தமிழ் - தமிழ் அகரமுதலி - பத்திபாய்தல் முதல் - பதசம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| பத்திபாய்தல் | ஒளிவீசுதல் ; எதிரொளித்தல் . |
| பத்திமார்க்கம் | காண்க : பத்திநெறி . |
| பத்திமாலை | இடுப்புவரை தொங்குவதும் மணமக்கள் அணிவதுமான மாலை ; தாழ்வடம் . |
| பத்திமான் | பத்திமிக்கோன் . |
| பத்திமுகம் | பந்தல் அல்லது சுவரின் முன்பக்க நெற்றி . |
| பத்திமை | தெய்வபத்தியுடைமை ; காதல் . |
| பத்தியம் | மருந்துக்குத் தக்கவாறு உண்ணப்படும் உணவு ; இதம் ; கவனம் ; படிப்பணம் ; இலஞ்சம் ; காண்க : கடுக்காய் ; அவுரி ; பூவாது காய்க்கும் மரம் ; செய்யுள் . |
| பத்தியமுறித்தல் | மருந்துப் பத்தியத்தைக் கெடுத்தல் ; குறித்த காலத்திற்கப்பால் பத்தியவுணவை நீக்குதல் . |
| பத்தியிறக்குதல் | தாழ்வாரம் இறக்குதல் . |
| பத்தியுலாவுதல் | கடவுள் ஊர்தியில் எழுந்தருளி உலாவருதல் ; வரிசையாயுலாவுதல் . |
| பத்திரகம் | இலை ; இறகு ; சந்தனம் . |
| பத்திரகாளி | கொற்றவை . |
| பத்திரப்படுத்துதல் | காத்தல் ; காவலில் வைத்துப் பாதுகாத்தல் . |
| பத்திரப்பதிவு | ஆவணத்தை அரசாங்கப் பதிவு செய்கை . |
| பத்திரம் | இலை ; புத்தகத்தின் ஏடு ; இலை போன்ற தகடு ; ஓர் அணிகலன் ; சாசனம் ; திருமுகம் ; பூவிதழ் ; இறகு ; அம்பு ; சிறுவாள் ; அழகு ; அழகிய உருவம் ; கவனம் ; நன்மை ; பாதுகாப்பு ; நலம் ; யானைவகை ; மலை ; பீடத்திலுள்ள எழுதகவகை ; காண்க : பத்திரலிங்கம் ; குதிரைப்பந்தி ; நவ வருடத்துளொன்று ; காண்க : பத்திராச(த)னம் . |
| பத்திரலிங்கம் | சைவாலயத்துப் பலிபீடம் . |
| பத்திரன் | சிவன் ; வீரபத்திரன் ; காண்க : பாணபத்திரன் . |
| பத்திராகாரன் | அழகிய வடிவினன் . |
| பத்திராங்கம் | செஞ்சந்தனம் ; ஊமத்தை . |
| பத்திராசனம் | அரியணை ; அவைத்தலைமை ; ஆசனவகை . |
| பத்திராதனம் | அரியணை ; அவைத்தலைமை ; ஆசனவகை . |
| பத்திராதியர் | இதழ்நடத்துந் தலைவர் . |
| பத்திராலாபனம் | நலங்கூறுகை . |
| பத்திரி | அம்பு ; பறவை ; சாதிபத்திரி ; இலை ; காளி ; கொத்தளம் ; காட்டுச்சாதி . |
| பத்திரிகை | செய்தித்தாள் ; கடிதம் ; அச்சடித்ததாள் ; சாதனம் ; விளம்பரத்துண்டு ; இலை . |
| பத்திரை | இரண்டு , ஏழு , பன்னிரண்டாந்திதிகள் ; காலவகை ; நற்பசு ; காளி ; கண்ணன் தேவியருள் ஒருத்தி . |
| பத்திரைகேள்வன் | வீரபத்திரன் . |
| பத்திவிசுவாசம் | திடமான நம்பிக்கை . |
| பத்திவைராக்கியம் | தெய்வபத்தியில் திடமாயிருத்தல் . |
| பத்தினி | கற்புடையாள் ; மனைவி . |
| பத்தினிக்கடவுள் | கடவுளாகக் கருதப்பட்ட கண்ணகி . |
| பத்தினிக்கல் | இறந்த கற்புடையாட்டியின் பொருட்டு நாட்டப்படுங் கல் . |
| பத்தினிப்பிள்ளை | உரிமைப்பிள்ளை . |
| பத்து | ஓர் எண் ; தசமிதிதி ; காண்க : பற்று ; வயல் ; கடவுள் , பெரியோர் முதலியோரிடத்து உள்ள பத்தி ; நாலாயிரப் பிரபந்தத்தில் பத்துப் பதிகம் கூடிய பகுதி ; சீட்டுக்கட்டில் பத்துக் குறியுள்ள சீட்டினம் . |
| பத்துக்காடு | வயல்நிலம் ; திட்டமான புன்செய்த் தீர்வை . |
| பத்துக்காலோன் | பத்துக்கால்களுடைய நண்டு . |
| பத்தும்பத்தாத | முழுமையாக . |
| பத்துமாற்றுத்தங்கம் | பத்தரைமாற்றுத்தங்கம் , உயர்ந்த தங்கம் . |
| பத்தூரம் | பொன்னாங்காணிப்பூடு . |
| பத்தை | சிறு துண்டு ; மண்ணோடுகூடிய பசும்புல் துண்டு ; குயவன் அறுக்குங் கருவி . |
| பத்தைகட்டுதல் | ஒடிந்த எலும்பு கூடுவதற்கு மட்டை வைத்துக் கட்டுதல் ; பொய் மொழிகளால் பாசாங்கு செய்து குற்றத்தை மறைக்க முயலுதல் . |
| பதக்கணம் | வலம்வருகை . |
| பதக்கம் | சரடு முதலியவற்றில் கோக்கப்பட்டுத் தொங்கும் கழுத்தணிவகை . |
| பதக்கிரமம் | நடன நடைமுறை . |
| பதக்கு | இரண்டு மரக்கால் கொண்டது , இரண்டு குறுணி . |
| பதக்குப்பதக்கெனல் | அச்சக்குறிப்பு . |
| பதகம் | பறவை ; பாதகம் ; ஊர்த்தொகுதி . |
| பதகளித்தல் | பதறுதல் . |
| பதகன் | கொடும்பாவி ; கீழ்மகன் . |
| பதகி | கொடும்பாவி ; கீழ்மகள் . |
| பதங்கம் | பறவை ; விட்டில்பூச்சி ; பாதரசம் ; மருந்துச் சரக்குவகை ; சப்பங்கிமரம் . |
| பதங்கமம் | பறவை ; விட்டிற்பூச்சி . |
| பதங்கன் | சூரியன் . |
| பதங்கு | குழி ; ஓட்டுவரிசை ; பிளந்த பனையின் பாதி . |
| பதச்சாயை | மக்களின் நிழல் . |
| பதச்சேதம் | சீர் ; சொற்றொடரைத் தனித்தனி சொல்லாகப் பிரித்தல் . |
| பதசம் | பறவை ; சந்திரன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 714 | 715 | 716 | 717 | 718 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்திபாய்தல் முதல் - பதசம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பறவை, இரண்டு, கொடும்பாவி, ஆசனவகை, துண்டு, காளி, அவைத்தலைமை, வீரபத்திரன், கடவுள், கவனம், இறகு, அம்பு, பத்திரலிங்கம், அழகிய, அரியணை

