தமிழ் - தமிழ் அகரமுதலி - அகதேசி முதல் - அகமம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அகப்பாடு | உள்நிகழ்ச்சி ; நெருங்கியிருக்கை . |
| அகப்பு | ஆழம் ; தாழ்வுப்பகுதி ; படுகுழி . |
| அகப்புறக்கைக்கிளை | காமம் நிரம்பாத இளமையோளை ஒருவன் அடுத்து அவளுடைய குறிப்பறியாது மேலும் மேலும் பேசுவது . |
| அகப்புறச்சமயம் | சைவசித்தாந்தத்திற்குப் புறம்பான மதங்கள் ; அவை : பாசுபதம் , மாவிரதம் , காபாலம் , வாமம் , வைரவம் , ஐக்கியவாத சைவம் . |
| அகப்புறத்தலைவன் | கைக்கிளை , பெருந்திணை ஒழுக்கங்களுக்குரிய தலைவன் . |
| அகப்புறத்திணை | காண்க : அகத்திணைப்புறம் . |
| அகப்புறமுழவு | மத்திமமான வாத்தியம் ; எழுவகை முழவுகளுள் ஒன்று . அது தண்ணுமை , தக்கை , தகுணிச்சம் முதலாகப் பலவகைப் படும் . |
| அகப்பூ | உள்ளத்தாமரை ; மனமகிழ்ச்சி . |
| அகப்பூசை | உள்ளத்தால் நினைந்து வழிபடுகை . |
| அகப்பை | குழிந்த கரண்டி , சட்டுவம் . |
| அகப்பைக்கணை | அகப்பையின் காம்பு , அகப்பைப் பிடி . |
| அகப்பைக்குறி | அகப்பையளவு ; நெல்லுக் குவியலின் மேலிடும் சாணிப்பால் குறி . |
| அகப்பைக்கூடு | அகப்பைகளைச் செருகிவைக்கும் சட்டம் . |
| அகப்பொருட்கோவை | அகப்பொருள் துறைகளைத் தொடர்புபடுத்திக் கூறும் கோவை நூல் . |
| அகப்பொருள் | உட்பொருள் ; சிற்றின்பம் ; அகவொழுக்கமாகிய பொருள் ; வீட்டில் உள்ள பொருள் . |
| அகம் | இருப்பிடம் ; பூமி ; மனை ; வீடு ; உள் ; மனம் ; அகப்பொருள் ; ' நான் ' என்னும் அகங்காரம் ; பாவம் ; அகம்பாவம் ; மார்பு ; ஏழாம் வேற்றுமையுருபு . |
| அகம்படி | உள்ளிடம் ; மனம் ; அகத்தொண்டு ; ஒருவகைச் சாதி ; அடிவயிறு . |
| அகம்படித்தொண்டு | அணுக்கத் தொண்டு . |
| அகம்படிமை | அணுக்கத் தொண்டு . |
| அகம்படியர் | உள்வேலைக்காரர் ; ஊழியம் செய்வோர் ; ஒருவகைச் சாதியார் . |
| அகம்பன் | அசைவற்றவன் . |
| அகம்பாடு | ' நான் ' என்னும் எண்ணம் ; உள்ளச்செருக்கு ; உள்ள நினைவு . |
| அகம்பாவம் | ' நான் ' என்னும் எண்ணம் ; உள்ளச்செருக்கு ; உள்ள நினைவு . |
| அகம்பிரமம் | ' நானே பிரமம் ' எனக் கூறல் . |
| அகம்பு | உள் . |
| அகம்மியம் | ஒரு பேரெண் ; பத்துலட்சங்கோடி ; கோடாகோடி ; அணுகக்கூடாதது ; அறியக் கூடாதது . |
| அகம்மியை | இழிகுலப்பெண் ; பொதுமகள் . |
| அகமகிழ்ச்சி | உள்ளக்களிப்பு ; மனமகிழ்ச்சி . |
| அகமடல் | அகவிதழ் ; பாளை . |
