தமிழ் - தமிழ் அகரமுதலி - நு முதல் - நுணுக்கம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நு | ஒர் உயிர்மெய்யெழுத்து (ந் + உ) ; ஆயுதப் பொது ; தியானம் ; தோணி ; நிந்தை ; நேரம் ; புகழ் . |
| நுக்காங்குலை | காய்கள் விழுந்த பனங்குலைத் தண்டு . |
| நுக்கு | பொடித்துண்டு ; எட்டிமரம் . |
| நுக்குடம் | எட்டிமரம் . |
| நுக்குதல் | பொடியாக்கல் ; புடைத்தல் ; அழித்தல் ; மிகுதியாய்ப் பெய்தல் . |
| நுகக்கால் | நுகத்தடி ; காண்க : ஏர்க்கால் . |
| நுகக்காற்குச்சி | நுகத்து முளைக்குச்சி . |
| நுகத்தடி | காளையின் கழுத்தில் பூட்டப்படும் மரத்தடி . |
| நுகத்தாணி | காண்க : பகலாணி . |
| நுகத்துளை | நுகத்தடியின் இருமுனைகளிலும் உள்ள துளை . |
| நுகம் | எருதுகளின் கழுத்தில் பூட்டும் மரம் , நுகத்தடி ; காண்க : நுகத்தாணி ; பாரம் ; வலிமை ; சோதிநாள் ; மகநாள் ; கதவின் கணையமரம் . |
| நுகம்புரட்டி | கட்டுக்கமையாத எருது ; ஒழுங்கு தவறுகிறவன் . |
| நுகம்வைத்தல் | நல்ல நாளில் முதன்முறையாக எருதின் கழுத்தில் நுகத்தைப் பூட்டுதல் . |
| நுகர்ச்சி | அனுபவம் ; உண்ணுதல் ; காண்க : வேதனை . |
| நுகர்தல் | அருந்துதல் ; செய்தல் ; துய்த்தல் . |
| நுகர்வு | காண்க : நுகர்ச்சி . |
| நுகும்பு | பனை , வாழை முதலியவற்றின் மடல் விரியாத குருத்து ; பனையோலை . |
| நுகைத்தல் | இளகச்செய்தல் ; தளரச்செய்தல் . |
| நுகைதல் | தளர்தல் ; இளகுதல் . |
| நுகைவு | தளர்வு ; தளர்ந்தது ; மென்மை ; தணிவு ; பொருளுதவி ; மனக்கனிவு . |
| நுங்கள் | உங்கள் ; நீங்கள் . |
| நுங்கு | பனையிளங்காய்க்குள்ளிருக்கும் இளம் பருப்பு ; பனஞ்சுளை ; நுங்குக்காய் . |
| நுங்குக்குவளை | நுங்கு எடுத்துப் போட்ட பனங்காய் . |
| நுங்குதல் | விழுங்குதல் ; ஆரப்பருகுதல் ; கைக்கொள்ளுதல் ; கெடுதல் . |
| நுங்குப்பாக்கு | இளம்பாக்கு . |
| நுங்கை | உம் தங்கை ; உம் தாய் . |
| நுசுப்பு | இடை , மருங்குல் . |
| நுசை | சிவதைவேர் . |
| நுட்பக்காரன் | புத்திக்கூர்மையுள்ளவன் . |
| நுட்பம் | நுண்மை ; நுண்ணிய ஆராய்ச்சி தோன்ற எழுதப்பெற்ற உரை ; நுட்பம் ; பொருளின் நுட்பம் ; காலநுட்பம் ; கரந்துறை கோள்களுள் ஒன்று ;ஓரணி . |
| நுடக்கம் | அசைவு ; துவளுதல் ; தள்ளாட்டம் ; கூத்து ; வளைவு . |
| நுடக்கு | அசைவு . |
| நுடக்குதல் | கழுவுதல் ; துவட்டுதல் ; மாய்த்தல் ; கரைத்தல் ; மடக்குதல் . |
| நுடங்கு | அசைவு ; நுட்பம் . |
| நுடங்குதல் | அசைதல் ; துவளுதல் ; தள்ளாடுதல் ; ஆடுதல் ; வளைதல் ; நுட்பமாதல் ; அடங்குதல் ; ஈடுபடுதல் ; மெலிதல் . |
| நுண்டுகில் | பட்டாடைவகை . |
| நுண்டொடர் | காண்க : நேர்ஞ்சங்கிலி . |
| நுண்ணறிவு | நுண்ணிய புத்தி . |
| நுண்ணாக்கை | நுண்ணுடல் ; சூக்கும உடல் . |
| நுண்ணிச்சிறை | ஒரு சிறுகுருவிவகை . |
| நுண்ணிமை | காண்க : நுண்மை . |
| நுண்ணியான் | கூரிய அறிவுடையோன் ; அமைச்சன் . |
| நுண்ணுணர்வு | கூரிய அறிவு . |
| நுண்ணுருக்குதல் | கரையவுருக்குதல் . |
| நுண்ணேலம் | ஒரு மணப்பண்டவகை . |
| நுண்பொருள் | நுட்பமான கருத்து ; நுண்ணிய பொருள் . |
| நுண்மணல் | சிறுமணல் . |
| நுண்மை | கூர்மை ; நுட்பம் ; மிகுதி ; வேலைத் திறம் ; அறிவுநுட்பம் ; பொருள் நுட்பம் ; சிற்றுண்டி ; கமுக்கம் . |
| நுணக்கம் | கூர்மை ; வாட்டம் ; அசைதல் ; மெல்லியதாதல் . |
| நுணங்கியோர் | நுணுகிய அறிவுடையோர் . |
| நுணங்கு | நுண்மை ; நுடக்கம் ; தேமல் . |
| நுணங்குதல் | அசைதல் ; மெல்லிதாதல் ; நுட்பமாதல் ; வளைதல் ; துவளுதல் ; செறிதல் ; வாடுதல் . |
| நுணல் | தவளை ; கடல்மீன்வகை . |
| நுணலை | தவளை ; கடல்மீன்வகை . |
| நுணவம் | நுணாமரம் . |
| நுணவு | நுணாமரம் , ; தணக்கமரம் ; கட்டில் . |
| நுணவை | எள்ளுருண்டை ; அரிசி முதலியவற்றின் மா ; நுணாமரம் . |
| நுணா | நுணாமரம் ; மஞ்சள்நாறிமரம் ; தணக்கமரம் . |
| நுணாவுதல் | தடவித்தெரிதல் ; நாவால் தடவியுணர்தல் . |
| நுணி | நுனி . |
| நுணித்தல் | கூர்மையாக்குதல் ; பொடியாக்குதல் ; நுணுகி ஆராய்தல் . |
| நுணிதல் | தேய்தல் . |
| நுணுக்கம் | நண்மை ; கூர்மை ; கூரறிவு ; வேலைத்திறம் ; பொருளடக்கம் ; யாழின் உள்ளோசை ; காலநுட்பம் ; இவறல் ; பொன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 678 | 679 | 680 | 681 | 682 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நு முதல் - நுணுக்கம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, நுட்பம், நுணாமரம், நுண்மை, கூர்மை, அசைவு, துவளுதல், அசைதல், நுகத்தடி, நுண்ணிய, கழுத்தில், கூரிய, கடல்மீன்வகை, தவளை, நுட்பமாதல், பொருள், தணக்கமரம், நுடக்கம், நுகர்ச்சி, நுகத்தாணி, முதலியவற்றின், நுங்கு, எட்டிமரம், காலநுட்பம், வளைதல்

