தமிழ் - தமிழ் அகரமுதலி - நெடுவெள்ளூசி முதல் - நெரிதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நெடுவெள்ளூசி | புண் தைக்கும் ஊசி ; நெட்டை என்னுங் கருவி . |
| நெண்டுதல் | எதிர்க்களித்தல் ; தோண்டுதல் ; நொண்டுதல் . |
| நெத்தப்பலகை | சூதாடுபலகை . |
| நெத்தம் | இரத்தம் . |
| நெத்தலி | காண்க : நெய்த்தோலி . |
| நெத்திலி | காண்க : நெய்த்தோலி . |
| நெதி | செல்வம் ; முத்து ; தியானம் . |
| நெதியம் | செல்வம் . |
| நெதியாளன் | குபேரன் . |
| நெப்பம் | மென்மை , மிருது , இலேசு . |
| நெம்பு | மேல்எழுப்புகை ; இருகூர் இணைப்பு அணி ; காண்க : ஓடாணி ; ஏணிப்பழு ; ஏற்றமடலாணி ; விலாவெலும்பு ; காண்க : நெம்புதடி . |
| நெம்புதடி | பொருளைக் கிளப்ப அதனடியில் செலுத்துங் கோல் . |
| நெம்புதல் | மேலே கிளப்புதல் ; உடைத்துத் திறத்தல் . |
| நெமிரல் | காண்க : நிமிரல் . |
| நெய் | வெண்ணெயை உருக்கி உண்டாக்கும் பொருள் : வெண்ணெய் ; எண்ணெய் ; புழுகுநெழ் ; தேன் ; இரத்தம் ; நிணம் ; நட்பு ; சித்திரைநாள் . |
| நெய்க்கடல் | எழுகடலுள் நெய்மயமாகியது . |
| நெய்க்கிழி | எண்ணெய் தோய்த்த சீலைத்துண்டு . |
| நெய்கொட்டான் | பூவந்திமரம் . |
| நெய்க்கொட்டை | பூவந்திமரம் . |
| நெய்ச்சட்டி | செங்கழுநீர்ப்பூ ; பவளக் குன்றி மணி ; கீரைவகை . |
| நெய்ச்சிட்டி | காட்டுச்சீரகம் ; பவளக் குன்றிமணி |
| நெய்த்தல் | பளபளத்தல் ; கொழுத்தல் ; பசப்புடையதாயிருத்தல் . |
| நெய்த்தோர் | இரத்தம் ஒதிமரம் . |
| நெய்த்தோலி | ஒரு பொடிமீன்வகை . |
| நெய்தல் | ஆடை முதலியவை நெய்தல் ; வெள்ளாம்பல் ; காண்க : கருங்குவளை ; செங்கழுநீர்க்கிழங்கு ; கடலும் கடல் சார்ந்த இடமும் ; இரங்கலாகிய உரிப்பொருள் ; சாப்பறை ; ஒருபேரெண் . |
| நெய்தல்பூண்டோன் | நெய்தல் மாலை அணிந்த ஐயனார் . |
| நெய்தல்யாழ் | நெய்தற் பெரும்பண்களுள் ஒன்று . |
| நெய்தல்யாழ்த்திறம் | நெய்தற்பண்வகை . |
| நெய்தள்கடவுள் | வருணன் . |
| நெய்தற்பறை | நெய்தல்நிலப் பறை , சாப்பறை . |
| நெய்தற்றிணை | நெய்தல்நிலம் . |
| நெய்தை | பெருமை . |
| நெய்நெட்டி | சம்பங்கோரைப்புல் . |
| நெய்ப்பந்தம் | நெய் ஊற்றி எரிக்கும் பந்தம் . |
| நெய்ப்பிலி | ஒரு மாணிக்கக் குற்றவகை . |
| நெய்ப்பீர்க்கு | பீர்க்குவகை . |
| நெய்ப்பு | நெய்ப்பதமுடைத்தாயிருக்கை ; பளபளப்பு ; கொழுப்பு ; சீழ் . |
| நெய்ம்மிதி | நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு . |
| நெய்ம்மிதிகவளம் | நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு . |
| நெய்முட்டை | நெய்யெடுக்குங் கரண்டி . |
| நெய்யணி | பிள்ளைப்பேற்றின்பின் தீட்டு நீங்குதற்குரிய முழுக்கு . |
| நெய்யரி | பன்னாடை . |
| நெய்யாடல் | திருநாள்களில் மங்கலமாக எண்ணெய் தேய்த்து முழுகுதல் . |
| நெய்யாடுதல் | எண்ணெய் பூசி மங்கலநீராடல் ; நெய்பூசுதல் . |
| நெய்யுண்டை | நெய்கலந்த சோற்றுத்திரள் . |
| நெய்யுலை | உணவு சமைத்தற்காக நெய் காய்கின்ற உலை . |
| நெய்யேற்றுதல் | அறுகம்புல்லை நெய்யில் தோய்த்து மணமகள் தலையில் மகளிர் வாழ்த்தித் தடவுதல் . |
| நெய்வார் | நெசவுகாரர் . |
| நெய்வான்மீன் | சித்திரைநாள் . |
| நெய்விழா | காண்க : நெய்யாடல் . |
| நெய்விளக்கு | நெய்வார்த்து எரிக்கும் விளக்கு ; தெய்வ சன்னிதிக்குமுன் ஏற்றும் மாவிளக்கு . |
| நெய்வு | நெசவு . |
| நெய்வைத்தல் | மருந்துநெய் செய்தல் ; கொழுப்பேறுதல் . |
| நெரடு | படிக்கக் கடினமானது ; கரடு . |
| நெரடுதல் | காண்க : நெருடுதல் ; கடினமாதல் ; தட்டுப்படுதல் . |
| நெரி | நெரிவு ; சேலையின் கொய்சகம் ; புண் புறப்பாடு முதலியவற்றால் கைகால் சந்துகளில் உண்டாகும் புடைப்பு ; சுரசுரப்பு ; நோய்வகை . |
| நெரிசல் | நெரிந்தது ; நெருக்கமாயிருக்கும் நிலை ; மனவருத்தம் ; கண்ணோய்வகை ; பசலை . |
| நெரிஞ்சி | காண்க : நெருஞ்சி . |
| நெரிஞ்சில் | காண்க : நெருஞ்சி . |
| நெரித்தல் | நொறுக்குதல் ; நசுக்குதல் ; நிமிட்டல் ; துன்பம் முதலியவற்றால் மகளிர் கைவிரல்களை அழுத்திச் சேர்த்தல் ; கைவிரல்களைச் சுடக்குதல் ; நிலைகெடச்செய்தல் ; திறமையாய் நடத்துதல் ; நெருங்குதல் ; குவித்தல் . |
| நெரிதரல் | நொறுங்குதல் ; நிலைகெடுதல் ; நெருங்குதல் ; வளைதல் . |
| நெரிதல் | நொறுங்குதல் ; நிலைகெடுதல் ; நெருங்குதல் ; வளைதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 685 | 686 | 687 | 688 | 689 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெடுவெள்ளூசி முதல் - நெரிதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, எண்ணெய், இரத்தம், நெருங்குதல், நெய்தல், நெய், நெய்த்தோலி, உணவு, முதலியவற்றால், மகளிர், நெய்யாடல், நொறுங்குதல், வளைதல், நிலைகெடுதல், திரட்டப்பட்ட, நெருஞ்சி, சாப்பறை, சித்திரைநாள், நெம்புதடி, செல்வம், பூவந்திமரம், பவளக், நெய்கலந்து, எரிக்கும், புண், மிதித்துத்