| அகமணை | வண்டியின் உட்பலகை ; படகின் உட்கட்டை . |
| அகமணைத்தட்டு | வண்டியின் உட்பலகை ; படகின் உட்கட்டை . |
| அகமதி | காண்க : அகந்தை . |
| அகமம் | மரம் ; மலை . |
| அகதேசி | உளளூரிலுள்ளவன் ; உள்நாட்டுப் பிச்சைவாங்கி . |
| அகந்தை | காண்க : அகங்காரம் . |
| அகநகர் | கோட்டைக்குள் அடங்கிய நகரப்பகுதி ; அந்தப்புரம் . |
| அகநகை | உட்சிரிப்பு ; இகழ்ச்சிச் சிரிப்பு . |
| அகநாடக உரு | அகக்கூத்திற்குரிய இசைப் பாட்டு வகை ; அவை : கந்தம் முதல் பிரபந்தம் ஈறாக இருபத்தெட்டு . |
| அகநாடு | உள்நாடு ; மருதம் . |
| அகநாழிகை | கருவறை ; உண்ணாழிகை . |
| அகநிலை | உட்பட்டநிலை ; உள்ள நிலை ; உள்நகர் ; ஊர் ; நால்வகைத் தலைமைப் பண்களுள் ஒன்று . |
| அகப்பகை | உட்பகை . |
| அகப்பட்டி | சிறுதீங்கு செய்வோன் ; காவலின்றித் திரிவோன் . |
| அகப்படுதல் | உட்படுதல் ; பிடிக்கப்படுதல் ; சிக்கிக்கொள்ளுதல் ; கிட்டுதல் . |
| அகப்படை | அணுக்கப்படை , மூலப்படை . |
| அகப்பணி | மனச்சிந்தனை ; வீட்டுவேலை . |
| அகப்பத்தியம் | மனவடக்கம் ; இணைவிழைச்சு இல்லாமை . |
| அகப்பரம் | வீட்டைச் சார்ந்த மேடை ; திண்ணை , வேதிகை . |
| அகப்பரிசாரம் | வீட்டுவேலைக்காரர் ; அரண்மனைப் பணியாளர் . |
| அகப்பரிவாரம் | வீட்டுவேலைக்காரர் ; அரண்மனைப் பணியாளர் . |
| அகப்பற்று | ' நான் ' என்னும் உளப்பற்று மன விருப்பு . |
| அகப்பா | கோட்டை உள்மதில் ; மதிலுள் மேடை ; அகழி ; அகத்திணைப் பாட்டு . |
| அகப்பாட்டண்மையன் | மனமொத்த நண்பன் ; பிடிபடுந்தொலைவில் உள்ளவன் . |
| அகப்பாட்டு | அகப்பொருள் பற்றிய பாட்டு ; அகநானூறு என்னும் நூல் . |
| அகப்பாட்டுவண்ணம் | இறுதியடி முற்றுப் பெறாது இடையடி போன்று வரும் சந்தம் . |
| அகப்பாட்டுறுப்பு | அகப்பொருட் பாடல்களுக் குரிய பன்னிரண்டு உறுப்புகள் ; அவை : திணை , கைகோள் , கூற்று , கேட்போர் , இடம் , காலம் , பயன் , முன்னம் , மெய்ப்பாடு , எச்சம் , பொருள்வகை , துறை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகதேசி முதல் - அகமம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், என்னும், உள்ள, நான், அகப்பொருள், பாட்டு, காண்க, படகின், உட்பலகை, வண்டியின், நினைவு, உட்கட்டை, அகந்தை, அரண்மனைப், உள்ளச்செருக்கு, பணியாளர், வீட்டுவேலைக்காரர், மேடை, அணுக்கத், பொருள், நூல், மனமகிழ்ச்சி, ஒன்று, மனம், அகங்காரம், தொண்டு, மேலும், ஒருவகைச், அகம்பாவம், எண்ணம்

