முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » தாம்பூலதாரணம் முதல் - தாய்ச்சி வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - தாம்பூலதாரணம் முதல் - தாய்ச்சி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தாம்பூலதாரணம் | வெற்றிலைபாக்குப் போடுகை . |
| தாம்பூலம் | வெற்றிலைபாக்கு . |
| தாம்பூலம்வைத்தல் | திருமணத்திற்கு வருமாறு வெற்றிலைபாக்கு வைத்து ஒவ்வொருவரையும் அழைத்தல் ; இரகசியத்தை வெளியாக்குதல் . |
| தாம்பூலமாற்றுதல் | திருமணம் உறுதிசெய்தல் . |
| தாம்பூலவல்லி | வெற்றிலைக்கொடி . |
| தாம்பூலவாககன் | அடைப்பைக்காரன் . |
| தாம்பூலி | காண்க : தாம்பூலவல்லி . |
| தாம்பூலிகன் | வெற்றிலை வாணிகன் . |
| தாம்போகி | ஆற்றின் குறுக்கணையில் தடுப்பின்றி நீர் ஓடுவதற்குள்ள பகுதி ; ஏரியில் மிகுதியான நீர் தானே வெளிச்செல்வதற்குக் கட்டியமதகு . |
| தாமசபதார்த்தம் | தமோகுணத்தை அதிகரிக்கச் செய்யும் கள் , இறைச்சி முதலியன . |
| தாமசம் | காண்க : தமோகுணம் ; தாமதம் . |
| தாமசாத்திரம் | பகைவருடைய கண்ணும் மனமும் இருளடையச் செய்யும் அம்புவகை . |
| தாமசித்தல் | காண்க : தாமதித்தல் . |
| தாமணி | கயிறு ; மாட்டைப் பிணிக்குந் தாம்பு ; மாடு கன்றுகளின் கழுத்தில் கட்டியிருக்கும் தும்பு ; கப்பற்பாயின் பின்பக்கக் கயிறு . |
| தாமதம் | காண்க : தமோகுணம் ; தாமசாத்திரம் ; மந்தகுணம் ; காலநீட்டம் . |
| தாமதவேளை | தீயநாளின் கடைப்பகுதி . |
| தாமதித்தல் | காலந்தாழ்த்தல் ; தடைப்படுதல் ; மனமின்றி இருத்தல் . |
| தாமநிதி | ஒளியின் இருப்பிடமான சூரியன் . |
| தாமநூல் | ஆயுள்வேதம் . |
| தாமம் | பூமாலை ; கயிறு ; வடம் ; பரமபதம் ; நகரம் ; ஊர் ; மலை ; இடம் ; உடல் ; ஒழுங்கு ; பூ ; கொன்றைமரம் ; சந்தனம் ; ஒளி ; போர்க்களம் ; யானை ; புகழ் ; பிறப்பு ; பதினெட்டுக் கோவையுள்ள மாதர் இடையணி ; முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று . |
| தாமரசம் | காண்க : செந்தாமரை ; செம்பு . |
| தாமரை | தாமரைக்கொடி ; ஒரு பேரெண் ; பதுமவியூகம் ; எச்சில் தழும்பு . |
| தாமரைக்கண்ணன் | தாமரை போன்ற கண்ணுடையவனான திருமால் . |
| தாமரைக்கண்ணான் | தாமரை போன்ற கண்ணுடையவனான திருமால் . |
| தாமரைக்கொட்டை | பொகுட்டு ; மகளிர் தலையணிவகை . |
| தாமரைச்சிறகி | நீர்வாழ் பறவைவகை . |
| தாமரைநண்பன் | தாமரைக்குக் காதலனான சூரியன் . |
| தாமரைநாதன் | தாமரைக்குக் காதலனான சூரியன் . |
| தாமரைநாயகன் | தாமரைக்குக் காதலனான சூரியன் . |
| தாமரைநூல் | தாமரைத்தண்டின் நூல் . |
| தாமரைப்பாசினி | அரிதாரம் . |
