தமிழ் - தமிழ் அகரமுதலி - பண்புச்சொல் முதல் - பணிநர் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
பண்புச்சொல் | பண்புணர்த்துஞ் சொல் . |
பண்புடைமை | எல்லார் இயல்புகளையும் அறிந்து ஒத்து ஒழுகும் தன்மை . |
பண்புத்தொகை | பண்புருபு இடையில் மறைந்து வருவது . |
பண்புதொகுமொழி | பண்புருபு இடையில் மறைந்து வருவது . |
பண்புருபு | பண்பைக் குறிக்கும் 'ஆகிய' என்னும் சொல்லுருபு . |
பண்புரைப்பார் | தூதர் . |
பண்புலம் | உரமிட்ட வயல் . |
பண்புவமை | ஒன்றன் பண்பை மற்றொன்றற்கு ஒப்பிடுவது . |
பண்பொட்டு | காண்க : பண்புத்தொகை . |
பண்மகள் | விறலி . |
பண்மாறு | தேசிக்கூத்தை ஒருமுறை ஆடி முடிக்கை . |
பண்விடுதல் | நிலைகுலைதல் . |
பணக்காரன் | செல்வன் . |
பணக்காரி | செல்வமிக்கவள் . |
பணக்கொழுப்பு | செல்வச்செருக்கு . |
பணச்சலுகை | செல்வச்செருக்கு . |
பணத்தட்டு | பணமுடை . |
பணதரம் | படத்தையுடைய பாம்பு . |
பணதி | வேலைப்பாடு ; செயல் ; படைப்பு ; அணிகலன் ; கற்பனை . |
பணப்பித்து | பணவாசை . |
பணப்பேய் | பொருளாசை மிகுந்தவன் . |
பணம் | பருமை ; ஒரு நாணயம் ; பொற்காசு ; வாணிகச் சரக்கு ; பொருள் ; விலை ; யானை நடத்தும் ஆயுதம் ; பந்தயம் ; பாம்பின் படம் ; பாம்பு ; இடங்கை வலங்கைப் பிரிவினர் ; வேலை ; வீடு ; பணையப்பொருள் . |
பணமணி | நாகரத்தினம் . |
பணமிடுக்கு | செல்வத்தாலான வலிமை . |
பணமிதப்பு | செல்வமிகுதி . |
பணமுடக்கம் | பணமில்லாக் குறைவு ; பணம் வட்டியின்றி வீணாகத் தங்குகை . |
பணமுடிச்சு | பணக்கிழி . |
பணமுடை | பணத்தட்டு . |
பணயம் | ஈடாக வைத்த பொருள் ; விலை மகளுக்குக் கொடுக்குங்கூலி ; பந்தயப் பொருள் . |
பணர் | மரக்கிளை ; அடர்ந்த கொம்பு . |
பணவம் | தம்பட்டம் . |
பணவன் | வேலைக்காரன் . |
பணவிடை | அஞ்சல்வழி விடுக்கும் பணம் . |
பணவெடை | நான்கு குன்றிமணி அல்லது அரைக்கால் வராகன் எடையுள்ள பொன்னிறை . |
பணவை | பரண் ; கழுகு ; பேய் ; அளவு . |
பணாங்கனை | விலைமகள் . |
பணாடவி | பாம்புப் படத்தின் கூட்டம் . |
பணாதரம் | காண்க : பணதரம் . |
பணாமகுடம் | பாம்பின் படமுடி . |
பணாமணி | நாகரத்தினம் ; மாணிக்கவகை . |
பணி | செயல் ; தொழில் ; தொண்டு ; பணிகை ; பரக்கை ; பயன்தரும் வேலை ; நுகர்பொருள் ; அணிகலன் ; மலர்களால் அலங்கரிக்கை ; பட்டாடை ; தோற்கருவி ; வேலைப்பாடு ; வகுப்பு ; சொல் ; கட்டளை ; விதி ; வில்வித்தை முதலியவற்றைக் கற்பிக்குந் தொழில் ; ஈகை ; நாகம் ; தாழ்ச்சி . |
பணி | (வி) தொழு , பணி , பணிஎன் ஏவல் . |
பணிக்கம் | திருத்தம் ; தொழிலில் நேர்மை ; எச்சில் உமிழும் கலம் . |
பணிக்களரி | தொழில் செய்யும் இடம் ; தொழிற்சாலை . |
பணிக்கன் | ஆசாரியன் ; படைக்கலம் , கூத்து முதலியன பயிற்றுவோன் ; தலைமைக் கொற்றன் ; தச்சன் ; யானைப்பாகன் ; நாவிதர் தலைவன் ; நச்சுத்தீர்க்கும் மருத்துவன் ; பள்ளர்சாதி வகையான் ; சாராயங் காய்ச்சுகிறவன் . |
பணிக்காயன் | ஊழியன் . |
பணிக்காரன் | வேலையாள் . |
பணிக்கு | தொழிலில் நேர்மை ; நல்ல உடற்கூறு ; விவரமான குறிப்பு ; சூழ்வினை . |
பணிக்குதல் | பணித்தல் . |
பணிக்கை | நேர்த்தியாய் முகமயிர் வெட்டுகை . |
பணிக்கொட்டில் | தொழிற்சாலை . |
பணிகாரம் | தின்பண்டவகை . |
பணிகொள்ளுதல் | தொண்டனாக ஏற்றுக் கொள்ளுதல் . |
பணிகோள் | வணக்கம் . |
பணிசாரகன் | காண்க : பணிக்காரன் . |
பணிசெய்வோன் | வேலை செய்பவன் ; திருமணம் , சாவு முதலிய காலங்களில் சங்கு அல்லது தாரை ஊதும் சாதியான் . |
பணித்தட்டார் | பொற்கொல்லர் . |
பணித்தல் | தாழ்த்துதல் ; குறைத்தல் ; மிதித்தல் ; அருளிச் செய்தல் ; ஆணையிடுதல் ; ஏவுதல் ; கொடுத்தல் . |
பணித்தலைவன் | பாம்பரசனாகிய ஆதிசேடன் . |
பணிதம் | பந்தயப் பொருள் . |
பணிதல் | தாழ்தல் ; பெருமிதமின்றி அடங்குதல் ; இறங்குதல் ; பரத்தல் ; தாழ்ச்சியாதல் ; வணங்குதல் ; குறைதல் ; எளிமையாதல் ; உண்ணுதல் . |
பணிதி | வேலை ; அணிகலன் ; அலங்கரிப்பு ; துதிக்கத்தக்கது ; செல்வச்செருக்கு ; சொல் . |
பணிநர் | ஏவல் செய்வோர் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 712 | 713 | 714 | 715 | 716 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பண்புச்சொல் முதல் - பணிநர் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சொல், பொருள், வேலை, தொழில், பணம், செல்வச்செருக்கு, அணிகலன், பண்புருபு, காண்க, அல்லது, நாகரத்தினம், பண்புத்தொகை, பந்தயப், தொழிலில், பணித்தல், பணிக்காரன், தொழிற்சாலை, நேர்மை, ஏவல், பாம்பின், பாம்பு, பணதரம், பணமுடை, பணத்தட்டு, வேலைப்பாடு, செயல், இடையில், மறைந்து, வருவது, விலை