முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » நோன்புயர்தல் முதல் - பக்கவாயு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - நோன்புயர்தல் முதல் - பக்கவாயு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நோன்புயர்தல் | காண்க : நோன்புதுறத்தல் . |
| நோன்மை | பொறுமை ; வலிமை ; பெருந்தன்மை ; தவம் . |
| நோன்றல் | பொறுத்தல் ; தள்ளல் ; நிலைநிறுத்தல் ; துறத்தல் ; தவஞ்செய்தல் . |
| நோனாமை | தவஞ்செய்யாமை ; ஆற்றாமை ; அழுக்காறு . |
| நோனாவட்டம் | காண்க : நோணாவட்டம் . |
| நோனார் | ஆற்றாதார் ; பகைவர் ; தவமில்லார் . |
| நௌ | ஓர் உயிர்மெய்யெழுத்து (ந்+ஔ) ; மரக்கலம் . |
| நௌகரிமானியம் | ஊழியத்திற்காக விடப்படும் மானியம் . |
| நௌவி | மான் . |
| ப | ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்+அ) ; இருபதில் ஒரு பாகத்தைக் காட்டுமொரு கீழ்வாயிலக்கக் குறி ; பஞ்சமம் எனப்படும் இளியிசையின் எழுத்து . |
| பஃதி | பகுப்பு ; வேறுபாடு ; திறை ; வருவாய் ; தாளிகையின் வரிசை எண் . |
| பஃது | பத்து . |
| பஃபத்து | நூறு . |
| பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா | பல தாழிசைகளோடு மற்றையுறுப்புகளையும் பெற்றுவரும் கொச்சகக் கலிப்பாவகை . |
| பஃறி | ஓடம் ; மரக்கலம் ; இரேவதிநாள் . |
| பஃறியர் | நெய்தல்நில மக்கள் . |
| பஃறொடை | நான்கடியின் மிக்குவரும் வெண்பா . |
| பஃறொடைவெண்பா | நான்கடியின் மிக்குவரும் வெண்பா . |
| பக்கக்கால் | உத்திரத்தின்மேல் வைக்கப்படும் பக்கக் குத்துக்கால் ; பக்கத்துணை . |
| பக்ககன் | கூட்டாளி . |
| பக்கச்சுவர் | கட்டடத்தின் இரண்டு பக்கங்களிலும் எழுப்பப்படுஞ் சுவர் . |
| பக்கச்சொல் | பக்கத்திலிருப்பவர்கள் சொல்லும் சொல் ; துணைச்சொல் ; தகுதிபற்றியும் வழக்குப்பற்றியும் வழங்கும் சொற்கள் . |
| பக்கச்சொல்லாளி | துணைநின்று பேசுவோன் . |
| பக்கசூலை | சூலைநோய் ; துன்பம் . |
| பக்கஞ்செய்தல் | ஒளிவிடுதல் . |
| பக்கடுத்தல் | நொறுங்குதல் . |
| பக்கணம் | ஊர் ; வேடர்வீதி ; அயல்நாட்டுப்பண்டம் விற்கும் இடம் ; சிற்றுண்டி ; தின்பண்டம் . |
| பக்கத்தார் | அயலார் ; நாட்டவர் ; அடுத்தவர் ; கட்சிக்காரர் . |
| பக்கத்துணை | பக்க உதவி . |
| பக்கத்துமீட்சி | யாண்டுத் தீயில்லை ஆண்டுப் புகையுமில்லை என்பதுபோல் துணிபொருள் ஏதுவின் மறுதலையுரை . |
| பக்கதன்மம் | துணிபொருட்கு இடனாயுள்ள பக்கத்தின் தன்மை . |
| பக்கப்பருத்தல் | மிகப் பருத்தல் . |
| பக்கப்பாட்டு | துணைப்பாட்டு . |
| பக்கப்பிளவை | முதுகந்தண்டருகில் விலாப்பக்கத்தில் வரும் பிளவைக்கட்டி . |
| பக்கப்போலி | தருக்கத்தில் பக்கத்தின் ஆபாசம் . |
| பக்கம் | அருகு ; இடம் ; பாரிசம் ; நாடு ; வீடு ; விலாப்புறம் ; வால் ; அரசுவா ; சிறகு ; அம்பிறகு ; நட்பு ; அன்பு ; சுற்றம் ; கொடிவழி , வமிசம் ; சேனை ; பதினைந்து திதிகொண்ட காலம் ; திதி ; கூறு ; நூலின் பக்கம் ; கோட்பாடு ; அவமானத்தின் உறுப்பினுள் மலை நெருப்பு உடைத்து என்றதுபோன்ற உறுதிசெய் வசனம் ; துணிபொருள் உள்ளவிடம் ; தன்மை ; கையணி ; ஒளி ; நரை ; உணவு . |
| பக்கம்படுதல் | ஒருசார்பு பற்றியிருத்தல் . |
| பக்கர் | இனத்தார் . |
| பக்கரசம் | தேன் . |
| பக்கரை | அங்கவடி ; சேணம் ; துணிப்பை . |
| பக்கல் | பக்கம் ; இனம் ; நாள் . |
| பக்கவழி | சுற்றுவழி ; குறுக்குவழி . |
| பக்கவாட்டு | பக்கங்களிற் சார்ந்துள்ளது ; நேர்சம்பந்தமற்றது . |
| பக்கவாத்தியம் | வாய்ப்பாட்டுக்குத் துணையான இசைக்கருவிகள் . |
| பக்கவாதம் | ஒருதலைப்பக்கமாகப் பேசுதல் ; கைகால்களை அசைவற்றதாகச் செய்யும் நோய் . |
| பக்கவாயு | கல்ல¦ரலின் நோய்வகை ; அண்டவாயு ; பக்கவாதம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 694 | 695 | 696 | 697 | 698 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நோன்புயர்தல் முதல் - பக்கவாயு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பக்கம், துணிபொருள், இடம், பக்கத்தின், தன்மை, பக்கவாதம், பக்கத்துணை, வெண்பா, உயிர்மெய்யெழுத்து, காண்க, மரக்கலம், நான்கடியின், மிக்குவரும், சொல்

