தமிழ் - தமிழ் அகரமுதலி - தீபி முதல் - தீர்க்கம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தீபி | புலி . |
| தீபிகை | விளக்கு . |
| தீபு | கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி . |
| தீம் | இனிமை ; இனிய ; அமுது . |
| தீம்பண்டம் | இனிய தின்பண்டம் . |
| தீம்பன் | கீழ்மகன் . |
| தீம்பி | தீயவள் . |
| தீம்பு | தீது ; தாழ்வு ; கேடு ; குறும்பு . |
| தீம்புகை | நறும்புகை . |
| தீம்புழல் | இனிய பணியாரம் ; இலுப்பைப் பூ . |
| தீம்புளி | கருப்புக்கட்டி கூட்டிப் பொரித்த புளி . |
| தீம்பூ | ஒரு மரவகை ; மணப்பொருள்களுள் ஒன்று . |
| தீமகம் | பகைவரைக் கொல்வதற்காகச் செய்யும் வேள்வியாகிய ஆபிசாரயாகம் . |
| தீமடுத்தல் | நெருப்பு மூட்டுதல் ; நெருப்பிலிடுதல் . |
| தீமிதி | வேண்டுதல் நிமித்தம் நெருப்புக்குழியில் இறங்கி நடத்தல் . |
| தீமிதித்திருவிழா | திரௌபதையம்மன் கோயிலில் அடியார்கள் வேண்டுதல்பொருட்டு நெருப்புக்குழியில் நடக்கும் திருவிழா . |
| தீமுகம் | நெருப்பெரியுமிடம் , உலைவாய் . |
| தீமுறை | நெருப்பில் செய்யும் ஓமச்சடங்கு . |
| தீமூட்டு | தீ மூட்டுவதற்குரிய பொருள் . |
| தீமூட்டுதல் | நெருப்புப் பற்றவைத்தல் ; கலக மூட்டுதல் . |
| தீமேனியான் | தீப்போலும் உடல் நிறமுடைய சிவபெருமான் . |
| தீமை | கொடுமை ; குற்றம் ; பாவச்செயல் ; குறும்பு ; இறப்பு ; முதலியன . |
| தீமொழி | பொல்லாச்சொல் ; சாபம் . |
| தீய்த்தல் | பயிர் முதலியன கருகச்செய்தல் ; காந்தவைத்தல் ; காயச்செய்தல் ; சுடுதல் . |
| தீய்தல் | எரிந்துபோதல் ; பயிர் முதலியன கருகுதல் ; சோறு ; முதலியன காந்துதல் ; சீற்றம் கொள்ளுதல் ; அழிதல் . |
| தீய்வு | பயிர் முதலியன பட்டுப்போகை ; பயிர் கரிந்துபோகை . |
| தீய்வுகரிவு | பயிர் முதலியன பட்டுப்போகை ; பயிர் கரிந்துபோகை . |
| தீய | தீமையான ; போலியான . |
| தீயகம் | நெருப்புள்ள இடமான நரகம் . |
| தீயது | இனியது ; தீங்குள்ளது ; சைவ உணவு . |
| தீயபுட்பம் | காண்க : தீப்புட்பம் . |
| தீயம் | இனிப்பு . |
| தீயர் | கீழ்மக்கள் ; கொடியோர் ; வேடர் ; மலையாளச் சாதியாருள் ஒரு வகையர் . |
| தீயல் | சமையலில் கருகினது ; பொரிக்கறி ; குழம்புவகை . |
| தீயவை | தீய செயல் ; துன்பம் ; கீழ்மக்கள் கூட்டம் . |
| தீயழல் | தீக்கொழுந்து . |
| தீயளி | பசுங்காய் . |
| தீயறம் | பொல்லாங்கு . |
| தீயாக்கீரை | பொன்னாங்காணிக் கீரை . |
| தீயாடி | ஈமத்தீயில் ஆடுபவனான சிவபெருமான் . |
| தீயார் | கொடியோர் ; கீழ்மக்கள் ; வேடர் . |
