முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » நெடுங்கணக்கு முதல் - நெடுவெண்பாட்டு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - நெடுங்கணக்கு முதல் - நெடுவெண்பாட்டு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நெடுங்கணக்கு | அகரச்சுவடி , அரிச்சுவடி , அகரம் முதலிய எழுத்துகளைக் கற்பிக்கும் சுவடி ; நெடுநாட்கணக்கு ; வாராக் கடன் . |
| நெடுங்கதை | பழங்கதை ; நீண்ட கதை . |
| நெடுங்கயிறு | நீளமான கயிறு ; நீண்ட வலை ; பெருந்தாமதம் . |
| நெடுங்கழுத்தல் | நீண்ட கழுத்துள்ள ஒட்டகம் ; கோவேறுகழுதை . |
| நெடுங்கழுத்தன் | நீண்ட கழுத்துள்ள ஒட்டகம் ; கோவேறுகழுதை . |
| நெடுங்காலம் | வெகுகாலம் , நீண்டகாலம் ; பலநாள் . |
| நெடுங்காலி | கால்நீண்ட பசு . |
| நெடுங்கிடை | காண்க : நெடுஞ்சாண்கிடை ; நீண்டகாலமாகப் படுத்துக்கிடத்தல் . |
| நெடுங்குரல் | விடாத பெருங்குரல் . |
| நெடுங்குரலன் | பெருங்குரலுடைய கழுதை . |
| நெடுங்கூவிளி | பெருமுழக்கம் . |
| நெடுங்கேடு | தீராத கேடு . |
| நெடுங்கை | நெடிய கையுடைய யானை . |
| நெடுங்கைநீட்டு | மிகத் தொலைவு . |
| நெடுங்கோடிச்சுவர் | நீளவாட்டுச் சுவர் . |
| நெடுங்கோணி | ஒட்டகம் . |
| நெடுஞ்சட்டை | நீண்ட அங்கி . |
| நெடுஞ்சாண் | தரையில் விழுந்து வணங்குதல் . |
| நெடுஞ்சாண்கிடை | தரையில் விழுந்து வணங்குதல் . |
| நெடுஞ்சீர்வண்ணம் | நெட்டெழுத்துப் பயின்று வருஞ் சந்தம் . |
| நெடுஞ்சொல் | புகழ் . |
| நெடுத்தல் | காலம் முதலியன நீளுதல் ; மழை முதலியன விடாது தொடர்தல் ; நெட்டையாதல் . |
| நெடுந்தகை | மேம்பாடுள்ளவன் . |
| நெடுந்தகைமை | மேம்பாடு . |
| நெடுந்துயில் | நீண்ட உறக்கம் ; இறப்பு . |
| நெடுந்துருத்தி | நீர்வீசும் கருவிவகை . |
| நெடுந்தூக்கு | தூக்கு ஏழனுள் எழுசீர் கொண்டது . |
| நெடுந்தூரம் | மிகத் தொலைவு . |
| நெடுந்தெய்வம் | பெருமைபெற்ற தெய்வம் . |
| நெடுந்தெரு | கடைவீதி ; பெருவீதி . |
| நெடுந்தொகை | நீண்ட பாடல்களின் தொகுப்பாகிய அகநானூறு . |
| நெடுந்தோட்டி | பெரிய அங்குசம் . |
| நெடுநாவை | கலப்பையின் நீண்ட கொழு . |
| நெடுநாள் | நெடுங்காலம் . |
| நெடுநிகழ்ச்சி | நெடுங்காலம் . |
| நெடுநீட்டு | மிக்க தொலைவு ; வெகுநீளம் . |
| நெடுநீர் | கடல் ; நீட்டித்துச் செய்யும் இயல்பு . |
| நெடுநெடெனல் | முறிதல் ஒலிக்குறிப்பு ; வளர்ச்சிக் குறிப்பு . |
| நெடுநேரம் | பெரும்பொழுது . |
| நெடுப்பம் | நீட்சி . |
| நெடுப்பிணை | வங்கமணல் . |
| நெடும்பகை | நீண்டகாலமா யுள்ள பகை ; பெரிய பகை ; தீராப் பகை . |
| நெடும்பயணம் | நீண்ட பயணம் ; இறப்பு . |
| நெடும்பழக்கம் | நீண்ட அனுபவம் ; நீடித்த நட்பு . |
| நெடும்பழி | பெரும்பழி ; அழியாப் பழி . |
| நெடும்பா | ஆடாதோடை என்னும் மருந்துச் செடி . |
| நெடும்பாடு | பெருங்குறைவு . |
| நெடும்பார்வை | நீண்ட தொலைவு பார்க்கும் ஆற்றல் . |
| நெடும்புகழ் | மிகுபுகழ் . |
| நெடும்புரிவிடுதல் | நாட்கடத்துதல் ; பொய் சொல்லுதல் . |
| நெடும்புனல் | ஆழமுள்ள நீர்நிலை . |
| நெடும்போக்கு | மீளும் நோக்கமில்லாத செலவு . |
| நெடுமன் | நீண்டது ; பாம்பு . |
| நெடுமாந்தடி | நீண்ட கழி ; பயனற்றவன் . |
| நெடுமால் | திருமால் . |
| நெடுமி | நெடியவள் ; நீண்ட மரம் ; மழை . |
| நெடுமிசை | உச்சி . |
| நெடுமிடல் | மிகுவலியோன் . |
| நெடுமுரல் | ஒரு மீன்வகை . |
| நெடுமூக்கு | துதிக்கை . |
| நெடுமூச்சு | பெருமூச்சு . |
| நெடுமூச்செறிதல் | மேல்மூச்சு வாங்குதல் . |
| நெடுமை | நீளம் , உயரம் , காலம் முதலியவற்றின் நீட்சி ; பெருமை ; அளவின்மை ; ஆழம் ; கொடுமை ; பெண்டிர் தலைமயிர் ; நெட்டெழுத்து . |
| நெடுமொழி | புகழ்ச்சொல் ; தன்மேம்பாட்டுரை ; வஞ்சினம் ; காண்க : நெடுமொழியலங்காரம் ; புராணக்கதை ; யாவருமறிந்த செய்தி . |
| நெடுமொழிகூறுதல் | புகழ்தல் . |
| நெடுமொழியலங்காரம் | போரில் வீரன் ஒருவன் தனக்கு நிகரில்லையென்று மேம்படுத்துரைக்கும் அணி . |
| நெடுவசி | போர்வீரனது புண்ணைத் தைத்தலால் உண்டாம் ஊசித்தழும்பு . |
| நெடுவரி | ஒழுங்கு . |
| நெடுவல் | நெடிய ஆள் . |
| நெடுவாசி | பெருத்த மாறுபாடு . |
| நெடுவிரல் | காண்க : ஆடாதோடை ; நாய்ப்பாகற்கொடி . |
| நெடுவீடு | வீடுபேறு . |
| நெடுவெண்பாட்டு | ஏழடிச் சிறுமையும் பன்னீரடிப் பெருமையுமுடைய வெண்பாவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 684 | 685 | 686 | 687 | 688 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெடுங்கணக்கு முதல் - நெடுவெண்பாட்டு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நீண்ட, தொலைவு, ஒட்டகம், காண்க, நெடுங்காலம், இறப்பு, முதலியன, பெரிய, ஆடாதோடை, நெடுமொழியலங்காரம், காலம், நீட்சி, தரையில், நெடுஞ்சாண்கிடை, கோவேறுகழுதை, நெடிய, மிகத், விழுந்து, கழுத்துள்ள, வணங்குதல்

