல்லாங்குழி | பதினான்கு குழியுள்ள ஒரு விளையாட்டுக்கு உதவும் பலகை ; சோகி முதலியவற்றால் பல்லாங்குழிப் பலகையில் ஆடும் விளையாட்டு . |
| பல்லாண்டு | ' நீடு வாழ்க ' என்னும் வாழ்த்து ; பலவருடம் ; காண்க : திருப்பல்லாண்டு . |
| பல்லாதகி | சேங்கொட்டைமரம் . |
| பல்லார் | பலர் . |
| பல்லி | ஒரு சிற்றுயிரிவகை ; பூடுவகை ; வெற்றிலைக் கணுவில் அரும்பும் குருத்து ; பெரிய பல்லுடையவள் ; பலுகுக் கட்டை ; கற்சிலைப் புள் ; ஊரின் அரைக்கூறு . |
| பல்லிதழ் | பல இதழ்கொண்ட மலர் . |
| பல்லிப்பூண்டு | கொல்லைப்பல்லி யென்னும் பூண்டு . |
| பல்லிபடுதல் | பல்லி சத்தமிடுதல் . |
| பல்லிபற்றுதல் | ஒன்றை விடாது பற்றுதல் . |
| பல்லியம் | பலவகை இசைக்கருவிகள் ; குதிரைப்பந்தி ; தொங்கல் ; மருதநிலம் . |
| பல்லியாடுதல் | விதைத்தபின் மட்டம் செய்தல் . |
| பல்லிளித்தல் | பல்லை வெளிக்காட்டுதல் ; புடைவை சாயம்போதல் . |
| பல்லிற்சொத்தை | கெட்டுப்போன பல் . |
| பல்ல¦று | பற்களைப் பற்றியுள்ள தசை . |
| பல்லு | காண்க : பல் . |
| பல்லுக்கட்டுதல் | பல்லுக்குத் தங்கம் கட்டுதல் ; செயற்கைப் பல் வைத்தல் . |
| பல்லுக்காட்டுதல் | வெளிப்படச் சிரித்தல் ; கெஞ்சுதல் ; புடைவை சாயம்போதல் . |
| பல்லுக்கிட்டுதல் | குளிர் முதலியவற்றால் வாய்திறக்க முடியாமல் பற்கள் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கை . |
| பல்லுக்குச்சி | பல் விளக்க உதவுங் குச்சி . |
| பல்லுக்குத்துதல் | பல்லிடுக்கிற் செருகிய பொருளைக் குத்தி எடுத்தல் . |
| பல்லுகம் | கரடி ; பெருவாகைமரம் . |
| பல்லுத்தேய்த்தல் | காண்க : பல்விளக்குதல் . |
| பல்லுறைப்பை | பல அறைகளையுடைய பை . |
| பல்லூகம் | கரடி . |
| பல்லூழ் | பல தடவை . |
| பல்லூறுதல் | பல் முளைக்கையில் உண்டாகுந்தினவு . |
| பல்லைக்கடித்தல் | சினம் முதலியவற்றால் பல்லை நெறுநெறுத்தல் . |
| பல்லைத்திறத்தல் | காண்க : பல்லுக்காட்டுதல் . |
| பல்லைப்பிடித்துப்பார்த்தல் | மாட்டின் வயதைக் கணித்தல் ; ஒருவன் திறனை ஆராய்தல் . |
| பல்லைப்பிடுங்குதல் | பல்லைப் பிடுங்கிவிடுதல் ; ஆற்றலை வாங்குதல் . |
| பல்வலம் | சிறுகுளம் . |
| பல்வலிப்பறவை | சரபப்பறவை . |
| பல்வளம் | நில நீர் முதலிய அனைத்தும் வளம் பெற்றிருத்தல் . |
| பல்விளக்குதல் | பல்லைத் தூய்மைசெய்தல் . |
| பல | ஒன்றுக்கு மேற்பட்டவை . |
| பலக்கேடு | வலியின்மை . |
| பலகணி | சாளரம் ; திட்டிவாயில் . |
| பலகம் | அடுக்கு ; கேடகம் ; நாற்காலி . |
| பலகறை | சோகி . |
| பலகாரம் | யானைமேற்றவிசு ; சோறு அல்லாத சிற்றுண்டிவகை . |
| பலகால் | பலமுறை . |
| பலகீனம் | வலுக்குறைவு . |
| பலகை | மரப்பலகை ; உழவில் சமன்படுத்தும் மரம் ; சூதாட உதவுவதும் கோடுகள் வரையப்பட்டதுமான பலகை ; நெடும்பரிசை ; எழுதும் பலகை ; வரிக்கூத்து ; யானைமேற்றவிசு ; பறைவகை ; வயிரக் குணங்களுள் ஒன்று . |
| பலகைமரம் | நெய்வார் கருவியுள் ஒன்று ; பலகை அறுக்க உதவும் மரம் . |
| பலகையடித்தல் | பரம்படித்தல் . |
| பலங்கனி | பலாப்பழம் . |
| பலசம் | நகரவாயில் ; பழம் ; பனசம் ; போர் ; வயல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 728 | 729 | 730 | 731 | 732 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பல்லக்கு முதல் - பலசம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பலகை, காண்க, கரடி, முதலியவற்றால், சேங்கொட்டைமரம், ஒன்று, பல்லை, பல்லி, சாயம்போதல், மரம், யானைமேற்றவிசு, பல்விளக்குதல், பல்லுக்காட்டுதல், புடைவை, உதவும், ஈற்று, அம்பு, குதிரைக்கலணை, நோய்வகை, பல்லவ, பல்லக்கு, பொருள், பலர், சோகி

