முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » திரிபுரி முதல் - திருக்கண்மலர் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - திரிபுரி முதல் - திருக்கண்மலர் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| திரிபுரி | சாறாடை ; சாறணைப்பூண்டு . |
| திரிபுரை | காண்க : திரிபுரசுந்தரி ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| திரிபுவனசக்கரவர்த்தி | சோழர் பட்டப்பெயர் . |
| திரிபுவனம் | காண்க : திரிலோகம் ; சோழநாட்டில் உள்ள ஒரு சிவதலம் . |
| திரிபோது | காண்க : திரிகாலம் . |
| திரிமஞ்சள் | மஞ்சள் , கத்தூரிமஞ்சள் , மரமஞ்சள் என்னும் மூவகை மஞ்சள் . |
| திரிமணி | பௌத்தர் வணங்கும் புத்தன் , புத்த தருமம் , புத்த சங்கம் என்னும் மூன்று பொருள்கள் . |
| திரிமணை | புரிமணை ; வட்டவளையமாய் வைக்கோல் , நார் முதலியவற்றால் பாத்திரங்கள் வைப்பதற்குப் பயன்படுத்தும் பீடம் . |
| திரிமரம் | திரிகை ; தானியம் முதலியவற்றை மாவாக்கப் பயன்படும் கருவி . |
| திரிமலம் | மும்மலமாகிய ஆணவம் , மாயை , கன்மம் . |
| திரிமார்க்கம் | முச்சந்தி . |
| திரிமுண்டம் | காண்க : திரிபுண்டரம் . |
| திரிமூர்த்தி | மும்மூர்த்திகளாகிய பிரமன் , திருமால் , உருத்திரன் . |
| திரிமூலம் | மூவகை வேர்களாகிய கண்டுமூலம் , சித்திரமூலம் , திப்பிலிமூலம் . |
| திரிய | திரும்ப . |
| திரியக்கி | மூன்று கண்ணுடைய தேங்காய் . |
| திரியக்கு | குறுக்கானது ; விலங்கு . |
| திரியக்கோடல் | ஒன்றை மற்றொன்றாக மாறுபடக் கருதுதல் . |
| திரியட்சி | காண்க : திரியக்கி . |
| திரியம்பகம் | சிவனுடைய வில் . |
| திரியம்பகன் | மூன்று கண்களையுடைய சிவன் , அருகன் , திருமால் , விநாயகன் , வீரபத்திரன் என்போர் . |
| திரியம்பகி | திரியம்பகன் மனைவியாகிய சத்தி . |
| திரியல் | திரிதல் . |
| திரியவும் | திரும்பவும் . |
| திரியாமை | இரவு ; யமுனையாறு ; நீலக்கல் . |
| திரியிடுதல் | காது வளர்க்கத் துணித்திரி இட்டு வைத்தல் . |
| திரியேகக்கடவுள் | பிதா சுதன் ஆவிகளாகிய முத்திறக் கடவுள் . |
| திரியேகத்துவம் | கடவுளின் முத்திறத் தன்மை . |
| திரியேகம் | கடவுளின் முத்திறத் தன்மை . |
| திரியேற்றுதல் | புண் முதலியவற்றில் காரச்சீலையிடுதல் . |
| திரிராத்திரி | காண்க : திரிமஞ்சள் . |
| திரிரேகம் | சங்கு . |
| திரில் | குயவன் சக்கரம் . |
| திரிலவங்கம் | சிறுநாகப்பூ , செண்பகப்பூ , கிராம்பு என்னும் மூவகை மணச்சரக்கு . |
| திரிலிங்கம் | ஸ்திரீலிங்கம் என்னும் பெண்பால் ; அபிநயக்கை வகைகளுள் ஒன்று ; காண்க : தான்றி . |
