தமிழ் - தமிழ் அகரமுதலி - நெரியல் முதல் - நெல்லி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நெரியல் | மிளகு . |
| நெரியாசம் | ஒரு புகைக்கும் பொருள்வகை ; வேம்பு . |
| நெரியாசி | ஒரு புகைக்கும் பொருள்வகை ; வேம்பு . |
| நெரிவு | நசுக்குதல் ; சுடக்கு ; பகை . |
| நெருக்கடி | நெருக்கம் ; இக்கட்டு , துன்பம் . |
| நெருக்கம் | செறிவு ; வேலைச் சங்கடம் ; ஒடுக்கம் ; இடைவிடாமை ; அவசரம் ; பலவந்தம் ; துன்பம் ; கொடுமை ; நோய்க்கடுமை ; கையிறுக்கம் ; அண்மை ; இறக்குந்தறுவாய் . |
| நெருக்கிடை | காண்க : நெருக்கடி ; வறுமை . |
| நெருக்கிப்பார்த்தல் | வற்புறுத்துதல் ; முயற்சி யெடுத்தல் . |
| நெருக்கிப்பிடித்தல் | தொடர்ந்து பற்றுதல் ; மிகுதியாய் உண்ணுதல் ; செட்டால் மிச்சம் பிடித்தல் . |
| நெருக்கு | காண்க : நெருக்கம் . |
| நெருக்குண்ணுதல் | நெருக்குப்படுதல் . |
| நெருக்குதல் | ஆலை , செக்கு முதலியவற்றில் இட்டு ஆட்டுதல் சுருக்குதல் ; நசுக்குதல் ; வருத்துதல் ; அடர்ந்து தள்ளுதல் ; அமுக்குதல் ; பலவந்தம்பண்ணுதல் ; தாக்குதல் ; விடாப்பிடியாய் இருத்தல் ; உரத்தல் ; செறியச்செய்தல் ; வருத்திக்கேட்டல் . |
| நெருக்கெனல் | காண்க : நெரேலெனல் . |
| நெருங்கல் | கண்டிப்புச்சொல் ; செறிவு ; நெருங்குதல் . |
| நெருங்குதல் | கிட்டுதல் ; ஒடுக்கமாதல் ; செறிதல் ; கிட்டின உறவாதல் ; நசுங்குதல் ; இடித்துக்கூறுதல் ; மும்முரமாதல் ; கோபித்தல் ; தொடர்தல் ; அவசரமாதல் ; மீதூர்தல் . |
| நெருஞ்சி | ஒரு முட்பூண்டுவகை . |
| நெருஞ்சில் | ஒரு முட்பூண்டுவகை . |
| நெருட்டுக்கருத்து | கருகலான கருத்து ; கருகலான பொருள் . |
| நெருட்டுப்புத்தி | வஞ்சகமனம் ; கோணல் அறிவு . |
| நெருடன் | வஞ்சனம் ; கெட்டிக்காரி . |
| நெருடி | வஞ்சகி ; கெட்டிக்காரி . |
| நெருடு | நிமிண்டுகை ; இழைபொருத்துகை ; தடவுகை ; கருகல் ; சொற்சங்கடம் ; கரடு முரடானது ; ஆடையில் பிரிந்தெழும் நூல் முடிச்சு ; வஞ்சனை . |
| நெருடுதல் | நிமிண்டுதல் ; நிமிண்டி இழைபொருத்துதல் ; திரித்தல் ; தடவல் ; வஞ்சித்தல் . |
| நெருநல் | நேற்று . |
| நெருநலைநாள் | நேற்று . |
| நெருநற்று | நேற்று . |
| நெருநெருத்தல் | திடீரென ஒடிதல் ; திடீரென வயிறு முதலியன வலித்தல் . |
| நெருநெரெனல் | திடீரென வயிறு வலித்தற்குறிப்பு ; திடீரெனற்குறிப்பு ; நெரிதற்குறிப்பு . |
| நெருநை | காண்க : நெருநல் . |
| நெருப்பன் | கடுஞ்சினம் உடையவன் ; கலகக்காரன் ; பொல்லாதவன் . |
