முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » தாய்ச்சீட்டு முதல் - தாரகைக்கோவை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - தாய்ச்சீட்டு முதல் - தாரகைக்கோவை வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
தாய்ச்சீட்டு | மூல ஓலை . |
தாய்ச்சீலை | கோவணம் . |
தாய்தந்தை | பெற்றோர் . |
தாய்தலைத்தென்றல் | நேராக அடிக்கும் முதல் தென்றல் . |
தாய்ப்பாட்டன் | தாயைப் பெற்ற தகப்பன் . |
தாய்மாமன் | தாயுடன் பிறந்தவனான அம்மான் . |
தாய்வழி | உறவுதுறையில் தாயின் தொடர்பு . |
தாய்வாய்க்கால் | கிளைக் கால்கள் பிரியும் தலைவாய்க்கால் . |
தாய்வேர் | ஆணிவேர் . |
தாயக்கட்டை | சூதாட்டத்தில் உருட்டும் கவறு . |
தாயகம் | அடைக்கலம் ; பிறந்த இடம் . |
தாயத்தவர் | உறவுமுறைப் பங்காளிகள் . |
தாயப்பதி | பிறந்த ஊர் ; தனக்கு உரிமையாகக் கிடைத்துள்ள வாழிடம் அல்லது ஊர் . |
தாயபந்து | உடன்பிறந்தான் . |
தாயபனுவல் | இடையிடையே இலக்கணங்கள் கலந்துவரும் இலக்கியவகை . |
தாயபாகம் | உரிமைப்பங்கு . |
தாயம் | பங்கு ; தந்தைவழிச் சுற்றம் ; கவறு ; சூதாடுகருவி ; துன்பம் ; சமயவாய்ப்பு ; கொடை ; குழந்தை விளையாட்டுவகை ; கவறு உருட்ட விழும் ஒன்று என்னும் எண் ; பாகத்திற்குரிய முன்னோர் பொருள் ; தாமதித்தல் ; மேன்மை . |
தாயம்போடுதல் | கவறு உருட்டி ஒன்று எனும் எண் போடுதல் . |
தாயமாடுதல் | கவறாடுதல் ; கட்டமாடுதல் ; காலம் தாழ்த்தல் . |
தாயவிபாகம் | உரிமைப் பொருளைப் பிரித்தல் . |
தாயாதி | ஒரு குடியில் பிறந்த உரிமைப்பங்காளி . |
தாயான் | ஒன்பது என்னும் குழூஉக்குறி . |
தாயான்புலு | தொண்ணூறு என்னும் குழூஉக்குறி . |
தாயித்து | மந்திரத்தகடு அடங்கிய அணி ; அணிவகை . |
தாயுமானவர் | திருச்சிராப்பள்ளிச் சிவபெருமான் ; ஒரு சைவப்பெரியார் . |
தாயுமானார் | திருச்சிராப்பள்ளிச் சிவபெருமான் ; ஒரு சைவப்பெரியார் . |
தாயேடு | காண்க : தாயோலை . |
தாயைக்கொல்லி | தன் தாயைக் கொலைசெய்த மாபாவி ; குலை ஈன்றதால் நசித்துப்போகிற வாழை முதலியன ; புல்லுருவி . |
தாயோலை | மூலஓலை , முதலோலை . |
தார் | பூ ; பூவரும்பு ; பூமாலை ; பூங்கொத்து ; கிண்கிணிமாலை ; சங்கிலி ; ஒழுங்கு ; படை ; கொடிப்படை ; கிளிக்கழுத்தின் கோடு ; பிடரி மயிர் ; கயிறு ; காண்க : தார்க்குச்சு ; தோற்கருவிவகை ; உபாயம் ; ஏரி உள்வாயிலுள்ள புன்செய் ; உடைமையைக் குறிக்கும் ஒரு சொல் ; வீடு ; கீல் எண்ணெய் . |
தார்க்கணித்தல் | சான்று காட்டி நிறுவுதல் ; தடுத்துச் சொல்லுதல் ; தாமதப்படுத்துதல் . |
தார்க்காட்டுதல் | போக்குக்காட்டுதல் ; தாமதப்படுத்துதல் . |
தார்க்கிகன் | தருக்கநூல் வல்லவன் . |
தார்க்கியன் | கருடன் . |
தார்க்குச்சு | நுனியில் இருப்புமுள் பதிக்கப்பட்ட மாடு ஓட்டும் கோல் . |
தார்சுக்கட்டடம் | மெத்தைவீடு . |
தார்ட்டியம் | வலிமை . |
தார்த்தராட்டிரர் | திருதராட்டிரன் பிள்ளைகளான துரியோதனன் முதலியோர் . |
தார்தாராய் | துண்டுதுண்டாக . |
தார்நிலை | அரசனைப் பகைவர் சூழ்ந்தவழி வேறிடத்திருந்த அவன் படைத்தலைவர் முதலியோர் விரைந்துவந்து உதவுதலைக் கூறும் புறத்துறை ; பகைவரின் முன்னனிப்படையைத் தடுப்பேன் என்று ஒரு வீரன் தனது அஞ்சாமையை வெளிப்படுத்தும் புறத்துறை . |
தார்ப்பாய்ச்சுதல் | மூலைக்கச்சம் கட்டுதல் . |
தார்ப்பிடம் | காண்க : மரமஞ்சள் . |
தார்ப்பூ | அரசருக்குரிய அடையாளப்பூ . |
தார்மபத்தனம் | மிளகு . |
தார்மிகன் | அறச்சிந்தனையாளன் . |
தார்யம் | தாங்கப்படுவது . |
தாரக்கம் | பத்திய உணவு . |
தாரகத்தான் | பன்றிக்கொம்பு . |
தாரகப்பிரமம் | பிரணவ வடிவமான பரப்பிரமம் . |
தாரகம் | கடப்பதற்குரிய கருவி ; ஆதாரம் ; பிரணவமந்திரம் ; விண்மீன் ; உச்சவிசை ; பத்திய உணவு . |
தாரகற்காய்ந்தாள் | தாரகாசுரனைக் கொன்ற காளி . |
தாரகற்செற்றோன் | தாரகனைக் கொன்ற முருகக்கடவுள் . |
தாரகன் | ஆதாரமானவன் ; கடப்பிப்பவன் ; முருகக்கடவுளால் கொல்லப்பட்ட சூரபதுமன் தம்பி ; காளியால் கொல்லப்பட்ட அசுரன் . |
தாரகாகணம் | விண்மீன் கூட்டம் . |
தாரகாபதி | விண்மீன்களுக்கு தலைமையான நிலா ; வியாழன் . |
தாரகாரி | தாரகனைக் கொன்ற முருகக் கடவுள் ; காளி . |
தாரகை | விண்மீன் ; கண்மணி ; பூமி . |
தாரகைக்கோவை | ஏகாவலி என்னும் அணிகலன் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 560 | 561 | 562 | 563 | 564 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்ச்சீட்டு முதல் - தாரகைக்கோவை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கவறு, என்னும், பிறந்த, காண்க, விண்மீன், கொன்ற, பத்திய, புறத்துறை, உணவு, காளி, கொல்லப்பட்ட, தாரகனைக், முதலியோர், தாயோலை, திருச்சிராப்பள்ளிச், குழூஉக்குறி, ஒன்று, சிவபெருமான், சைவப்பெரியார், தார்க்குச்சு, சொல், தாமதப்படுத்துதல்