தமிழ் - தமிழ் அகரமுதலி - நிர்வாசம் முதல் - நிரவுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| நிர்வாசம் | குடியற்றது . |
| நிர்வாணம் | சமண பௌத்தர்களின் முத்தி நிலை ; வீட்டின்பம் ; அம்மணம் . |
| நிர்வாணி | ஆடையில்லாதவன்(ள்) ; சிவன் ; அருகன் . |
| நிர்விக்கினம் | இடையூறின்மை . |
| நிர்விகற்பக்காட்சி | பொருளின் உண்மை மாத்திரம் உணரும் உணர்வு . |
| நிர்விகற்பம் | வேறுபாடின்மை ; ஐயமின்மை . |
| நிர்விகாரம் | வேறுபாடின்மை ; கடவுள் . |
| நிர்விகாரி | கடவுள் . |
| நிர்விசாரம் | கவலையின்மை ; துயரமின்மை . |
| நிர்விவாதம் | விவாதமற்றது . |
| நிரக்கம் | சுட்டறிவின்மை . |
| நிரக்கரகுக்கி | காண்க : நிரட்சரகுட்சி . |
| நிரக்கு | அகவிலை ; நேர்மை . |
| நிரகங்கிருதி | புறவிவகாரம் ; செருக்கின்மை . |
| நிரங்கிருதி | புறவிவகாரம் ; செருக்கின்மை . |
| நிரங்குசம் | கட்டுப்படாமை . |
| நிரங்குசன் | கட்டுப்படாதவன் . |
| நிரசம் | சத்தின்மை ; சுவையின்மை . |
| நிரசனம் | அழித்தல் ; தள்ளுதல் ; பட்டினி ; வாயாலெடுத்தல் ; கக்குதல் . |
| நிரஞ்சனம் | குற்றமில்லாதது ; வெளி ; நிறைவு ; வீடுபேறு ; இரசகற்பூரம் . |
| நிரஞ்சனன் | அழுக்கற்ற கடவுள் ; அருகன் ; சிவன் . |
| நிரஞ்சனி | பார்வதி . |
| நிரட்சம் | நிலக்கோடு ; பூமத்தியரேகை . |
| நிரட்சரகுட்சி | எழுத்தறிவற்றவன் . |
| நிரட்சரேகை | காண்க : நிரட்சம் . |
| நிரத்தல் | பரத்தல் ; நிரம்புதல் ; கலத்தல் ; சமாதானப்படுதல் ; ஒழுங்குசெய்தல் ; நெருங்குதல் ; போதியதாதல் ; சமபங்கிட்டு அளித்தல் . |
| நிரத்திமாலி | சிவபிரான் . |
| நிரத்தியயம் | குற்றமின்மை . |
| நிரத்துதல் | சமதளமாக்குதல் ; குண்டுகுழிகளைத் தூர்த்துச் சமனாக்குதல் . |
| நிரதம் | எப்பொழுதும் . |
| நிரதி | பற்று . |
| நிரதிகாரன் | ஒன்றற்குரிய அதிகாரமற்றவன் . |
| நிரதிசயம் | உயர்வற உயர்ந்த நிலைமை . |
| நிரதிசயவின்பம் | தன்னின் மேம்பட்ட இன்பமில்லாத வீட்டின்பம் . |
| நிரந்தம் | முடிவற்றது ; நெருக்கிடை ; குரங்கு . |
| நிரந்தரம் | இடைவிடாமை ; முடிவற்று எப்பொழுதும் இருக்கை ; நெருக்கம் ; அழிவு ; குரங்கு ; சராசரி . |
| நிரந்தரன் | எப்போதுமுள்ள கடவுள் ; சிவன் . |
| நிரந்தரி | காண்க : நிரஞ்சனி . |
| நிரந்தரித்தல் | எப்போதுமிருத்தல் ; பரவுதல் . |
| நிரப்பம் | முழுமை ; இறப்பு ; ஒப்புமை ; சமம் ; கற்பு . |
| நிரப்பிவிடுதல் | பூர்த்தியாக்குதல் ; சூலடையச் செய்தல் . |
