முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » திருட்டாந்தவாபாசம் முதல் - திருநீற்றுக்கோயில் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - திருட்டாந்தவாபாசம் முதல் - திருநீற்றுக்கோயில் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
திருட்டாந்தவாபாசம் | உதாரணப்போலி . |
திருட்டாபோகம் | இம்மையில் நுகரும் இன்பம் . |
திருட்டி | கண் ; பார்வை ; நோக்கம் ; தீக்கண் ; கண்ணெச்சில் . |
திருட்டித்தல் | கண்ணுக்குப் புலனாதல் ; தோற்றுவித்தல் . |
திருட்டிபந்து | மின்மினிப்பூச்சி . |
திருட்டிபோகம் | கண்ணுக்கினிய காட்சி . |
திருட்டியம் | ஞானம் , அறிவு . |
திருட்டு | களவு ; வஞ்சகம் . |
திருட்டுத்தனம் | கள்ளக்குணம் ; தந்திரம் ; அயோக்கியத்தனம் . |
திருட்டுவழி | கள்ளப்பாதை ; திட்டிவாசல் . |
திருட்டுவாசல் | இரகசிய வழி . |
திருடக்காண்டம் | மூங்கில் . |
திருடக்கிரந்தி | மூங்கில் . |
திருடதை | உறுதி ; பலம் ; மிகுதி . |
திருடபலம் | கொட்டைப்பாக்குவகை . |
திருடம் | வலிமை ; இரும்பு . |
திருடமூலம் | தேங்காய் . |
திருடன் | கள்வன் ; தந்திரக்காரன் ; காண்க : விட்டுணுக்கரந்தை . |
திருடி | திருடுபவள் ; கள்ளிச்செடி . |
திருடு | களவு . |
திருடுதல் | களவாடுதல் . |
திருணகம் | வாளுறை . |
திருணசிங்கம் | கோடரி . |
திருணதை | வில் . |
திருணபதி | புல்லின் அரசனான பனை . |
திருணபூலி | புல்லாலாகிய பாய் , கோரைப்பாய் . |
திருணம் | உலர்ந்த புல் ; உடைவாள் ; வில் ; தேள் ; தேனீ . |
திருணராசன் | காண்க : திருணபதி . |
திருணோற்பவம் | காட்டுப்பயிர் . |
திருத்தம் | ஒழுங்கு ; திட்டம் ; பிழைத்திருத்துகை ; செப்பனிடுதல் ; முன்னுள்ளதைச் சிறிது மாற்றுகை ; உச்சரிப்புத் தெளிவு ; புண்ணியநீர் . |
திருத்தல் | திருத்தம் ; வயல் . |
திருத்தன் | தூய்மையானவன் ; கடவுள் . |
திருத்தி | மனநிறைவு . |
திருத்து | பண்படுத்தபட்ட நிலம் ; நன்செய் நிலம் ; ஒப்பனை . |
திருத்துதல் | செவ்விதாக்குதல் ; சீர்படுத்துதல் ; மேன்மைப்படுத்துதல் ; செம்மையாகச் செய்தல் ; நிலம் முதலியவற்றைப் பண்படுத்தல் ; இலை , காய் முதலியன நறுக்குதல் ; செம்மைபெற அணிதல் ; உறவாக்குதல் ; மெருகிடுதல் ; மேற்பார்த்தல் ; அழைத்தல் . |
திருத்துழாய் | காண்க : துளசி . |
திருத்தொண்டர் | இறைவனடியார் . |
திருத்தொண்டு | கடவுளடியார்க்குச் செய்யும் பணிவிடை . |
திருத்தோப்பு | கோயிலுக்குரிய நந்தவனம் . |
திருதம் | தரிக்கை ; தாளவகை . |
திருதி | உறுதி ; துணை ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; திராவகம் ; சத்து ; விரைவு . |
திருதிமை | மனத்திட்பம் . |
திருதியை | தேய்பிறை வளர்பிறைகளில் வரும் மூன்றாம் திதி . |
திருந்தகைமை | மேன்மை . |
திருந்தலர் | பகைவர் . |
திருந்தார் | பகைவர் . |
திருந்தினர் | ஒழுக்கமுள்ளவர் . |
திருந்துதல் | சீர்ப்படுதல் ; செவ்விதாதல் ; பண்படுத்தப்படுதல் ; தொழில் முற்றுதல் ; அழகுபடுதல் ; மேன்மையாதல் ; பயிற்சி மிகுதல் . |
திருநகர் | செல்வநகரம் . |
திருநட்சத்திரம் | பெரியோர் பிறந்த நட்சத்திரம் ; பெரியோர் மறைந்த நட்சத்திரம் ; வயது . |
திருநடனம் | இறைவன் திருக்கூத்து . |
திருநடைமாளிகை | கோயிற்பிராகாரம் . |
திருநந்தவனம் | கோயில் நந்தவனம் . |
திருநந்தாவிளக்கு | சுவாமி திருமுன் எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கிற விளக்கு . |
திருநல்லியாண்டு | நல்ல வளமையான ஆட்சி ஆண்டு . |
திருநாடலங்கரித்தல் | வைகுண்டத்தை அலங்கரிக்கும் நற்கதியடைதல் . |
திருநாடு | வைகுண்டம் . |
திருநாமக்கத்திரி | ஒரு பாம்புவகை . |
திருநாமச்செடி | ஒரு செடிவகை . |
திருநாமத்துக்காணி | தேவதான நிலம் . |
திருநாமத்துத்தி | ஒரு பூடுவகை . |
திருநாமப்பாட்டு | இயற்றியவரின் பெயர் , பயன் முதலியவை கூறும் பதிகவிறுதிப் பாட்டு . |
திருநாமப்பாலை | ஒரு பூடுவகை . |
திருநாமம் | தெய்வம் அல்லது பெரியோரின் பெயர் ; வைணவர் தரிக்கும் ஊர்த்துவ புண்டரம் ; மதிப்புவாய்ந்த மக்கள் . |
திருநாள் | விழாநாள் ; பிறந்தநாள் . |
திருநாளைப்போவார்நாயனார் | தில்லையைக் காண நாளைப் போவேன் என்றவராகிய நந்தனார் . |
திருநிலைமகளிர் | சுமங்கலிகள் . |
திருநீலக்கண்டன் | கரிய கழுத்தையுடையவனான சிவன் ; ஒரு பூரான்வகை ; தீயன் . |
திருநீற்றுக்காப்பு | பெரியோரால் ஒருவருக்குக் காப்பாக இடப்படும் திருநீறு ; திருநீறு . |
திருநீற்றுக்கோயில் | திருநீற்றுப் பை . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 576 | 577 | 578 | 579 | 580 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருட்டாந்தவாபாசம் முதல் - திருநீற்றுக்கோயில் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நிலம், காண்க, நட்சத்திரம், பெரியோர், பூடுவகை, பெயர், திருநீறு, பகைவர், களவு, வில், உறுதி, திருணபதி, திருத்தம், மூங்கில், நந்தவனம்