தமிழ் - தமிழ் அகரமுதலி - பரிநியாசம் முதல் - பரிவயம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பரிநியாசம் | முடிவுசெய்கை ; வசனப்பொருள் . |
| பரிநிர்வாணம் | வீடுபேறு . |
| பரிப்பாகன் | குதிரை நடத்துவோன் . |
| பரிப்பு | இயக்கம் ; துன்பம் ; தாங்குகை . |
| பரிபக்குவம் | ஞானமுதிர்ச்சி ; தகுதி . |
| பரிபணம் | கைப்பணம் ; மூலதனம் . |
| பரிபரி | யானையை அடக்கும் பரியாய மொழிச்சொல் . |
| பரிபவம் | அவமானம் ; எளிமை ; இகழ்ச்சி . |
| பரிபவித்தல் | அவமதித்தல் , இகழ்தல் . |
| பரிபாகம் | சமைக்கை ; பக்குவம் ; முதிர்வு . |
| பரிபாகி | தகுந்தவன் ; அறிவுமுதிர்ச்சியுள்ளவன் . |
| பரிபாடி | ஒழுங்கு . |
| பரிபாடை | குறியீடு ; குழூஉக்குறி . |
| பரிபாலகன் | காப்போன் ; உதவியளிப்போன் . |
| பரிபாலனம் | ஆளுகை ; பாதுகாப்பு . |
| பரிபாலித்தல் | பாதுகாத்தல் ; அருளுதல் . |
| பரிபுரம் | காற்சிலம்பு . |
| பரிபுலம்புதல் | மிக வருந்துதல் . |
| பரிபூதம் | தெரிவு ; அவமானம் ; தூய்மையுள்ளது ; பழையது . |
| பரிபூர்த்தி | நிறைவு ; மிகுதி . |
| பரிபூரணத்துவம் | முழுமைத்தன்மை . |
| பரிபூரணதசை | வீடுபேறு ; இறப்பு . |
| பரிபூரணம் | நிறைவு ; மிகுதி ; முடிவு ; இறப்பு . |
| பரிபூரணன் | முழுமையன் ; கடவுள் . |
| பரிபூரணி | பார்வதி ; திருமகள் . |
| பரிமகம் | அசுவமேதம் . |
| பரிமளதிரவியம் | மணப்பண்டம் . |
| பரிமளதைலம் | நறுமணமுடைய எண்ணெய் . |
| பரிமளம் | மிகுமணம் ; நறுமணம் . |
| பரிமளித்தல் | மிகுமணம் வீசுதல் ; சிறப்படைதல் ; கூடிக்களித்தல் ; சிறக்கப் போற்றுதல் ; புகழ்தல் . |
| பரிமளிப்பு | மணம்வீசுதல் ; சிறப்பு ; போற்றுகை ; புகழ்ச்சி ; மகிழ்ச்சி ; கூடிக்களிக்கை . |
| பரிமா | குதிரை . |
| பரிமாணம் | அளவு . |
| பரிமாவடிப்போர் | குதிரைப்பாகர் . |
| பரிமாற்றக்காரி | விபச்சாரி . |
| பரிமாற்றப்பிழை | தீயொழுக்கம் . |
| பரிமாற்றம் | மாற்றிக்கொள்ளுகை ; நடக்கை ; நோய் பரவியிருக்கை ; கலந்திருக்கை ; விபசாரம் . |
| பரிமாறுதல் | மாற்றிக்கொள்ளுதல் ; உணவு படைத்தல் ; நுகர்தல் ; பணிமாறுதல் ; கையாளுதல் ; உட்கொள்ளுதல் ; புணர்தல் ; நடமாடுதல் ; பரவுதல் ; ஒழுகுதல் ; உலாவுதல் . |
| பரிமித்தல் | அலங்கரித்தல் . |
| பரிமிதம் | அளவுபட்டது . |
| பரிமிதி | காண்க : பரிமாணம் . |
| பரிமுகம் | காலின் குதிரைமுகம் ; அசுவினிநாள் . |
| பரிமுகமாக்கள் | கின்னரர் . |
| பரிமுகவம்பி | குதிரைமுகவோடம் . |
| பரிமேதம் | காண்க : பரிமகம் . |
| பரிமேயம் | காண்க : பரிமிதம் . |
| பரிய | பருத்த . |
| பரியகம் | பாதகிண்கிணி ; காற்சரி ; கைச்சரி . |
| பரியங்கம் | கட்டில் ; துயிலிடம் . |
| பரியட்டக்காசு | துகில்வகை . |
| பரியது | பெரிய உடம்புபெற்றது . |
| பரியந்தம் | எல்லை . |
| பரியம் | மணப்பரிசு ; பரத்தையர்பெறுங் கூலி . |
| பரியயம் | அசட்டை ; எதிரிடை ; ஒழுங்கின்மை . |
| பரியரை | மரத்தின் பருத்த அடிப்பகுதி . |
| பரியல் | இரங்குதல் ; விரைந்து செல்லுதல் . |
| பரியவசானம் | கடைமுடிவு . |
| பரியவம் | பலர் செல்லும் வழி . |
| பரியழல் | காண்க : வடவைத்தீ . |
| பரியன் | பெரியோன் ; உருவத்தால் பெரியவன் . |
| பரியாசகர் | வேடிக்கைக்காரர் . |
| பரியாசம் | காண்க : பரிகாசம் . |
| பரியாசை | காண்க : பரிகாசம் . |
| பரியாத்தி | மனநிறைவு ; பகுத்தறிகை ; சம்பாதிக்கை . |
| பரியாயச்சொல் | ஒருபொருள் குறித்த மாற்றுச்சொல் . |
| பரியாயப்பெயர் | ஒருபொருட் பல்பெயர் . |
| பரியாயநாமம் | ஒருபொருட் பல்பெயர் . |
| பரியாயம் | மாற்றுச்சொல் ; நானாவிதம் ; பொருளை வெளிப்படையாய்க் கூறாது குறிப்பாய்க் கூறும் அணி ; பரிணாமம் ; தடவை . |
| பரியாரம் | மாற்றுவழி . |
| பரியாரி | காண்க : பரிகாரி . |
| பரியாலோசனை | ஆராய்தல் ; கூர்ந்த யோசனை . |
| பரியாளம் | சூழ்வோர் . |
| பரிவட்டச்சீலை | நேர்த்தியான ஆடை . |
| பரிவட்டணை | மாறுகை ; யாழ்நரம்பு தடவுகை ; விருது . |
| பரிவட்டம் | ஆடை ; கோயில் மரியாதையாக வணங்குவோரின் தலையைச்சுற்றிக் கட்டும் கடவுளாடை ; சீலை ; துண்டுச்சீலை ; தெய்வத்திருமேனியின் உடை ; துக்ககாலத்தில் தலையிற் கட்டுஞ் சீலை ; நெய்வார்கருவி வகை ; காண்க : பரிவேடம் . |
| பரிவத்தித்தல் | சுற்றுதல் . |
| பரிவதனம் | அழுதல் ; நிந்தனை . |
| பரிவயம் | அரிசி ; இளமை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 725 | 726 | 727 | 728 | 729 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பரிநியாசம் முதல் - பரிவயம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பரிகாசம், பருத்த, மாற்றுச்சொல், ஒருபொருட், சீலை, பல்பெயர், பரிமிதம், பரிமாணம், நிறைவு, அவமானம், குதிரை, மிகுதி, இறப்பு, மிகுமணம், பரிமகம், வீடுபேறு

