முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » தாரகைமாலை முதல் - தாரைமழுங்கல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - தாரகைமாலை முதல் - தாரைமழுங்கல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தாரகைமாலை | அருந்ததி போன்ற கற்புடை மகளிர்க்குள்ள இயற்கைக் குணங்களைப் பாடும் இலக்கியவகை . |
| தாரண | அறுபதாண்டுக் கணக்கில் பதினெட்டாம் ஆண்டு . |
| தாரணநட்சத்திரம் | மூலம் , ஆயிலியம் , கேட்டை , திருவாதிரை என்னும் நாண்மீன்கள் . |
| தாரணம் | தரிக்கை ; உறுதிப்பாடு ; நிலைத்திருக்கை ; காண்க : தாரணநட்சத்திரம் ; ஓர்யோகம் . |
| தாரணி | பூமி ; மலை ; யமன் . |
| தாரணித்தல் | தரித்தல் ; தாங்குதல் . |
| தாரணை | தரித்தல் ; உறுதி ; நினைவில் வைத்தல் ; மனத்தை ஒன்றன்மீது சிந்தை வைத்திருத்தலாகிய அட்டாங்க யோகத்துள் ஒன்று ; ஒழுங்கு ; வீதம் ; நெல் முதலிய பண்டங்களின் விலை . |
| தாரதண்டுலம் | வெண்சோளம் . |
| தாரதம்மியம் | ஏற்றத்தாழ்வு . |
| தாரபரிக்கிரகம் | திருமணம் . |
| தாரம் | மனைவி ; திருமணநிலை ; அரிதாரம் ; அரும்பண்டம் ; வெள்ளி ; வெண்கலம் ; நா ; ஏழிசையுள் ஒன்று ; வீணைநரம்பில் ஒன்று ; விண்மீன் ; நீர் ; பார்வை ; முத்து ; பாதரசம் ; சாதிலிங்கம் ; எல்லை ; பச்சைப்பாம்பின் நஞ்சு ; எடுத்தலோசை ; நிடாதசுரம் ; பிரணவம் ; தரா என்னும் உலோகம் ; தெய்வலோக மரங்களுள் ஒன்றாகிய மந்தாரம் ; தேவதாரமரம் ; கயிறு ; மிதுனராசி ; சிற்றரத்தை ; நாரத்தை . |
| தாரவெழுத்து | ஏழாவது சுரமாகிய தாரத்தைக் குறிக்கும் 'ஔ' என்னும் எழுத்து . |
| தாரா | விண்மீன் ; நாரைவகை ; ஒரு வாத்துவகை ; வாத்துநடை ; நீர்தாரை ; ஒரு சமணதேவதை . |
| தாராகணம் | விண்மீன்கூட்டம் . |
| தாராகிருகம் | நீர்த்தாரையால் குளிர்ச்சி தருமாறு அமைத்த மாளிகை . |
| தாராங்கம் | வாள் . |
| தாராங்குரம் | ஆலங்கட்டி . |
| தாராசந்தானம் | நீர்த்தாரைபோல் நீங்காது வரும் தொடர்ச்சி . |
| தாராட்டு | தாலாட்டு . |
| தாராட்டுதல் | தாலாட்டுதல் . |
| தாராடம் | குதிரை ; மதயானை ; மேகம் ; சாதகப்புள் . |
| தாராதத்தம் | நீர்வார்த்துப் பெண்ணைக் கொடுத்தல் . |
| தாராதரம் | மேகம் . |
| தாராதாரம் | மேகம் . |
| தாராதீனன் | மனைவிக்கு அடங்கி நடப்போன் . |
| தாராபதம் | வானம் . |
| தாராபதி | உடுக்கள் தலைவனான சந்நிரன் ; தாரையின் கணவனான வியாழன் . |
| தாராபந்தி | நாண்மீன் வரிசை . |
| தாராபலம் | நாண்மீன் பலன் . |
| தாராமூக்கன் | பாம்புவகை . |
| தாராவணி | காற்று . |
| தாராளம் | உதாரகுணம் ; கொடைப்பண்பு ; மிகுதி ; விசாலம் ; ஊக்கம் ; சாதுரியம் ; வெளிப்படை . |
| தாரி | வழி ; முறைமை ; விலைவாசி ; அரிதாரம் ; வண்டு முதலியவற்றின் ஒலி ; தரிப்பவன் என்னும் பொருள்படும் விகுதிவகை . |
| தாரிகம் | தீர்வை . |
| தாரிசம் | ஒப்பந்தம் ; நியாயமானது . |
| தாரிணி | பூமி ; இலவமரம் . |
| தாரித்தல் | உடைத்தாதல் ; பொறுத்தல் . |
| தாரித்திரம் | காண்க : தரித்திரம் . |
| தாரித்திரியம் | காண்க : தரித்திரம் . |
| தாரிப்பு | உதவி ; மதிப்பு ; தாங்கிப்பேசுதல் ; மேம்படச்செய்தல் . |
| தாரிராட்டினம் | தார்நூல் சுற்றும் இயந்திரம் . |
| தாரின்வாழ்நன் | தார்நூலால் வாழ்பவனான நெசவுத் தொழிலாளன் . |
| தாரு | மரம் ; மரக்கிளை ; மரத்துண்டு ; காண்க : தேவதாரு . |
| தாருகம் | காண்க : தாருகாவனம் . |
| தாருகவனம் | காண்க : தாருகாவனம் . |
| தாருகவிநாசினி | தாருகனைக் கொன்ற காளி . |
| தாருகற்செற்றாள் | தாருகனைக் கொன்ற காளி . |
| தாருகாரி | தாருகனைக் கொன்ற காளி . |
| தாருகாவனம் | ஒரு தபோவனம் , முனிவர் பலர் தவம்செய்து வாழ்ந்த சிறப்புடைய காடு . |
| தாருண்ணியம் | இளம்பருவம் . |
| தாருணம் | அச்சம் . |
| தாருணி | காண்க : நத்தைச்சூரி . |
| தாருவனம் | காண்க : தாருகாவனம் . |
| தாரை | ஒழுங்கு ; வரிசை ; கோடு ; அடிச்சுவடு ; பெருமழை ; நேராக ஓடல் ; கண்மணி ; கண் ; கூர்மை ; சிறு சின்னம் ; சீலை ; நீர்வீசுங்கருவி ; மாட்டின் மலவாய்ப்பக்கம் ; நீர் ஒழுக்கு ; ஆயுதமடல் ; வயிரக்குணங்களுள் ஒன்று ; வழி ; ஆடையின் விலக்கிழை ; நீண்ட ஊதுங்குழல் ; எக்காளம் ; சக்கரப்படை ; விண்மீன் ; வாலியின் மனைவி ; வியாழன் மனைவி குதிரை நடை . |
| தாரைகவனி | கோடு உள்ள ஆடைவகை . |
| தாரைப்பட்டு | கோடுகள் அமைந்த பட்டுவகை . |
| தாரைமழுங்கல் | வயிரக்குற்றங்களுள் ஒன்று . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 561 | 562 | 563 | 564 | 565 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாரகைமாலை முதல் - தாரைமழுங்கல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒன்று, என்னும், தாருகாவனம், விண்மீன், மேகம், தாருகனைக், கொன்ற, மனைவி, காளி, வரிசை, கோடு, தரித்திரம், நாண்மீன், நீர், தரித்தல், பூமி, ஒழுங்கு, அரிதாரம், குதிரை, தாரணநட்சத்திரம், வியாழன்

