தமிழ் - தமிழ் அகரமுதலி - தாரைவார்த்தல் முதல் - தாவணி வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
தாரைவார்த்தல் | நீர்வார்த்துக் கொடுத்தல் ; தொலைத்துவிடுதல் . |
தால் | நாக்கு ; காண்க : தாலாட்டு ; பிள்ளைத் தமிழ் உறுப்புகளுள் ஒன்று . |
தாலகி | கள் . |
தாலகேதனன் | பனை எழுதிய கொடியை உடையோன் ; பலராமன் ; வீடுமன் . |
தாலகேது | பனை எழுதிய கொடியை உடையோன் ; பலராமன் ; வீடுமன் . |
தாலப்பருவம் | பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் பாட்டுடைத் தலைவன் தலைவியரைத் தாலாட்டுதலைக் கூறும் பகுதி . |
தாலப்புல் | பனை . |
தாலபத்திரம் | பனையோலை ; காதில் அணியும் சுருளோலை . |
தாலபத்திரி | காண்க : மரமஞ்சள் . |
தாலபீசநியாயம் | பனை முந்தியதோ கொட்டை முந்தியதோ என்பதுபோல வழக்குரைக்கும் பீசாங்குர நியாயம் . |
தாலபோதம் | காண்க : ஆவிரை . |
தாலம் | பனைமரம் ; கூந்தற்பனைமரம் ; காண்க : மடல்மா ; கூந்தற்கமுகு ; அனுடநாள் ; பூமி ; நா ; தட்டம் ; உண்கலம் ; தால வடிவிலுள்ள யானைக்காது ; தேன் ; உலகம் ; மூன்று பிடிகொண்ட நீட்டலளவு . |
தாலமூலி | காண்க : நிலப்பனை . |
தாலவ்வியம் | இடையண்ணத்தில் இடைநாவின் முயற்சியால் பிறக்கும் எழுத்து . |
தாலவட்டம் | விசிறி ; யானைச்செவி ; யானை வால் ; பூமி . |
தாலவிருந்தம் | பேராலவட்டம் ; விசிறி . |
தாலாட்டு | குழந்தைகளை உறங்கச் செய்வதற்காக நாவசைத்துப் பாட்டுப்பாடுகை ; 'தாலேலோ' என்று முடியும் ஒருவகைப் பாட்டு ; தாலாட்டுவதற்கு ஏற்றதாய்ப் பாட்டுடைத் தலைவரின் சிறந்த செய்கைகளைத் தெரிவிக்கும் பல கண்ணிகளையுடைய ஒரு நூல்வகை . |
தாலாட்டுதல் | குழந்தைகளை தொட்டிலில் இட்டு உறங்கச்செய்யப் பாட்டுப்பாடுதல் . |
தாலாப்பு | குளம் . |
தாலாலம் | பழிமொழி . |
தாலி | திருமணத்தில் கணவன் மனைவிக்குக் கழுத்தில் கட்டும் அடையாள உரு ; காண்க : ஐம்படைத்தாலி ; ஆமைத்தாலி ; சிறுவர் கழுத்திலணியும் ஐம்படைத்தாலி : கீழ்காய்நெல்லி ; மட்பாத்திரம் ; பனை ; பலகறை . |
தாலிக்கட்டு | திருமணம் . |
தாலிக்கயிறு | மாங்கலியம் கோப்பதற்குரிய மஞ்சள் பூசிய சரடு . |
தாலிக்கொடி | தாலி கோப்பதற்கான பொற்சரடு . |
தாலிக்கொழுந்து | ஆமைத்தாலி ; பனையின் வெண்குருத்தாலான அணிகலன் . |
தாலிக்கோவை | தாலியுருவோடு கோப்பதற்கான பலவகை உருக்கள் . |
தாலிகட்டுதல் | திருமணம்புரிதல் . |
தாலிச்சரடு | காண்க : தாலிக்கொடி . |
தாலிப்பிச்சை | சுமங்கலியாய் ஒருத்தி வாழுமாறு அவள் கணவன் உயிரைக் காப்பாற்றுகை . |
தாலிப்பொட்டு | வட்டமாகச் செய்த தாலியுரு . |
தாலிபெருக்கிக்கட்டுகை | கலியாண காலத்தில் கட்டப்பட்ட தாலியுடன் மணிகளைக் கோக்கும் சடங்கு ; தாலியைப் பழைய நூலிலிருந்து வேறொரு சரட்டில் கோத்தல் . |
தாலிபெருகுதல் | தாலிச்சரடு அறுதல் . |
தாலிமணிவடம் | தாலியோடு மணிகள் சேர்ந்த மாங்கலியக்கொடி . |
தாலியம் | காண்க : பாதிரி . |
தாலியறுத்தல் | கணவனை இழந்து கைம்பெண்ணாதல் ; துன்பத்துக்குள்ளாதல் . |
தால¦புலாகநியாயம் | ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் வழக்குப்போல ஒன்றன் ஒருபுடைத் தன்மையிலிருந்து அதன் முழு நிலையையும் அறியும் முறை . |
தாலு | நா ; அண்ணம் . |
தாலுக்கா | மாவட்டத்தின் உட்பிரிவு . |
தாலுக்கண்ணி | காண்க : வெள்ளைக்காக்கணம் . |
தாலுகா | காண்க : தாலுக்கா . |
தாலுகை | மேனாப்பல்லக்கு . |
தாலுவுறுத்துதல் | தாலாட்டுதல் . |
தாலூரம் | சுழல்காற்று ; நீர்ச்சுழல் ; குங்குலிய வகை . |
தாவகம் | வனம் ; காட்டுத்தீ . |
தாவசி | தவமுடையவன் . |
தாவட்டம் | சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; ஒரு கல்வகை . |
தாவடம் | கழுத்தணிமாலை ; உருத்திராக்க மாலை ; பூணூலை மாலையாகத் தரிக்குமுறை ; இருப்பிடம் . |
தாவடி | பயணம் ; போர் ; தாண்டுகால் . |
தாவடித்தோணி | கரைவரையில் சென்று பகைக்கப்பலை அழிக்கும் தோணி . |
தாவடிபோதல் | படையெடுத்தல் . |
தாவடியிடுதல் | தாவி அடியிட்டு அளத்தல் . |
தாவணி | மாட்டைப் பிணிக்குந் தாம்பு ; மாடுகளைக் கூட்டமாகக் கட்டுமிடம் ; சிறு பெண்களின் மேலாடை ; குதிரையின் மேலாடை ; காண்க : கண்டங்கத்திரி . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 562 | 563 | 564 | 565 | 566 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாரைவார்த்தல் முதல் - தாவணி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஐம்படைத்தாலி, கணவன், தாலாட்டுதல், ஆமைத்தாலி, தாலி, தாலிக்கொடி, மேலாடை, தாலுக்கா, தாலிச்சரடு, கோப்பதற்கான, குழந்தைகளை, விசிறி, கொடியை, எழுதிய, ஒன்று, தாலாட்டு, உடையோன், பலராமன், முந்தியதோ, பாட்டுடைத், வீடுமன், பூமி