| நிரப்பு | நிறைவு ; சமதளம் ; சமாதானம் ; வறுமை ; குறைவு ; சோர்வு ; நிறைகுடத்தைச் சூழப்போடும் நெல் ; மங்கலக்குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி . |
| நிரப்புதல் | நிறைத்தல் ; பரப்புதல் ; பூர்த்தி செய்தல் ; மனநிறைவாக்குதல் ; விடையளித்தல் . |
| நிரப்போர் | இரப்போர் ; வறியர் . |
| நிரபராதி | குற்றமற்றவன் . |
| நிரம்ப | நிறைய , மிகுதியாக . |
| நிரம்பரன் | ஆடையில்லாதவன் ; அருகன் ; சிவன் . |
| நிரம்பவழகியர் | பேரழகுள்ளவர் ; சிவன் ; ஒரு புலவர் . |
| நிரம்பாச்சொல் | மழலைச்சொல் . |
| நிரம்பாத்துயில் | அரைத்தூக்கம் . |
| நிரம்பாத்தூக்கம் | அரைத்தூக்கம் . |
| நிரம்பாநோக்கு | இடுக்கிப் பார்க்கும் பார்வை . |
| நிரம்பாமென்சொல் | மழலைச்சொல் . |
| நிரம்பாமொழி | மழலைச்சொல் . |
| நிரம்பிப்பாய்தல் | ததும்பி வழிதல் . |
| நிரம்பியபுட்பம் | வாழை . |
| நிரம்பியம் | வாழை . |
| நிரம்பினபெண் | பருவமடைந்த பெண் . |
| நிரம்புதல் | நிறைதல் ; மிகுதல் ; முடிவுறுதல் ; பருவமடைதல் ; முதிர்தல் . |
| நிரயப்பாலர் | நரகத்திலுள்ள தலைவர் . |
| நிரயபாலர் | நரகத்திலுள்ள தலைவர் . |
| நிரயம் | காண்க : நிரையம் . |
| நிரர்த்தகம் | பயனற்றது . |
| நிரர்த்தம் | பயனற்றது . |
| நிரல் | வரிசை ; ஒப்பு . |
| நிரலுதல் | ஒழுங்குபடுதல் . |
| நிரவகாசவிதி | குறித்த இடந்தவிர வேறு இடத்திற்குச் செல்லக்கூடாத விதி . |
| நிரவகாலிகை | வெளி . |
| நிரவதி | எல்லையற்றது . |
| நிரவதிகம் | எல்லையற்றது . |
| நிரவம் | ஒலியின்மை . |
| நிரவயவம் | உறுப்பற்றது . |
| நிரவயன் | அழிவில்லாத கடவுள் . |
| நிரவலடித்தல் | உழுதநிலத்தைச் சமனாக்குதல் . |
| நிரவற்பயிர் | பெருமழையில் மண்ணால் மூடப்பபட்ட பயிர் . |
| நிரவுதல் | சமனாதல் ; தீர்தல் ; பரவுதல் ; வரிசையாயிருத்தல் ; சமனாக்குதல் ; குறைதீர்த்தல் ; சராசரி பார்த்தல் ; சரிப்படுத்துதல் ; அழித்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 664 | 665 | 666 | 667 | 668 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிர்வாசம் முதல் - நிரவுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கடவுள், சிவன், காண்க, மழலைச்சொல், அருகன், சமனாக்குதல், நெல், செய்தல், சராசரி, பரவுதல், நரகத்திலுள்ள, பயனற்றது, எல்லையற்றது, தலைவர், குரங்கு, வாழை, அரைத்தூக்கம், நிரட்சம், புறவிவகாரம், செருக்கின்மை, நிரட்சரகுட்சி, வேறுபாடின்மை, ஆடையில்லாதவன், அழித்தல், வெளி, நிரம்புதல், வீட்டின்பம், நிரஞ்சனி, நிறைவு, எப்பொழுதும்

