தமிழ் - தமிழ் அகரமுதலி - பணிப்பகை முதல் - பத்திநெறி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பணிப்பகை | பாம்பின் பகையான கருடன் . |
| பணிப்படுத்துதல் | ஒப்பனைசெய்தல் ; செப்பனிடுதல் ; உண்டாக்குதல் ; வேலைசெய்தல் . |
| பணிப்பு | தணிவு ; ஏவல் . |
| பணிப்பெண் | குற்றேவல்மகள் . |
| பணிப்பொத்தி | துகில்வகை . |
| பணிப்பொன் | அணிகல வடிவான பொன் . |
| பணிபதம் | தாழ்ந்த சொல் . |
| பணிபோதல் | ஒரே செயலாயிருத்தல் ; தொழில் புரிதல் . |
| பணிமக்கள் | தொண்டுபுரிவோர் . |
| பணிமடங்குதல் | வேலைமுடிகை . |
| பணிமாறுதல் | இரட்டல் ; ஊதுதல் ; தொண்டு செய்தல் ; தொழில்மாறுதல் . |
| பணிமுடக்கம் | வேலைநிறுத்தம் . |
| பணிமூட்டு | தளவாடம் . |
| பணிமூப்பிமார் | தேவரடியார் . |
| பணிமொழி | தாழ்ந்த சொல் ; மென்மொழி ; பெண் ; கட்டளை . |
| பணியல் | வழிபாடு . |
| பணியார் | பகைவர் . |
| பணியாரம் | காண்க : பணிகாரம் . |
| பணியாளர் | வேலைக்காரர் . |
| பணியிறை | ஆதிசேடன் . |
| பணியினாக்கு | தண்ணீர்விட்டான்செடி . |
| பணியோள் | பணிப்பெண் . |
| பணிலம் | சங்கு ; வலம்புரிச்சங்கு ; சங்கினால் இயன்ற கைவளைவகை . |
| பணிவிடை | குற்றேவல் ; திருப்பணி ; வேலை ; கட்டளை . |
| பணிவிடைக்காரன் | வேலையாள் ; தொழிலாளி ; கோயிற்பிள்ளை . |
| பணிவிளக்கு | கோயில்விளக்குவகை . |
| பணிவு | கீழ்ப்படிகை ; வணக்கம் ; குறை ; தாழ்விடம் . |
| பணினம் | காண்க : பணாதரம் . |
| பணீசன் | காண்க : பணியிறை . |
| பணை | பருமை ; பெருமை ; மரக்கொம்பு ; மூங்கில் ; அரசமரம் ; மருதநிலம் ; வயல் ; நீர்நிலை ; குதிரை யானைகள் தங்குமிடம் ; விலங்கின் படுக்கை ; முரசு ; வாத்தியம் ; மருதநிலப்பறை ; உயரம் ; பரண் ; தவறுகை ; ஐந்து ஆண்டுகொண்ட காலவளவு ; சாணைக்கல் ; உலைக்களத்துப் பட்டடை ; யானைத்தந்தம் . |
| பணைத்தல் | பருத்தல் ; செழித்தல் ; பிழைத்தல் . |
| பணையம் | பந்தயப்பொருள் ; ஈடு ; காலணிவகை . |
| பணையவன் | முரசறைவோன் . |
| பணையான் | சாணைக்கல் செய்வோன் . |
| பத்தகேசரி | கருப்பூரம் . |
| பத்தங்கெட்டவன் | ஒழுக்கங்கெட்டவன் . |
| பத்தசாரம் | காடி . |
| பத்ததி | ஒழுங்கு ; ஆகமக் கிரியைக்கு வழி காட்டும் நூல் ; சொற்பொருள் ; வழி . |
| பத்தம் | கட்டு ; உண்மை ; உணவு ; செய்நன்றியறிகை ; குவியல் ; உண்கலம் . |
| பத்தர் | கடவுளன்புடையவர் , அடியார் ; அன்புடையார் ; வீரசைவரில் புலால் உண்ணாத வகுப்பினர் ; இருவினைப் பிணைப்புள்ள ஆன்மாக்கள் ; வணிகர்கள் ; தட்டார் பட்டப்பெயர்களுள் ஒன்று ; குடுக்கை ; தொட்டி ; மரத்தாலான நீர் இறைக்கும் கருவி ; குழி ; நார் உரித்தற்கு ஏற்ற பனைமட்டையின் ஓர் உறுப்பு . |
| பத்தராய்ப்பணிவார் | தொகையடியாருள் சிவபிரானுக்கும் சிவனடியாருக்கும் தொண்டு புரியும் ஒரு சாரார் . |
| பத்தராவி | பத்தர்களுக்கு உயிர்போன்ற திருமால் . |
| பத்தல் | நீரிறைக்குங் கருவி ; தொட்டி ; குடுக்கை ; குழி ; நார் உரித்தற்கு ஏற்ற பனைமட்டையின் ஓர் உறுப்பு . |
| பக்தவற்சலன் | அடியார்களிடம் பேரன்புள்ள கடவுள் . |
| பத்தனம் | பட்டணம் . |
| பத்தா | கணவன் ; துப்பு ; படிப்பணம் . |
| பத்தாசு | படகு . |
| பத்தாசை | நன்றியும் அன்பும் . |
| பத்தாம்பசலி | காலத்திற்குப் பொருந்தாத பழங்கருத்து . |
| பத்தாயம் | தானியம் முதலியன இட்டுவைக்கும் களஞ்சியம் ; பெரும்பெட்டகம் ; விலங்கு முதலியன அடைக்குங் கூண்டு ; எலி முதலியன பிடிக்கும் பொறி . |
| பத்தி | வழிபாடு ; ஒழுக்கம் ; முறைமை ; வரிசை ; வகுப்பு ; பத்திரிகை முதலியவற்றின் நீளவாட்டுப் பகுதி ; அலங்கார வேலைப்பாடு ; யானையின் நடைவகை ; வீட்டிறப்பு ; தூணின் இடைவெளி ; பாத்தி ; நம்பிக்கை ; பக்தி ; படைத்தொகுதி . |
| பத்திக்கீற்று | காண்க : தொய்யில் . |
| பத்திக்குறடு | கோயிலுள் எழுப்பப்பட்டிருக்கும் திண்ணை . |
| பத்திசாரன் | திருமழிசையாழ்வார் . |
| பத்திடை | ஆயிரம் பலங்கொண்ட நிறுத்தலளவை . |
| பத்திநெறி | பத்தியால் நற்கதியடையும் முறை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 713 | 714 | 715 | 716 | 717 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பணிப்பகை முதல் - பத்திநெறி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சொல், முதலியன, நார், குழி, ஏற்ற, உறுப்பு, பனைமட்டையின், கருவி, உரித்தற்கு, குடுக்கை, தொண்டு, தாழ்ந்த, பணிப்பெண், கட்டளை, வழிபாடு, சாணைக்கல், பணியிறை, தொட்டி