| தீயினம் | தீயோர் கூட்டம் . |
| தீயுண்புள் | காண்க : தீக்கோழி . |
| தீயெச்சம் | அவிக்கப்படாத நெருப்பின் மிச்சம் . |
| தீயொழுக்கம் | கெட்ட நடத்தை . |
| தீயோம்புதல் | ஓமத்தீ வளர்த்தல் . |
| தீயோர் | காண்க : தீயார் . |
| தீர்க்கக்கிரீபம் | நீள்கழுத்துடைய ஒட்டகம் . |
| தீர்க்கக்கிரீவம் | நீள்கழுத்துடைய ஒட்டகம் . |
| தீர்க்ககணம் | வெண்சீரகம் . |
| தீர்கக்கதி | ஒட்டகம் . |
| தீர்க்ககந்தை | வெருகங்கிழங்கு . |
| தீர்க்ககாண்டம் | கோரைப்புல் . |
| தீர்க்கசங்கம் | ஒடட்டகம் ; நாரை . |
| தீர்க்கசத்திரம் | பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடைபெறும் வேள்வி . |
| தீர்க்கசதுரம் | கோணங்கள் ஒத்ததும் பக்கங்கள் ஒவ்வாததுமான நாற்கோட்டு உருவம் . |
| தீர்க்கசந்தி | எழுத்து விகாரமுற்றுப் புணரும் வடமொழிப் புணர்ச்சியுள் ஒன்று . |
| தீர்க்கசாலம் | ஆச்சாமரம் . |
| தீர்க்கசிகுவம் | பாம்பு . |
| தீர்க்கசீவம் | நீண்ட ஆயுள் . |
| தீர்க்கசுமங்கலி | சுமங்கலியாய் நெடுங்காலம் வாழ்பவள் ; தேவரடியாள் . |
| தீர்க்கசுரம் | நெடில் ; நீண்டகாலம் இருக்கும் காய்ச்சல் . |
| தீர்க்கசுவாதம் | பெருமூச்சு . |
| தீர்க்கதண்டம் | தரையில் படிந்து வணங்குகை ; ஆமணக்கு . |
| தீர்க்கதண்டன் | தரையில் கவிழ்ந்து வணங்கும் வணக்கமுறை . |
| தீர்க்கதரிசனம் | மேல் வருவதை அறியும் அறிவு . |
| தீர்க்கதரிசி | முக்கால நீகழ்ச்சியை உணர்பவன் . |
| தீர்க்கதரு | பனைமரம் . |
| தீர்க்கதாரு | நிலப்பனை . |
| தீர்க்கநாதம் | சங்கு . |
| தீர்க்கநித்திரை | நெடுந்தூக்கம் ; இறப்பு . |
| தீர்க்கபர்ணி | நீண்ட இலையுள்ள வாழை . |
| தீர்க்கபாதபம் | தென்னை . |
| தீர்க்கபாதவம் | தென்னை . |
| தீர்க்கம் | நீட்சி ; நெட்டுயிரெழுத்து ; முழுமை ; உறுதி ; அறிவுத் தெளிவும் கவர்ச்சியுமுள்ள தோற்றம் ; பெருமித்த தோற்றம் ; துணிகரச் செயல் ; தெளிவு ; சன்மலக்கினத்துக்கு 6 , 7 ஆம் இராசிகள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 586 | 587 | 588 | 589 | 590 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தீபி முதல் - தீர்க்கம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், முதலியன, பயிர், காண்க, இனிய, ஒட்டகம், கீழ்மக்கள், குறும்பு, நீள்கழுத்துடைய, தீயோர், தீயார், மேல், நீண்ட, தோற்றம், தென்னை, தரையில், கூட்டம், செயல், பட்டுப்போகை, மூட்டுதல், நெருப்புக்குழியில், இறப்பு, கரிந்துபோகை, செய்யும், வேடர், கொடியோர், ஒன்று, சிவபெருமான்