| திரிலோகம் | திரிபுவனம் ; பூமி , பாதலம் , துறக்கம் என்னும் உலகங்கள் ; பொன் , வெள்ளி , செம்பு என்னும் மூன்று உலோகங்கள் . |
| திரிலோகாதிபதி | திரிலோகத்தின் அதிபதியாகிய இந்திரன் . |
| திரிலோகேசன் | சூரியன் . |
| திரிலோசனன் | முக்கண்ணனாகிய சிவன் . |
| திரிலோசனி | முக்கண்ணுடைய துர்க்கை . |
| திரிவட்டம் | நூல் சுற்றுங் கருவிவகை . |
| திரிவிக்கிரமன் | மூன்றடியால் உலகம் அளந்த திருமால் ; சூரியன் . |
| திரிவிதசேதனர் | பத்தர் , முத்தர் , நித்தியர் என்ற மூவகை ஆன்மாக்கள் . |
| திரிவு | காண்க : திரிபுகாட்சி ; வேறுபாடு ; தவறுகை ; கேடு ; இயக்கம் ; சரியில்லாததால் திருப்பித்தரப்பட்டது . |
| திரிவுக்காட்சி | ஒரு பொருளைப் பிறிதொன்றாகக் காணும் காட்சி . |
| திரிவேணி | மூவாறு கூடுமிடம் ; அலகாபாத் என வழங்கும் பிரயாகையில் கங்கை , யமுனை , அந்தர்வாகினியான சரசுவதி என்னும் மூன்று ஆறுகள் கூடுமிடம் . |
| திரிவேணிசங்கமம் | மூவாறு கூடுமிடம் ; அலகாபாத் என வழங்கும் பிரயாகையில் கங்கை , யமுனை , அந்தர்வாகினியான சரசுவதி என்னும் மூன்று ஆறுகள் கூடுமிடம் . |
| திரீ | பெண் , ஸ்திரீ . |
| திரீலிங்கம் | காண்க : திரிலிங்கம் . |
| திரு | திருமகள் ; செல்வம் ; சிறப்பு ; அழகு ; பொலிவு ; நல்வினை ; தெய்வத்தன்மை ; பாக்கியம் ; மாங்கலியம் ; பழங்காலத் தலையணிவகை ; சோதிடங் கூறுவோன் ; மகளிர் கொங்கைமேல் தோன்றும் வீற்றுத்தெய்வம் . |
| திருக்கடைக்காப்பு | தேவாரம் முதலிய பதிகங்களின் பலன் கூறும் இறுதிச் செய்யுள் . |
| திருக்கண் | அருட்பார்வை ; திருவிழாவில் சுவாமி புறப்பாட்டில் சுவாமி எழுந்தருளும் மண்டகப்படி . |
| திருக்கண்சாத்துதல் | அருளுடன் பார்த்தல் ; மண்டகப்படிக்கு எழுந்தருளப்பண்ணுதல் ; பார்வையிடுதல் . |
| திருக்கண்ணமுது | திருக்கன்னலமுது , பாயசம் . |
| திருக்கண்ணாமடை | அரிசி சருக்கரை வாழைப் பழங்களால் ஆக்கப்பட்ட ஓர் இனிய உணவு வகை . |
| திருக்கண்மலர் | தெய்வத் திருமேனியின் கண்களில் சாத்தும் மலர்போன்ற கண் உரு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 574 | 575 | 576 | 577 | 578 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரிபுரி முதல் - திருக்கண்மலர் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, என்னும், மூன்று, மூவகை, கூடுமிடம், திருமால், பிரயாகையில், அலகாபாத், மூவாறு, வழங்கும், கங்கை, ஆறுகள், சுவாமி, சரசுவதி, அந்தர்வாகினியான, யமுனை, சூரியன், கடவுளின், திரிமஞ்சள், மஞ்சள், திரிலோகம், திரிபுவனம், ஒன்று, புத்த, திரியக்கி, தன்மை, முத்திறத், சிவன், திரியம்பகன், திரிலிங்கம்

