முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » பண்டாரி முதல் - பண்புகொள்பெயர் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - பண்டாரி முதல் - பண்புகொள்பெயர் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
பண்டாரி | கருவூலக் காப்பாளன் ; நிதி காப்பாளன் ; உடையார்சாதிப் பட்டப்பெயர் ; மரக்கலப் பண்டங் காப்போன் ; காவல் அதிகாரியின் ஏவலாள் ; சைவத்துறவி . |
பண்டி | வண்டி ; வயிறு ; உடல் ; யானை ; உரோகிணிநாள் . |
பண்டிகை | திருநாள் , பெருநாள் , ஒருவகைச் சிற்பவேலை . |
பண்டிதம் | கல்வித்திறம் ; மருத்துவம் . |
பண்டிதவாய் | கடுக்காய் . |
பண்டிதன் | புலவன் ; மருத்துவன் ; சுக்கிரன் ; புதன் ; நாவிதன் ; வரிக்கூத்துவகை ; ஓர் அலுவலன் . |
பண்டிதை | மிகக் கறறவள் . |
பண்டியுளிரும்பு | வண்டியின் இரும்பச்சு . |
பண்டிலன் | தூதன் . |
பண்டு | பழைமை ; முற்காலம் ; நிதி . |
பண்டுகம் | காண்க : ஓமம் ; செவ்வகத்திமரம் . |
பண்டை | பழைமை ; முற்காலம் ; கல்வி ; அறிவு . |
பண்டைக்காலம் | முன்னாள் . |
பண்டைநாள் | முன்னாள் . |
பண்டைப்பயில்வு | முற்பிறப்பின் பழக்கம் . |
பண்டையர் | முன்னோர் . |
பண்டையூழி | கிருதயுகம் . |
பண்டைவினை | முன்வினை . |
பண்ணத்தி | உரையும் பாட்டுமாகச் செய்யப்படும் ஒரு நூல்வகை . |
பண்ணப்பணைத்தல் | கப்புங்கிளையும்விட்டுச் செழித்தல் . |
பண்ணமைத்தல் | சித்தஞ்செய்தல் . |
பண்ணமைமுழவு | வீரமுழவுவகை . |
பண்ணல் | யாழ்நரம்புகளைப் பண்ணுக்கேற்றவாறு அமைத்தல் . |
பண்ணவன் | கடவுள் ; தேவன் ; அருகன் ; முனிவன் ; குரு ; திண்ணியன் ; பாணன் . |
பண்ணவி | தேவி . |
பண்ணறை | இசையறிவற்றவன் ; அடைவுகேடு . |
பண்ணாளத்தி | இராக ஆலாபனம் . |
பண்ணானவன் | நன்னெறியாளன் . |
பண்ணிகாரம் | பலபண்டம் ; பணியாரம் . |
பண்ணியம் | இசைக்கருவி ; விற்கப்படும் பொருள் ; பண்டம் ; பலகாரம் . |
பண்ணியவிலைஞர் | பண்டவாணிகர் . |
பண்ணியவீதி | கடைத்தெரு . |
பண்ணியற்றிறம் | ஆறு சுரமுள்ள இசை . |
பண்ணியாங்கனை | பரத்தை . |
பண்ணியாரம் | காண்க : பணிகாரம் . |
பண்ணுதல் | செய்தல் ; அணியமாதல் ; ஆயத்தஞ்செய்தல் ; இசைக்கருவியில் வாசித்தல் ; சருதியமைத்தல் ; அலங்கரித்தல் ; சமைத்தல் . |
பண்ணுமை | இசைத்தன்மை . |
பண்ணுரை | புனைந்துரை . |
பண்ணுவன் | குதிரைப்பாகன் ; யானைப்பாகன் . |
பண்ணுறுத்தல் | நுகத்தில் பூட்டுதல் ; வாகனாதிகளைச் சித்தஞ்செய்தல் ; அலங்கரித்தல் . |