| தாமரைப்பீடிகை | புத்தரது திருவடிப்பீடம் . |
| தாமரைமணி | தாமரை விதை ; தாமரை மணியாலாகிய மாலை . |
| தாமரைமுகை | தாமரைமுகை வடிவான தேர் மொட்டு . |
| தாமரையாசனன் | தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் . |
| தாமரையாசனி | திருமகள் ; அரிதாரம் . |
| தாமரையால் | திருமகள் ; அரிதாரம் . |
| தாமரையாள் | திருமகள் ; அரிதாரம் . |
| தாமரைவளையம் | தாமரைத்தண்டு . |
| தாமரைவற்றல் | வற்றலாகச் செய்த தாமரைக் கிழங்கு . |
| தாமரைவாசி | காண்க : தாமரையால்(ள்) . |
| தாமலகி | காண்க : கீழாநெல்லி . |
| தாமளை | புன்னைமரம் . |
| தாமன் | சூரியன் . |
| தாமான் | கப்பலின் பின்பக்கத்துக் கயிறு . |
| தாமிச்சிரம் | பேரிருள் ; மாயை ; ஒரு நரகவகை . |
| தாமிரக்கருணி | மேற்றிசைப் பெண்யானை . |
| தாமிரசாசனம் | நிலம் முதலியவற்றைக் கொடுத்ததைக் குறிக்கும் செப்பேடு . |
| தாமிரசிகி | செந்நிறக் கொண்டையுடைய சேவல் . |
| தாமிரப்பட்டயம் | செப்பேட்டுச் சாசனம் . |
| தாமிரப்பல்லவம் | அசோகமரம் . |
| தாமிரபீசம் | காண்க : கொள் . |
| தாமிரம் | செம்பு . |
| தாமிரிகை | குன்றிக்கொடி . |
| தாமிரை | காண்க : தாமிரம் . |
| தாமீகன் | பகட்டன் . |
| தாமை | தாம்புக்கயிறு . |
| தாமோதரன் | ஆய்ச்சியர் பிணித்த கயிற்றை இடுப்பிலுடையவன் , கண்ணன் . |
| தாய் | அன்னை , ஐவகைத் தாயருள் ஒருத்தி ; தாயாகக் கருதப்படும் அரசன் தேவி , குருவின் தேவி , அண்ணன் தேவி , மகள் கொடுத்தவள் இவர்களுள் ஒருத்தி . |
| தாய்க்கட்டுமனை | வீட்டின் நடுப்பகுதி . |
| தாய்க்கண் | தேங்காயின் மூன்று கண்களில் மேலே உள்ள கண் . |
| தாய்க்கரும்பு | விதையாக நட்ட முதற்கரும்பு . |
| தாய்க்காணி | முதல்தர நிலம் . |
| தாய்க்கால்வழி | காண்க : தாய்வழி . |
| தாய்க்கிழங்கு | மூலமாயுள்ள முதற்கிழங்கு . |
| தாய்க்கீழ்ப்பிள்ளை | எட்டிக்கன்று . |
| தாய்ச்சங்கம் | முதலில் தோன்றிய அவை . |
| தாய்ச்சி | கருவுற்றவள் ; முலைப்பால் கொடுக்குந்தாய் ; விளையாட்டில் தலைமையாள் ; விளையாட்டில் தொடவேண்டும் இடம் ; மூலம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 559 | 560 | 561 | 562 | 563 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாம்பூலதாரணம் முதல் - தாய்ச்சி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சூரியன், தாமரை, கயிறு, அரிதாரம், தாமரைக்குக், தேவி, திருமகள், காதலனான, தாமரைமுகை, நிலம், விளையாட்டில், ஒருத்தி, தாமிரம், தாமரையால், கண்ணுடையவனான, தாமசாத்திரம், தாமதம், தமோகுணம், செய்யும், தாமதித்தல், தாம்பூலவல்லி, நீர், வெற்றிலைபாக்கு, செம்பு, இடம், திருமால்