| நெருப்பு | அக்கினி ; இடி ; உடற்சூடு ; கோபம் முதலியவற்றின் கடுமை ; ஒழுக்கத்தில் ஒரு போதும் தவறாதவர் . |
| நெருப்புக்கண் | சிவனது நெற்றிக்கண் ; கண்ணேறு உள்ள கண் ; அனல்பொறி பறக்குங்கண் ; பொறாமைக் கண் . |
| நெருப்புக்கல் | தீத்தட்டிக் கல் காடிக்காரம் . |
| நெருப்புக்காடு | பெருநெருப்பு ; கடுவெயில் ; கடுஞ்சினம் . |
| நெருப்புக்கொள்ளி | தீக்கொள்ளி ; கலகக்காரன் ; தீயன் . |
| நெருப்புக்கொளுத்துதல் | தீமூட்டுதல் ; கடுவெயிலெறித்தல் ; கடுமையாதல் ; தீமைசெய்தல் ; கலகமூட்டுதல் ; தீக்கொளுத்துதல் . |
| நெருப்புக்கோழி | தணலை விழுங்கும் கோழிவகை ; நெருப்புப்போன்ற சிவந்த தொண்டையை உடைய வான்கோழி . |
| நெருப்புச்சட்டி | தீச்சட்டி . |
| நெருப்புச்சூடு | தீப்பட்ட புண் . |
| நெருப்புத்தணல் | கட்டைநெருப்பு . |
| நெருப்புத்தழல் | கட்டைநெருப்பு . |
| நெருப்புத்தள்ளி | நெருப்புத் தள்ளுகிற இரும்பாயுதம் . |
| நெருப்புத்திராவகம் | வெடியுப்புத் திராவகம் . |
| நெருப்புப்படுதல் | நெருப்பால் அழிதல் ; தெய்வதண்டனை முதலியவற்றால் அழிதல் ; கடுங்கோடையால் வருந்துதல் ; அநீதியால் துன்புறுதல் ; விலை முதலியன மிகுதியாதல் . |
| நெருப்புப்பிடித்தல் | தீப்பற்றி எரிதல் . |
| நெருப்புப்பொறி | தீப்பொறி . |
| நெருப்புமழை | ஊழிக்காலத்தில் பெய்யும் அக்கினி மழை . |
| நெருப்புமூட்டுதல் | தீப்பற்றவைத்தல் ; கலகம் மூட்டுதல் . |
| நெருப்புவிழுதல் | தீப்பொறி பறக்கை ; தணல் உண்டாகை ; கூரைமேல் தீத்திரள் விழுகை ; அநீதி முதலியவற்றால் அழிகை ; தன்னிலை அழிகை ; நெருப்பால் அழிகை . |
| நெருள் | மக்கட்கூட்டம் . |
| நெரேலெனல் | விரைவுக்குறிப்பு . |
| நெல் | பயிர்வகை ; நென்மணி ; உணவு ; எட்டு எள்ளளவுகொண்ட நீட்டவலவை ; காண்க : வாகை . |
| நெல்லரி | அரியப்பட்ட கைப்பிடியளவான நெற்கதிர் . |
| நெல்லி | ஒரு மரவகை ; திரிபலையில் ஒன்றான நெல்லிக்காய் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 686 | 687 | 688 | 689 | 690 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெரியல் முதல் - நெல்லி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நேற்று, நெருக்கம், திடீரென, அழிகை, கடுஞ்சினம், முதலியன, வயிறு, கலகக்காரன், கட்டைநெருப்பு, தீப்பொறி, முதலியவற்றால், அழிதல், நெருப்பால், அக்கினி, கெட்டிக்காரி, நெருக்கடி, துன்பம், நசுக்குதல், வேம்பு, பொருள்வகை, செறிவு, நெரேலெனல், புகைக்கும், கருகலான, முட்பூண்டுவகை, நெருங்குதல், நெருநல்