பண்ணுறுதல் | ஆயத்தமாதல் , அணியமாதல் . |
பண்ணை | மருதநிலம் ; வயல் ; தோட்டம் ; நீர்நிலை ; ஓடை ; சொந்த வேளாண்மை ; வாரக்குடி ; பனந்தோப்புக் குடிசை ; மக்கட்கூட்டம் ; மகளிர்கூட்டம் ; தொகுதி ; பெருங்குடும்பம் ; மிகுதி ; மகளிர் விளையாட்டு ; விலங்கு துயிலிடம் ; ஒரு கீரைவகை ; தடவை ; இசை . |
பண்ணைக்காரன் | உழவன் ; பண்ணையாள் ; பெருநிலக்கிழான் ; ஊர் உதவிமணியக்காரன் . |
பண்ணைக்கீரை | ஒரு கீரைவகை . |
பண்ணைநிலம் | சொந்தமாகப் பயிரிடும் நிலம் . |
பண்ணைபாய்தல் | புனலிற் பாய்ந்து விளையாடுதல் . |
பண்ணைபார்த்தல் | பயிரிடும் நிலங்களைக் கண்காணித்தல் ; பெருங்குடும்பத்தை நிருவகித்தல் ; பண்ணையில் ஊழியம் செய்தல் . |
பண்ணையரிவாள் | கதிரறுக்கும் அரிவாள் . |
பண்ணையாடுதல் | விளையாடுதல் . |
பண்ணையார் | பெருநிலக்கிழார் . |
பண்ணையாள் | வயலில் வேலைசெய்பவன் . |
பண்ணைவீடு | பெருநிலக்கிழாரின் வீடு ; மடைப்பள்ளி ; பண்டசாலை . |
பண்ணைவைத்தல் | தானே பயிர்செய்ய ஆள் முதலியன அமர்த்தல் ; உணவு சமைத்தல் ; தோணியைச் சித்தஞ்செய்தல் ; கோழிப் பண்ணை முதலியன வைத்தல் . |
பண்பட்டவன் | கல்வியறிவும் அனுபவமும் உள்ளவன் . |
பண்படுத்துதல் | சீர்திருத்துதல் ; நிலம் முதலியவற்றைச் செம்மைபடுத்துதல் . |
பண்படுதல் | சீர்திருந்துதல் ; உதவுதல் ; அமைதல் ; நிலம் முதலியன செப்பமாதல் . |
பண்பாகுபெயர் | பண்புப்பெயர் பண்பிக்கு ஆகிவருவது . |
பண்பாளன் | நற்குணமுடையவன் . |
பண்பி | பண்பையுடைய பொருள் . |
பண்பு | வண்ணம் , வடிவு , அளவு , சுவை என்னும் நாற்குணம் ; இயல்பு ; மனத்தன்மை ; பிறர் இயல்பை அறிந்து நடக்கும் நற்குணம் ; விதம் ; பண்புப்பெயர் ; அழகு ; முறை ; செய்கை . |
பண்புகாட்டுதல் | இயற்கைக் குணத்தை வெளிப்படுத்துதல் . |
பண்புகொள்பெயர் | பண்புச்சொல் தழுவிய பெயர் ; பண்படியாகப் பிறந்த பெயர்ச்சொல் ; பண்பியைக் குறிக்கும் பெயர் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 711 | 712 | 713 | 714 | 715 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பண்டாரி முதல் - பண்புகொள்பெயர் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சித்தஞ்செய்தல், முதலியன, நிலம், பண்ணையாள், கீரைவகை, பண்ணை, பயிரிடும், பெயர், விளையாடுதல், சமைத்தல், பண்புப்பெயர், அலங்கரித்தல், முற்காலம், பழைமை, நிதி, காண்க, முன்னாள், அணியமாதல், செய்தல், பொருள், காப்பாளன்