முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » திருக்கம் முதல் - திருட்டாந்தம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - திருக்கம் முதல் - திருட்டாந்தம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| திருக்கம் | வஞ்சகம் . |
| திருக்கலசமுடித்தல் | குடமுழுக்காட்டல் . |
| திருக்கலியாணம் | கோயிலில் தெய்வங்களுக்குச் செய்விக்கப்படும் திருமணவிழா . |
| திருக்கற்றளி | கருங்கல்லால் கட்டப்பெற்ற கோயில் . |
| திருக்காட்சி | தெய்வத்தியானம் . |
| திருக்காப்பிடுதல் | கோயிற்கதவு மூடுதல் . |
| திருக்காப்பு | தெய்வக்காவல் ; திருமுறைகளைக் கயிற்றால் கட்டிவைத்தல் ; அந்தியில் குழந்தைகளுக்குச் செய்யும் இரட்டைச் சடங்கு . |
| திருக்காப்புச்சாத்துதல் | காண்க : திருக்காப்பிடுதல் . |
| திருக்கார்த்திகை | விளக்கீட்டுத் திருவிழா ; கார்த்திகை நட்சத்திரத்தில் விளக்கேற்றிவைத்துக் கொண்டாடும் திருவிழா . |
| திருக்கிடுதல் | நீள முறுக்கிடுதல் . |
| திருக்கு | முறுக்கு ; மாறுபாடு ; அணித்திருகு ; துகில்வகை ; சங்கடம் ; வஞ்சகம் ; கண் ; காண்பவன் . |
| திருக்குதல் | முறுக்குதல் ; முறுக்கிப் பறித்தல் ; வளைத்தல் . |
| திருக்குறிப்பு | திருவுள்ளக் கருத்து . |
| திருக்கூட்டம் | தொண்டர்குழாம் . |
| திருக்கூத்து | கடவுளின் திருவிளையாட்டு ; சிவபெருமான் திருநடனம் . |
| திருக்கை | கடல்மீன்வகை . |
| திருக்கைக்கோட்டி | திருமுறைகள் ஓதுதற்குரிய கோயில் மண்டபம் ; கோயிலில் திருமுறைப் பாசுரம் ஓதுவோர் . |
| திருக்கைச்சிறப்பு | ஏனாதிப்பட்டத்திற்கு அறிகுறியாய் அளிக்கும் மோதிரம் . |
| திருக்கோலம் | கடவுளுக்குச் செய்யும் அலங்காரம் ; நின்ற திருக்கோலம் , இருந்த திருக்கோலம் , கிடந்த திருக்கோலம் என மூவகையாய்த் திருமால் கோயில் கொண்டிருக்கும் திருமேனி நிலை . |
| திருக்கோவை | சுவாமிக்கு முன்நின்று வேதம் , பிரபந்தம் முதலியன ஓதும் கூட்டம் . |
| திருகணி | காண்க : திருகாணி ; சங்கின் சுழி . |
| திருகணை | புரிமனை . |
| திருகம் | காட்டுச்சாதிக்காய்மரம் ; துளை . |
| திருகல் | முறுக்கு ; மாறுபடுதல் ; மாணிக்கக் குற்றவகை ; இடர்ப்பாடுள்ள சொற்றொடர் . |
| திருகல்முறுகல் | கோணல் ; மனவேறுபாடு ; இடர்பாடுள்ள சொற்றொடர் . |
| திருகாணி | அணியின் திருகுமரை ; பெண்கள் காதிலும் மூக்கிலும் அணியும் திருகோடுகூடிய அணிவகை . |
| திருகு | முறுக்கு ; கோணல் ; மாறுபாடு ; ஏமாற்றும் பேச்சு ; குற்றம் ; அணியின் திருகுமரை ; சுரி . |
| திருகுகம்மல் | மகளிர் அணியும் திருகோடுகூடிய காதணிவகை . |
| திருகுகள்ளி | கள்ளிவகை ; கொம்புக்கள்ளி . |
| திருகுகொம்பன் | வளைந்த கொம்புடைய விலங்குவகை . |
| திருகுதல் | முறுக்குதல் ; மாறுபடுதல் ; பின்னுதல் ; பறித்தல் . |
| திருகுதாழை | காண்க : வாதமடக்கி . |
| திருகுதாளம் | புரட்டு . |
| திருகுப்பூ | செவந்தி வடிவான மகளிர் தலையணி வகை . |
| திருகுபலை | வலம்புரிக்காய் . |
| திருகுமணை | தேங்காய் துருவும் மணை . |
| திருகுமரை | திருகு முதலியவற்றின் சுரிந்த வரை ; திருகாணி ; திருகாணியின் தலை . |
| திருகுமூலம் | முடக்கொற்றான் . |
| திருகுவட்டம் | நூல் சுற்றும் கருவி . |
| திருகுவில்லை | காண்க : திருகுப்பூ . |
| திருகுளி | உளிவகை ; திருப்புளி ; காண்க : திருகூசி . |
| திருகூசி | துளையிடும் கருவிவகை ; கிணற்றுத்துலாவின் குறுக்கே இடும் அச்சுக்கட்டை . |
| திருச்சபை | சிதம்பரத்தில் நடராசர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் ; கிறித்துவர் கூடித்தொழும் இடம் . |
| திருச்சியம் | காணப்படுகிற பொருள் . |
| திருச்சிற்றம்பலம் | சிதம்பரத்திலுள்ள சிற்சபை ; சைவர்கள் வழங்கும் வணக்கச்சொல் ; ஓர் ஊர் . |
| திருச்சின்னம் | தெய்வம் , அரசன் முதலாயினோர் முன் ஒலிக்கும் ஊதுகுழலுள்ள விருதுவகை . |
| திருச்சீரைலைவாய் | காண்க : திருச்செந்தூர் . |
| திருச்சுற்றாலயம் | கோயிலின் பிராகாரத்திலுள்ள பரிவார தேவதைகளின் கோயில் . |
| திருச்சுற்றாலை | காண்க : திருச்சுற்றாலயம் ; திருச்சுற்றுமாளிகை . |
| திருச்சுற்று | கோயிற்பிராகாரம் . |
| திருச்சுற்றுமாளிகை | கோயிலின் உட்பிராகாரத்தை ஒட்டியிருக்கும் மண்டபம் . |
| திருச்செந்தூர் | திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முருகக்கடவுள் ஆறுபடை வீடுகளில் ஒன்றுமான தலம் . |
| திருச்செவிசாத்துதல் | கேட்டருளுதல் . |
| திருசி | கண் . |
| திருசியம் | காணப்படும் பொருள் . |
| திருசை | காண்க : திருசி . |
| திருசோபம் | வெண்டாமரை . |
| திருட்டாந்தம் | எடுத்துக்காட்டு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 575 | 576 | 577 | 578 | 579 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கம் முதல் - திருட்டாந்தம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கோயில், திருக்கோலம், திருகுமரை, திருகாணி, முறுக்கு, திருகுப்பூ, திருகோடுகூடிய, திருகு, அணியும், மகளிர், திருச்செந்தூர், திருச்சுற்றுமாளிகை, திருசி, கோயிலின், திருச்சுற்றாலயம், பொருள், திருகூசி, சொற்றொடர், திருவிழா, மாறுபாடு, செய்யும், திருக்காப்பிடுதல், கோயிலில், முறுக்குதல், பறித்தல், கோணல், வஞ்சகம், மாறுபடுதல், மண்டபம், அணியின்

